நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்., (27)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2017
00:00

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

ஆரம்பத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த நான், பின்னாளில், அண்ணாதுரையின் கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.
அண்ணாதுரைக்கும், எனக்கும் ஏற்பட்ட தொடர்பை, இப்போது நினைத்துப் பார்த்தாலும், எனக்குள் புத்துணர்வு பொங்கும். அண்ணாதுரையின், 'பணத்தோட்டம்' என்ற புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன். பின், கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கொள்கையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காந்திய வழியில் நான் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில், நான் கேட்ட கேள்விகளுக்கு, அண்ணாதுரையிடமிருந்து கிடைத்த பதில்கள் எனக்கு உடன்பாடாக இருந்தது.
அண்ணாதுரையின் வாழ்க்கை முறை, அன்பு மற்றும் பாசத்துடன் கூடிய அவருடைய செயல்களை கவனித்த போது தான், தோல்விகளை சந்தித்த தருணங்களில் நான் அடைந்த வேதனையையும், துன்பத்தையும், சோர்வடைந்து, செயலிழந்து போன நிலையையும் எண்ணி, வெட்கப்பட்டேன்.
அண்ணாதுரையிடம் எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டதற்கு மற்றுமொரு சம்பவத்தையும் கூறலாம்...
அண்ணாதுரை எழுதிய, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில், சிவாஜியாக நான் நடிக்காததற்கு என்ன காரணம் என்பதையும், அண்ணாதுரையிடம், என்னை அறிமுகம் செய்து வைத்தவர் யார், அப்போது நடந்த நிகழ்ச்சியையும் சொல்ல வேண்டும். காரணம், என் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இதை கருதுகிறேன்.
நடிகமணி, டி.வி.நாராயணசாமியை எங்கு, எப்போது சந்தித்தேன் என்பது தெரியாவிட்டாலும், என் வாழ்வில், குறிப்பிடத்தக்கவர்களில் அவரும் ஒருவர். இவரே, அண்ணாதுரையை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர்.
அக்காலத்தில், சமுதாய சீர்திருத்த கருத்துகளைக் கொண்ட நாடகங்களில் நடித்து வந்தார், நாராயணசாமி. பின், அண்ணாதுரை எழுதிய நாடகங்களில், அவரோடு இணைந்து நடித்தார். இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து நடித்த, சந்திரோதயம் என்ற நாடகத்தை காணச் சென்றிருந்தேன்.
நாராயண சாமியின் உணர்ச்சிமிக்க நடிப்பை கண்டும், அழுத்தந்திருத்தமான உரையாடலை கேட்டும், மக்களின் கைதட்டலில் கொட்டகையே அதிர்ந்தது.
ஒருநாள், டி.வி.என்., 'எங்கள் கட்சி நாடகத்தில் நீங்க நடிக்கிறீர்களா... அண்ணாதுரை எழுதிய நாடகம்; நல்ல வேடம்; நடிப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு; உங்களின் சமுதாய சீர்திருத்த கருத்துகளை வெளியிடலாம்...' என்று என்னிடம் கேட்டார்.
உடனே, ஒப்புக் கொண்டேன்.
சில நாட்களுக்கு பின், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற அந்நாடகத்தின், சிவாஜி வேடத்திற்கான பாடத்தை கொண்டு வந்து கொடுத்தார், டி.வி.என்., அதைப்படித்து பார்த்தேன்; அக்கதாப்பாத்திரத்தின் வீரமும், துணிவும், அறிவும், ஆற்றலும், எனக்குள் மரியாதையை ஏற்படுத்தியது. பின், எனக்கொரு யோசனை தோன்றியது.
'கதாநாயகன், இன்னொரு கதாபாத்திரத்தை பார்த்து பேசுவதை மாற்றி, மக்களை பார்த்துப் பேசுவதாக அமைத்து, இதே உரையாடல்களை சிறிது திருத்தி எழுதி கொடுத்தால், மக்களின் மூட நம்பிக்கைகளை, நேரிடையாக எடுத்துக் கூறலாமே...' என்று நினைத்தேன்.
இதை டி.வி.என்.,னிடம் கூறினேன்; அண்ணாதுரையிடம் கூறுவதாக சொன்னார். இரண்டொரு நாட்களுக்கு பின், அண்ணாதுரையிடம் என்னை அழைத்துச் சென்று, விஷயத்தை கூறினார்.
'என்ன மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?' என்று, என்னை கேட்டார், அண்ணாதுரை.
நான் நினைத்ததை சொன்னேன்.
'செய்துட்டா போகுது; நாராயணசாமி அப்புறம் நினைவுபடுத்து; எழுதிடலாம்...' என்றார்.
கோவையில், ராஜகுமாரி என்ற படத்தில், நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகம், நடைபெற இருந்தது.
'நான் கூறிய திருத்தங்கள் செய்யப்பட வில்லையே... இதையே பாடம் செய்வதா, வேண்டாமா...' என்ற சந்தேகத்தில் தவித்தேன். என் நிலையை அறிந்த ராஜகுமாரி பட இயக்குனர், ஏ.எஸ்.ஏ.சாமி, நாராயணசாமியுடன் பேசி, அண்ணாதுரையின் அனுமதியுடன் நாடகத்தில் சில மாற்றங்களை செய்து கொடுத்தார்.
இவ்விஷயம் தெரிந்து, என்னை கடிந்து கொண்ட என் அண்ணன், 'அண்ணாதுரையின் அறிவுத் திறமையை மதித்திருக்க வேண்டாமா... வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த உன்னை, உன் சமுதாய சீர்திருத்த நோக்கத்தை மதித்து, தங்களது கட்சி நாடகத்தில் நடிக்க அழைத்த அவருடைய பெருந்தன்மையை, கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தாயா... இன்னொருவரை கொண்டு அண்ணாதுரையின் உரையாடலை திருத்தி, எந்த முகத்தை வைத்து, அவர் முன் நடிப்பாய்; அவர் தான் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்! தலைக்கனம் பிடித்தவனாக உன்னை நினைக்க மாட்டாரா... இதை அறிந்தால், யாருக்காவது உன் மீது நல்லெண்ணம் வருமா...' என்றார்.
அப்போது தான், என் சிறுபிள்ளைத்தனத்தால் எத்தனையோ பேரின், மனதை புண்படுத்தி விட்டது புரிந்தது. 'இப்ப என்ன செய்றது...' என்றேன் என் அண்ணனிடம்!
'இப்போது, இந்நாடகத்தில் நடிக்க வேண்டாம்; உன் செயலால் ஏற்படுத்தப்பட்ட மனக்காயம் ஆறட்டும்; அப்புறம் நடிக்கலாம்...' என்றார்.
அதற்கு பின், அண்ணாதுரையின் மறைவு வரையில், எத்தனையோ முறை நாங்கள் சந்தித்து பேசியிருந்தாலும், அவராக இந்த நாடகத்தை பற்றி பேசியதே இல்லை.
ஒருநாள், நானே, அந்நாடகத்தில் நான் ஏன் நடிக்கவில்லை என்பதை அவரிடம் சொன்ன போது, சிரித்தவாறு, 'நடந்ததை எல்லாம் ஏ.எஸ்.ஏ.சாமி சொன்னார்; தவறாக ஏதும் நினைக்கவில்லை...' என்று கூறி, முதல் நாளிலேயே, திருத்தம் சொல்ல முன்வந்ததற்காக, என்னை வேறொரு நண்பரிடம் பாராட்டி பேசியதை, அவர் கூறிய பின் தான், எனக்கு மன நிம்மதி ஏற்பட்டது.

— அடுத்த இதழில் முடியும் —

நன்றி:
கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
23-ஜூலை-201705:00:47 IST Report Abuse
கதிரழகன், SSLC தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் வித்தியாசம் செய்யறவனுக்கு தெரியாது, பாக்கிறவனுக்குத்தான் தெரியும். எம் ஜி யார் ஓரளவு தலைக்கனம் பிடித்தவர்தான். சந்தேகமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X