இதப்படிங்க முதல்ல ...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2011
00:00

இசை ஆல்பம் தயாரிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
உலக அளவில் ஒரு இசை ஆல்பம் வெளியிட, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முகாமிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஆல்பத்தில், அவருக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற, "ஜெய்ஹோ' என்ற பாடலும் அடங்கும். அப்படத்தில் சுக்வந்தர்சிங் பாடிய இப்பாடலை, ஆல்பத்தில் பிரபல ஹாலிவுட் பாடகி நிகோல் ஷெர்சிங்கர் பாடுகிறார். — சினிமா பொன்னையா.

ஜாக்கெட் அணியாத தன்ஷிகா !
வசந்தபாலன் இயக்கிவரும், அரவாண் படத்தில் ஜாக்கெட் அணியாத கிராமத்து பெண் வேடத்தில் நடித்து வரும் தன்ஷிகா, "இனி, நான் நடிக்கும் எந் தப் படமாக இருந்தாலும், கதையில் என் வேடத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன். அந்த அளவுக்கு, அரவாண் படம் என்னை உசரத்துக்கு கொண்டு போகிற படமாக அமைந்துள்ளது. எனக்கு ஹீரோக்களின் படங்களை விட, நல்ல டைரக்டர்களின் படமே முக்கியம்...' என்றும் சொல்கிறார். படைக்காமல் படைத்தானாம்; காடு மேடு எல்லாம் இழுத்து அடித்தானாம்! — எலீசா.

அசினுக்கு ஷாக் கொடுத்த இலியானா !
அசினைத் தொடர்ந்து, பாலிவுட்டுக்கு சென்ற த்ரிஷா, ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு இந்தி சினிமா ஆசை குறைந்து விட்டது. ஆனால், அடுத்தபடியாக, ப்ரியாமணி, ஜெனிலியா, அனுஷ்கா, இலியானா போன்றோர் இந்திப் படங்களைக் கைப்பற்ற அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இவர்களில், இலியானா, அசின் நடிக்கயிருந்த ஒரு படத்தையே கைப்பற்றி, அவருக்கு பலத்த, "ஷாக்' கொடுத்துள்ளார். நீயும், நானும் அடி, எதிரும், புதிரும் அடி! — எலீசா.

தனுஷ் விருந்தளிப்பு !
தான் சினிமாவில் நடிகனாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமீபத்தில் தன் வளர்ச்சிக்கு காரணமான சில முக்கியஸ்தர்களுக்கு விருந்தளித்து, உபசரித்திருக்கிறார் தனுஷ். குறிப்பாக, தன்னை வைத்து வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்க ளுக்கு பரிசுகளும் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், தனுஷûடன் நடித்த சில கதாநாயகிகளும் பங்கேற்றனர். — சி.பொ.,

ஹாலிவுட் கனவில் கார்த்திகா !
தமிழில், கோ படத்தில் நடித்து வரும் மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகா, மலையாளத்தில் நடித்துள்ள படம் மகர மஞ்சு. இப்படத்தை, சமீபத்தில் பார்த்த, ஸ்லம்டாக் மில்லியனர் பட இயக்குனரான டேனி பாயல், கார்த்திகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். இதனால், உச்ச சந்தோஷத்தில் இருக்கும் கார்த்திகாவுக்கு, ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டுமென்ற கனவும் தற்போது உருவாகியுள்ளது. இருக்கிறது குச்சு வீடு; கனா காண்கிறது மச்சு வீடு! — எலீசா.

தாடி வளர்க்கும் ஆதி!
அரவாண் படத்துக்காக தாடி வளர்த்துள்ள ஆதி, இப்படம் என் கேரியரில் முக்கியமான படம். அதனால், இப்படம் முடிகிறவரை, வேறு எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்கிறார். காரணம், "இந்த நேரத்தில் வேறு கதைகள் கேட்டால், அரவாண் மீதுள்ள கவனம் சிதறக் கூடும். அதனால், கதை சொல்ல துரத்தியவர்களை ஓராண்டுக்கு நிலுவையில் வைத்துள்ளேன்...' என்கிறார். — சி.பொ.,

ஆர்யா யூகம்!
ஆர்யாவை, உடன் நடிக்கும் நடிகைகளுடன் இணைத்து, கிசுகிசு செய்திகள் வெளியானால், அதுகுறித்து அவர் துளியும் வருந்துவதில்லை. "என்னைப் பற்றி கிசுகிசுக்கள் வருகிறது என்றால், நான் வளர்கிறேன் என்று அர்த்தம். அந்த வகையில், இப்போது என்னைப்பற்றி வெளியாகும் செய்திகளைப் பார்க்கையில், இன்னும் குறுகிய காலத்தில் நானும் முதல் வரிசை நடிகனாகி விடுவேன் என்பது தெளிவாக தெரிகிறது...' என்கிறார். — சி.பொ.,

பார்த்திபன் காமெடி கூட்டணி!
கவுண்டமணி - செந்தில் காமெடி போன்று, பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் அமைந்த காமெடி காட்சிகளும் பிரபலமானதால், தொடர்ந்து தாங்கள் கூட்டணி அமைக்க வேண்டுமென்று மேற்படி நடிகர்கள் பிரியப்படுகின்றனர். முக்கியமாக, வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்தால், அது, தனக்கு ப்ளஸ் ஆகும் என்று கருதும் பார்த்திபன், தன்னை, "புக்' பண்ண வரும் டைரக்டர்களிடம், "வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டு, என்னிடம் வாருங்கள்...' என்றும் கேட்டுக் கொள்கிறார். — சி.பொ.,

அவ்ளோதான்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.