உயிரே உனக்காக... - பகுதி (8) - தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2011
00:00

இதுவரை:
நரேன் - மதுரிமா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சாண்டியாகோ நகரில் நடைபெற்றது. இனி, தன் வாழ்வில், தனக்கும், மதுரிமாவுக்கும் இடையே வைத்தீஸ்வரனோ, விமான பணிப்பெண் கவிதாவோ எந்தவித இடைஞ்சலையும் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தான் நரேன். லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்ப, இருவரும் தயாராக இருந்தபோது, மதுரிமாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது —

சைகை மூலம் நரேன் என்னவென்று வினவியதை, மதுரிமா கவனிக்கவில்லை.
மகிழ்ச்சி புதுப்புனலாக பாய்ந்தோட, " "இஸ் இட்... இஸ் இட்...'' என்று, வினவிக் கொண்டும், ஆமோதித்துக் கொண்டும் இருந்தாள்.
நரேனுக்கு சற்று எரிச்சலாய் இருந்தது. அடக்கிக் கொண்டான்.
ஒரு வழியாக, மொபைல்போன் உரையாடலை முடித்து, அவன் பக்கம் திரும்பினாள்.
""நரேன்... என் வாழ்நாள் கனவுகளில் ஒண்ணு நிறைவேறப் போகுது... நம் திருமணத்தின் விளைவான சுப சகுனம்...'' என்று, மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனாள்...
""ப்ளீஸ் மது... புதிர் போடாமல் சொல்லு.''
""ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடைபெறும் இந்தியக் கலைவிழாவில் பிரதம நிகழ்ச்சியில் நடனமாட என்னை அழைச்சிருக்காங்க.''
""அப்படியா!'' என்று மட்டும் நரேனால் கேட்க முடிந்தது.
""ஐஞ்சு வருஷமா இதுக்காக முயற்சி பண்றோம். எப்படியோ தட்டிப் போயிடும். இந்த வருஷம் அதிர்ஷ்டம் நம்ப பக்கம் வந்திருக்கு.''
மதுரிமாவின் ஒவ்வொரு சொல்லிலும், துள்ளலும், மகிழ்ச்சியும் போட்டி போட்டன.
அவளே வலிய, நரேன் கைகளைப் பிடித்து குலுக்கினாள்.
பொதுவாக, இதுபோன்ற விழாக்கள் பற்றி, பத்திரிகையில் படிப்பது, "டிவி'யில் பார்ப்பதோடு சரி. அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்ட மாட்டான்.
நரேனின் விருப்பமும், முன்னுரிமையும் வினோதமாக இருக்கும்.
""அப்படீன்னா, சிட்னிக்கு எப்போ போகப் போறே...''
""நரேன்... விளையாடுறீயா... நீயும் தான் வர...''
""நானா? ஓ நோ... லீவு கிடைக்கும்ன்னு தோணல... ஓ.கே., எப்ப போகணும்?'' ஆர்வமுடன் விசாரித்தான்.
""அடுத்த வாரம்...''
""இவ்வளவு குறைஞ்ச பட்ச நேரத்துல எப்படி?'' நரேன் முடிக்கவில்லை... இடைவெட்டினாள் மதுரிமா.
""என் நடனத்தில் ஆர்வமிக்க ஒரு அலுவலர், சிரமப்பட்டு இந்த வாய்ப்பை வாங்கித் தந்திருக்கார். எப்படியும் போயே ஆகணும்.''
குழப்பமான எண்ணங்களுடன் அங்கிருந்து நகர்வதற்கு யத்தனித்தான் நரேன்.
""என்ன நரேன், பதிலே சொல்ல மாட்டேங்கறே...''
""பதில் சொல்ல என்ன இருக்கு மது... போகணும்ன்னு முடிவு எடுத் துட்டே... மதும்மா... நான் ஒண்ணு கேட்கலாமா?''
""ஓ.கே.,'' என்று தலையாட்டினாள்.
அவளே தொடர்ந்தாள், ""என்ன கேட்கப் போறீங்களோ... அதை ஒண்ணுக்கு பத்தா திருப்பித் தர நான் தயார்.''
முத்தம் கொடுக்க, ஏற்றுக் கொள்ள தயார் நிலையில் இருந்தாள்.
""மதும்மா, சீரியசா கேட்கறேன்... இந்த பயணம் வேண்டாமே.''
""லாஸ் ஏஞ்சல்சுக்கு போக வேணாமா?'' கிண்டலடித்தாள் மதுரிமா.
""அங்கே போறோம்... சிட்னிக்கு இப்ப வேண்டாம்... ப்ளீஸ்,'' என்று கெஞ்சினான் நரேன்.
அலுவலகத்தில் தன் நிலை என்ன? வைத்தீஸ்வரன் என்ன செய்யப் போகிறானோ...
பிரச்னைகளுக்கு நடுவே, இன்னும் ஒரு வாரம் வெளியூர் போவதற்கு நரேன் தயங்கினான். அதை வெளிப்படையாக மதுரிமாவிடம் சொல்ல முடியாத இக்கட்டில், அவன் முகமே வாடிப்போய் விட்டது. அவனை அப்போது தான் புதிதாகப் பார்ப்பதைப் போல உணர்ந்தாள் மதுரிமா.
ஒரு வழியாக, லாஸ் ஏஞ்சல்சுக்கு திரும்பியதும், தன் வீட்டுக்கு போவதற்கு முயன்றான் நரேன். மதுரிமா அவனை விடவில்லை.
""வந்ததும், வராததுமா ஏன் அவசரப்படறீங்க?''
""ஆபிஸ் போக வேணாமா?''
""ஏன்... இங்கேயிருந்து போங்க?''
""அது சரிப்பட்டு வருமா?'' என்று இழுத்தான்.
""இது யார் வீடு நரேன்... உங்க வீடு தானே!'' அன்போடு சொல்லி, அவனை அணைத்தாள்.
சற்றே அந்த மோகத்தில் கட்டுண்டவன், அவளை இன்னும் கொஞ்சம் இறுக்கி, ""மீதி இன்ஸ்டால்மென்ட்டை மாலையில் வைத்துக் கொள்ளலாம் டியர்... இப்போதைக்கு, இது மாலையில் நீ தரப்போவதற்கு அட்வான்ஸ்,'' என்றான்.
""குறும்பு!'' என்று சொல்லி, அவனிடமிருந்து மெதுவாக தன்னை விலக்கிக் கொண்டாள்.
ரொம்பவும் சுறுசுறுப்பாக, ""பை...'' சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
ஆபிஸ் போனவுடன், மதுரிமாவை முற்றிலுமாக மறந்து போனான்.
ஆபிஸ் வருவதற்கு முன்பே முடிவு செய்து கொண்டான்... வைத்தீஸ்வரன் சொன்ன பிரச்னை என்ன? அதில், தன் பங்கு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து விடுபட்டால் தான், புதுமண வாழ்க்கை இனிக்கும்; இல்லாவிட்டால், தினந்தோறும் தொல்லை தான். அதனால் தான், சிட்னி போவதைக் கூட தவிர்க்கப் பார்த்தான். இல்லாவிட்டால், புதுக்கருக்கு கலையாத மனைவியோடு, கங்காரு பிரதேசத்துக்கு பயணம் செய்ய கசக்குமா என்ன?
கம்ப்யூட்டரை ஆன் செய்தான்.
மொபைல்போன் சிநேகிதத்துடன் சிணுங்கியது.
பார்த்தால் பரவசப்படும் முகம்.
மதுரிமா...
""ஏய் ஏஞ்சல்... என்ன?''
""நாளை மறுதினம் புறப்படறோம்.''
கம்ப்ளீட் டிராவல் பிளான் வந்துடுச்சு.
""இம்பாசிபிள்...'' சற்றே குரலை உயர்த்தினான்.
அதை, அவள் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
""சிட்னி, பெர்த், மெல்பர்ன்... மூணு இடத்திலும் ÷ஷா இருக்கு...''
""ப்ளீஸ்மா... என்னால வரமுடியும்ன்னு தோணலே.''
""வர்றீங்க...'' அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
""அது மட்டுமல்ல, அங்கிருந்து நாம், நியூசிலாந்து, பிஜி தீவுக்கு ஹனிமூன் போறோம். சாயங்காலம் சீக்கிரம் வந்துடுங்க... நானும், நீங்க வர்றதுக்குள்ள ரிகர்சலை முடிச்சுடறேன்.''
மொபைல்போன் இணைப்பை துண்டித்தாள்.
உண்மையை மதுரிமாவிடம் சொல்லி விடலாமா?
தயங்கினான் நரேன்.
என்னவென்று சொல்வது? அதுவே குழப்பமாக இருந்தது.
"எல்லா சமயத்திலும் உண்மையைச் சொல்லி, அதனால் பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது...' என்று தீர்மானித்துக் கொண்டவன், முதலில், சி.இ.ஓ.,வைப் பார்க்கலாம் என்று கருதி, கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு,
அவருடைய அறையை நோக்கி நடந்தான்.
அவன் நடையில், இனம் தெரியாத தளர்வு தெரிந்தது. அது, உடல் தளர்வா, மனத் தளர்வா என்று வேறுபடுத்திக் கொள்ள இயலவில்லை.
ஏழாவது மாடிக்கு விரைந்தான். வருகையைத் தெரிவித்து போன் செய்தான்.
""வா... வா!'' என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினான் வைத்தீஸ்வரன். உட்கார்ந்ததும், ""என்ன... புது மாப்பிள்ளை களைப்பா இருக்கீங்க... ஆமாமாம்... புது மோகம், புது வேகம், புது சுகம்!''
விவஸ்தையில்லாமல் அடுக்கிக் கொண்டு போனார். அதை செவியில் ஏற்றுக் கொண்டதைப் போல காட்டிக் கொள்ளாமல், ""சார், நம்ப பிரச்னை என்னன்னு பேசலாமா? நாளை மறுநாள் நான் மறுபடியும் வெளிநாடு போகணும்.''
சட்டென்று இடைவெட்டி கேட்டார் வைத்தீஸ்வரன், ""எங்கே... இந்தியாவுக்கா?''
""இல்லே... ஆஸ்திரேலியாவுக்கு.''
""ஹனிமூனா?'' என்று சட்டென்று கேட்டார் வைத்தீஸ்வரன்.
அது உன் பிரச்னை அல்ல என்று சொல்ல நினைத்தவன், அடக்கிக் கொண்டு, ""இல்லே... மதுரிமா நடன நிகழ்ச்சிக்கு போகணும். நானும் கூட வரணும்ன்னு அவ விரும்புறா...''
""எதுக்கு? தாளம் தட்டப் போறீயா, மிருதங்கம் வாசிக்கப் போறீயா, டான்ஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்?''
ரொம்பவும் சீரியசாகப் பேசினார்.
பதிலே சொல்லவில்லை நரேன்.
""என்ன நரேன்... டான்ஸ் பெண்களை மணந்தவர்கள் படும்பாடு எனக்குத் தெரியும்...''
"ஷட் அப்...' என்று கத்த நினைத்தான்; ஆனால், வாய் திறக்கவில்லை. அதை அனுகூலமாக வைத்துக் கொண்டு, மேற்கொண்டு வார்த்தைகளை உதிர்த்தார் வைத்தீஸ்வரன்...
""நீ மேடையில் இருக்க முடியாது. ஆடியன்சில் இருப்பே, எவனாவது வக்கிரம் பிடிச்சவன், உன் மனைவியோட அங்கங்களை விமர்சனம் பண்ணுவான்... அதை கேட்டு நீ கொதிப்படைவே, கைகலப்பு நடக்கும்... இதெல்லாம் தேவையா?''
வைத்தீஸ்வரனின் வக்கிர உணர்வுகளை நினைத்து எரிச்சலடைந்த நரேன், நாற்காலியை விட்டு எழுந்தான்.
""என்ன... உள்ளதைச் சொன்னா, ஏன் கோபப்படறே? நீயே அனுபவிச்சா தான் புரியும்.''
ஏதும் பேசாமல், விசுக்கென்று அங்கிருந்து அகன்றான் நரேன்.
வைத்தீஸ்வரனும் ஏதும் பேசவில்லை.
நெற்றியை விரல்களால் தேய்த்துக் கொண்டு இருக்கைக்கு திரும்பியவன், இயந்திரம் போல வேலை செய்ய ஆரம்பித்தான்.
காபி இல்லை, சாப்பாடு இல்லை, மொபைல்போனை தொடவில்லை. மாலை மயங்கியதும், ஒரு தீர்மான மனதுடன் வீட்டுக்குத் திரும்பினான்.
வீட்டில் அவனுக்காக மதுரிமா காத்திருப்பாள் என்று நினைத்தான்.
"ஏன் போன் செய்யவில்லை?' என்று செல்லமாக சிணுங்குவாள்... "சாப்பிட்டீங்களா, முகம் ஏன் சுண்டியிருக்கு?' என்று ஆதூரத்துடன் கேட்பாள் என்றெல்லாம் நினைத்தான். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
வெளியே போயிருந்தாள் மதுரிமா.
நரேனை கவனிக்கக் கூட ஆள் யாருமில்லை.
தனியே விடப்பட்ட நரேனின் சிந்தனை, தறிக்கெட்டு ஓடியது.
"வைத்தீஸ்வரன் சொல்வதைப் போல, இனிமே மதுரிமாவைப் பார்க்கக்கூட நேரம் கிடைக்காதோ?' என்று யோசித்துக் கொண்டே சமையலறைக்குப் போனான். அவனே டீ தயாரித்து, ஹாலுக்கு வந்தான். பிஸ்கட்டும், டீயும், நல்ல காம்பினேஷன். புது சுறுசுறுப்பு வந்தது.
"டிவி'யை ஆன் செய்தான். அவனுக்கு ரொம்பவும் பிடித்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் மறந்து, தொலைக் காட்சியில் எவ்வளவு நேரம் ஐக்கியமாயிருந்தான் என்று தெரியவில்லை.
மதுரிமாவும், பெற்றோரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண் டிருந்தனர்.
""ஹாய் நரேன்... எப்ப வந்தீங்க? போன் செஞ்சி ருக்கலாமே...'' அருகே வந்து செல்லம் கொஞ்சினாள்.
"எங்கே போயிட்டு வரே?' என்று கேட்க நினைத்தான்; ஆனால், கேட்கவில்லை.
அவளே சொன்னாள்...
""ஆஸ்திரேலியா டூருக்கு வேணுங்கற சாமான்களை வாங்க நேரமே கிடையாதே... அதான் ஆளுக்கு ஒரு இடமா பறந்தோம்... அப்பாடா... ஒரு வழியா வாங்கி முடிச்சோம். ஏன் ஒரு மாதிரி இருக்கே... எனி ப்ராப்ளம் நரேன்...''
மிகுந்த கரிசனத்துடன் விசாரித்தாள்.
""மதும்மா... எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்னை இருக்கு... அதனால, உன் கூட வர முடியாது போல தோணுது,'' என்றான்.
"ஓ நோ... டோண்ட் சே தீஸ்...' என்று சொல்வாள்ன்னு எதிர்பார்த்தான்.
அவள் அப்படி சொல்லவில்லை. அவளே அடுத்த கட்டத்துக்கு வந்தாள்.
""என்னோட டூர் முடிஞ்சவுடனே, என் கூட வந்து சேர்ந்துக்கங்க... அப்படியே நியூசிலாந்தும், பிஜி தீவும் போகலாம்...''
அவன் சற்றே ஏமாந்து போனான்.
"எப்படியும் நீங்க வந்துதான் ஆகணும். ஆபிஸ் வேலையை அப்புறம் பார்த்துக்கலாம்...'ன்னு அடம் பிடிப்பாள் என்று எதிர்பார்த்தான்.
சில நொடிகள் யோசித்து பின், நரேனை அம்போ வென்று விட்டுவிட்டு, தான் கடை வீதியில் வாங்கி வந்த பொருட்களை சரி பார்க்கத் தொடங்கினாள்.
அவளும், அவனிடம் எதையும் சொல்லவில்லை; இவனும் கேட்கவில்லை.
வைத்தீஸ்வரன் சொன்னது போலவே எல்லாம் நடக்கும் போல தோன்றியது.
"உன்னை மதிப்பரா என்பதே எனக்கு சந்தேகம்...' என்று வைத்தீஸ்வரன் சொன்னது, மனதில் நெருடியது.
அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவளோடு ஐக்கியமானான்.
""டியர்... உன் டிராவல் பிளான் என்ன?''
""ரெண்டு நாள்ல கிளம்பணும்... டிராவல் ஏஜென்ட், டிக்கட் ரெடி பண்ணிட்டு, நாளைக்கு போன் செய்வார்.''
""ஓ.கே., நாளைக்கு நம்ம வீட்டுக்கு போறோம்,'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து அகன்றான்.
கொஞ்ச நேரத்தில், டைனிங் டேபிளில் உட்கார்ந்தனர். அவசர அவசரமாக சாப்பிட்டு, படுக்கைக்குப் சென்றனர். படுத்ததும் உறங்கிப் போயினர்.
விடிந்தது —
காலை உணவுக்கு முன்பே, ""வீட்டுக்குப் போகலாமா?'' என்று நச்சரிக்கத் தொடங்கினான். அங்கிருப்பது அவனுக்கு பிடிக்காமல் போனது ஏன் என்ற காரணம் புரியவில்லை.
""வா... வா...'' என்று அவளை கைபிடித்து அழைத்தான். அவள் அணிந்திருந்த வளையல்கள் எல்லாம் குலுங்கின. அவள் சிவந்த விரல்கள், அந்த அதிகாலையிலும் கிளர்ச்சியூட்டின. "நம் வீட்டுக்குப் போனதும்...' என்று மனதில்
நினைக்கத் தொடங்கினான்.
""மாலையே திரும்பிடுங்க...'' என்று சொல்லி, அனுப்பி வைத்தார் மாமனார்.
உயர்தரமான வாடகை கார், அவர்களை சுமந்து கொண்டு கிளம்பியது.
""இன்னும் எவ்வளவு நேரம் டிராவல் பண்ணணும் நரேன்?''
""நோ மோர் டிராவலிங்... கிட்டத்தட்ட வீட்டுக்கு வந்துட்டோம்...''
அவர்கள் பயணித்த கார், இடதுபுறமாக ஒரு வளைவில் திரும்பி, சில நிமிடத்திற்கு மெதுவாக ஓடி, வீட்டிற்குள் நுழைந்து, போர்டிகோவில் வந்து நின்றது.
அவர்கள் இருவரும், காரை விட்டு இறங்கினர்.
டிரைவரிடம், கார் டிக்கியில் இருக்கும் அவர்களின் லக்கேஜை எடுத்து வரச் சொல்லிவிட்டு, ""மது... இதுதான் நம்ம வீடு... பிடிச்சிருக்கா?'' என்று, புன்னகைத்தபடி நரேன் கேட்க, ""பியூட்டிபுல்... ஐ லைக் இட்...'' என்று மதுரிமா புன்னகைக்க, இருவரும் கதவை நோக்கி நடந்தனர். நரேன் பஸ்சரை, அழுத்த சில வினாடிகளுக்குப் பின் கதவு திறக்கப்பட்டது.
""வெல்கம் மிசஸ் மது - நரேன். ஐ விஷ் யூ எ ஹாப்பி மேரீட் லைப்...'' அழகான ஆங்கிலத்தில், மதுரிமாவை வரவேற்றபடி, வாசலை மறித்துக் கொண்டு, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு நீக்ரோ பெண்மணி, மதுரிமாவுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்றாள்.
"யார் இவள்?' நெற்றியை சுருங்க தனக்குள் யோசித்தாள் மதுரிமா.
""மது... மறுபடியும் உன்னை கன்ப்யூஸ் பண்ணிக்காதே. இது மிசஸ் ஜெசிகா. இந்த வீட்டில் உனக்கு உதவியாக இருக்கப் போகிறவள். குக்கிங், வாஷிங், ஹவுஸ் கீப்பிங் என எல்லாவற்றையும் ஜெசிகா பாத்துக்குவாங்க... நம்ம ஊர் பாஷைல சொல்லணும்னா... வேலைக்காரி... ஆனா, நான் இவங்கள அப்படி நினைக்கல. ரியலி எ நைஸ் லேடி...''
ஜெசிகாவை உற்றுப் பார்த்தாள் மதுரிமா. புன்சிரிப்புடன் ஜெசிகாவின் முகத்தில் பருத்து தடித்திருந்த உதடுகளைப் போலவே, உடலின் மற்ற பாகங்களும், அளவில் சற்றே பெரிது. கறுப்பும் ஒரு அழகே எனும் விதமாக அவள் நின்றிருந்தாள்.
""ஜெசிகா... எனிதிங் ஸ்பெஷல் இன் மை ஆப்சென்ஸ்?''
""நத்திங் சார்...''
அவனது கேள்விக்கு, ரத்தினச் சுருக்கமாக பதில் சொன்னாள் ஜெசிகா.
""ஓ.கே., நீ, மதுவுக்கு நம்ம வீட்டைச் சுற்றிக் காட்டு...'' என ஜெசிகாவிற்கு ஆங்கிலத்தில் உத்தரவிட்டு, அவனது அறைக்குள் சென்றான் நரேன்.
""சார்... குடிக்க ஏதாச்சும்...''
""ம்... சூடா ஒரு டீ... மதுவுக்கு என்ன வேணும்ன்னு கேட்டுக்க...''
""ப்ளீஸ் கம் மிசஸ் நரேன்...''
ஜெசிகாவின் பருத்த பிருஷ்டங்கள் தாறுமாறாக அசைவதைப் பார்த்தபடியே, அவளைத் தொடர்ந்தாள் மதுரிமா.
நரேன் அவனது அறையின், "ஏசி'யை ஆன் செய்துவிட்டு, அவனது கம்ப்யூட்டர் முன்பாக வந்து அமர்ந்தான். கம்ப்யூட்டரில், அவனது, "இ-மெயில்' டாட் காமை திறந்து பார்த்தபோது, நரேன் வேலை பார்க்கும் நிறுவனத்தில், அவனுக்கு ஒரு, மெயில் செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
""மிகவும் அவசரம். இதைப் பார்த்தவுடன் தொடர்பு கொள்ளவும்...''
செய்தியை அனுப்பி இருந்தவர், அவனது சி.இ.ஓ.,
— தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குட்டி - மதுரை,இந்தியா
31-ஜன-201112:33:48 IST Report Abuse
குட்டி தினமலர் கதை ஆசீரியர் தீரு நடராஜ் அவர்களுக்கு உங்கள் பிரியமுள்ள வாசகன் குட்டி. உங்கள் கதை yanaku மிகவும் பிடிக்கும் . தினமலர் வாரமலர் உங்களுடைய கதை வாரம் தவறாம நான் படிபியன்.உன்கள பார்க்கணும்னு verumuren yen மொபைல் no 9597710296 இந்த நம்பருக்கு முடிந்த கால் பண்ணுங்க இப்படிக்கு உங்கள் பிரியமுள்ள் வாசகன் குட்டி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.