திண்ணை - நடுத்தெரு நாராயணன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2011
00:00

குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் கழித்தோம் என்பதை விட, அதை எப்படிக் கழித்தோம் என்பதே முக்கியம். ஒருவர், தான் ஒரு உதாரணமாக இருப்பதன் மூலம் கற்பிக்கலாம். குழந்தைகள் எதையும் கூர்ந்து கவனிக்க கூடியவர்கள். ஏதாவது ஒன்று பொய்யானது அல்லது நடிக்கப்படுவது என்றால், அதை உடனே கண்டுபிடித்து விடுவர். அவர்கள், உன்னை நம்பி மகிழ்கின்றனர் என்றால், மிக இளம் வயதிலேயே உங்களுடன் ஒத்துழைப்பர்.
என்னுடைய மூத்த மகன் ராஜிவ் குழந்தையாக இருந்தபோது, எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருப்பான். எங்களுக்கு மிகவும் பழக்கமான அலகாபாத்தை விட்டுப் போகும் சமயத்திலேயே, ஒரு தம்பிப் பாப்பா (சஞ்சய்) பிறந்ததும், வேறு சில மாற்றங் களும், தற்காலிகமாக அவனைப் பாதித்தது. நான் உடல் நலமின்றி இருந்தேன். அவனுடைய ரகளைகள் அதிக எரிச்சலையூட்டின. திட்டு வதால் அது மேலும் மோசமாகியது. எனவே, நான் அறிவுப்பூர்வமாக முயன்றேன். நான் அதிகமாக அவனை நேசித்தாலும், அவனுடைய கூச்சல் என் அமைதியைக் கலைக்கிறது என்றேன். "நான் என்ன செய்யட்டும். நான் அடம் பண்ணவும், அடிக்கவும் விரும்பவில்லை. அது தானாக வருகிறது...' என்றான். குழந்தைகளின் விருப்பப்படி விட்டுவிடுவது உண்மையான அன்பன்று. தேவைப்படும் போது கற்பிப்பதும், கட்டுப்பாட்டை வளர்ப்பதும்தான் உண்மையான அன்பு. ராஜிவ் பனிரெண்டு வயதிற்குக் குறைவாக இருந்தபோது, ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை மருத்துவர், "அது ஒன்றும் துன்பம் தராது...' என்று கூறச் சொன்னார். நான், இது குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு ஓர் இழுக்கு என்று கருதி, முதலில் அதிக வலியும், தொந்தரவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் இருக்கும் என்று விளக்கினேன். அவனுடைய துன்பத்தை நான் ஏற்றுக்கொள்ள இயன்றிருந்தால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றிருப் பேன். ஆனால், இது முடிய õததால், அவன் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றேன். அழுவதும், புகார் செய்வதும் தலைவலியைத்தான் உண்டாக்கும். ராஜிவ் புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டான். "வயதானவர்களில் கூட இவனைப்
போல் ஒரு நல்ல நோயாளி எனக்கு இருந்ததில்லை...' என்றார் மருத்துவர்.
— இந்திரா காந்தி தன், "ரிமம்பர்டு மூமெண்ட்ஸ்' என்ற சுயசரிதை நூலிலிருந்து...
களைப்பை நீக்கி சுறுசுறுப்பைக் கொடுக்கும் ஏழைகளின் பானம், தேனீர். உலகச் சந்தையில் இந்தியத் தேயிலைக்கு நல்ல கிராக்கி.ஐயாயிரம் வருடங்களாக சீனர் கள், தேனீர் குடித்து வந்தாலும், நம் நாட்டில் அதற்கு முன்பே தேயிலை இருந்துள்ளது. புத்த ஜாதகக் கதைகளில் தேயிலை பற்றிய குறிப்பு கள் வருகின்றன. ஆங்கிலேயர்களின் தேசிய பானம் இது. "டீ' என்பதற்கு சீன மொழியில், "சா' என்று பெயர். அதுவே, நம்மிடையே, "சாய்' என்று வழங்கலாயிற்று. தேயிலைச் செடியின் நுனி, அதாவது, இரண்டு இலைகளுடன் கூடிய கடைசிக் கொழுந்துதான் பானத்துக்குக் பயன்படுகிறது. நல்ல தேயிலை, அது பயிரிடப்படும் பூமியைப் பொறுத்திருக்கிறது. சீனாவில் ÷ தயிலைச் செடிகளிடையே மல்லிகைச் செடிகளையும் சேர்த்துப் பயிரிடுகின்றனர். இதனால், சீனத்துத் தேயிலையில் மல்லிகையின் மணம் வீசும்.ஜப்பானியர்கள் தேனீர் அருந்துவதை ஒரு கலையாக, ஒரு சடங்கு போலச் செய்கின்றனர். விருந்தாளிகளை அழைத்து நன்கு அலங்கரிக் கப்பட்ட அறையின் நடுவே மரியாதையும், அன்பும் கலந்த உபசரிப்போடு சின்னஞ்சிறிய தேனீர் கோப்பைகளில், விசேஷமாகத் தயாரித்த பானத்தை ஊற்றிக் கொடுத்து, அவர்கள் எதிரே தாங்களும் மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் தேனீர் அருந்துவர். உலகத் தேயிலையின் தேவையை சமாளிக்க புதிய பிரதேசங்களிலெல்லாம் இந்தச் செடியைப் பயிரிட ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். ***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.