அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2011
00:00

*எல்.எஸ்.பிச்சைமணி, பல்லடம்: எனக்கு ஒரே வாரிசு, என் மகன். அவனுக்கு, நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைக்க வேண்டும்?
ஒரு காசு சேர்த்து வைக்காதீர்கள். அதற்கு பதில், நல்லா படிக்க வையுங்கள். நல்ல பழக்க, வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். பண்புள்ளவனாக, அனைவரையும் நேசிக்கும் குணம் கொண்டவனாக்குங்கள்.
***
*எஸ்.பவித்ரா, திருத்தணி: உங்களுக்கு ஒரு காதல் கடிதம் எழுதி வைத்துள்ளேன். அதை போஸ்ட் பண்ணலாமா, வேண்டாமா என இரு மனதுடன் இருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கள்... என்ன செய்வதென்று!
அனுப்பி வையுங்களேன்... என் எழுத்தை காதலித்து எழுதப்பட்ட கடிதம் தானே அது!
***

*ஆர்.கோபி, காஞ்சிபுரம்: சென்னையில் விபசாரம் அதிகரித்து வருகிறதே... தடுக்க முடியாதா?
முடியாது! காலங்காலமாக நடந்து வரும் இத்தொழிலை மும்பை, கொல்கத்தா நகரங்களில் அங்கீகாரம் அளித்திருப்பது போல அங்கீகரித்து விடலாம்.
***

* என்.அன்பழகன், திண்டிவனம்: எவ்வளவு தான் நெருங்கிப் பழகினாலும் உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுகின்றனரே... அது ஏன்?
சாதாரண மனித இயல்பு தான் இது! எல்லாரும் மனம் விட்டு பேசுவர் என எண்ணக் கூடாது! உள்ளொன்று வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு, எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது!
***

*ஜெ.கன்னியப்பன், விருதுநகர்: எதை அடக்கா விட்டாலும் நாக்கை காக்க வேண்டும் என்கின்றனரே... சில சமயங்களில் அதட்டல், உருட்டல், மிரட்டல் மூலமாகத் தானே காரியத்தை சாதிக்க முடிகிறது... அப்படி இருக்க, நாவடக்கம் தேவை என்பது அடிபட்டு போகிறதே... விளக்கமாய் பதில் கூறவும்...
நன்மையைச் செய்யும் போது, அதற்கு குந்தகம் விளைவிப்பவர்களை அதட்டி, உருட்டி, மிரட்டுவதற்கும், நாவடக்கத்திற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை!
***

*எம்.ராஜலட்சுமி, மீஞ்சூர்: பயிற்சி என்பதை, பயிற்ச்சி என எழுதும் 12ம் வகுப்பு மாணவனின் குறைக்கு என்ன காரணம்?
இது பரவாயில்லையே... பயிர்சி என்றும் எழுதும் பி.ஏ., படித்த இளைஞர்கள் இருக்கின்றனரே... (ஆசிரியர்கள் கோபிக்கக் கூடாது...) இந்த தவறுகள் களையப்படாமல் இருப்பதற்கு முக்கால் காரணம் ஆசிரியர் என்று சொல்வேன். மனது வைத்தால், "ண - ன - ழ - ள - ற - ர' - இது போன்ற குழப்பப் பிரச்னைகளை சுலபமான முறையில் விளக்கி தீர்த்து வைக்க முடியும்!
***

*ஜி.நீலாவதி, கோவை: எப்போதும் துன்பத்தையே சொல்லக் கூடிய ராசிபலன், அபசகுணத்தையே கூறும் பஞ்சாங்கம் - இவற்றை என்ன செய்வது?
ஏதோ ஒரு வித கஷ்டத்தில், துன்பத்தில் இருப்பதால் தானே மேற்கண்டவற்றை பார்க்கிறீர்கள்... அதைப் பார்ப்பதால் உங்களது மனச்சுமை அதிகரிக்கத் தானே செய்கிறது... பிறகு, ஏன் காசு கொடுத்து சூனியம் வைத்துக் கொள்கிறீர்கள்? அந்தக் கண்றாவிகளை, உங்கள் துன்பம் தீரும் வரை பார்க்கவே பார்க்காதீர்கள்... பாதி கஷ்டம் தீரும். ***

**சி.பழனிச்சாமி, பழனி: எந்த நிலையிலும் மனிதன் இழக்கக் கூடாதது எதை?
நிதானத்தை! பதறினால் சிதறிப் போகும் காரியம்... எந்த சூழ்நிலையிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும்... அவசரத்தில், ஆத்திரத்தில், ஆசையில் நிதானத்தை இழந்தால், நஷ்டங்களையும், அவமானங்களையும், கஷ்டங்களையும், இழப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜ.thanuja - chennai,இந்தியா
01-பிப்-201119:08:48 IST Report Abuse
ஜ.thanuja அன்புள்ள அந்துமணி நம்பிக்கை துரோகம் செய்பவர்களை மறக்கவேண்டுமா?மன்னிக்கவேண்டுமா?அவசியம் பதில் தெரிவியுங்கள் சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.