அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 செப்
2017
00:00

வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கவனம் குளிர்காலம்!
* குளிர்காலத்தில், காய்கறிகளை, 'சூப்'பாக தயார் செய்து குடிப்பது, நல்லது.
* வெங்காயம், பூண்டு மற்றும் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்தால், குளிர்கால நோய்கள் ஏற்படாது.
* ஆப்பிள், திராட்சை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றில், ஏதாவது ஒன்றை தினமும், பச்சையாக சாப்பிட்டு வர, குளிரால் ஏற்படும் சளி மற்றும் இருமல் தொல்லைகள் மாறும்.
* குளிர்காலத்தில், சளியை கூட்டும் மற்றும் உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும். அதிக இனிப்புகளை தவிர்த்து, சற்று காரமான உணவு வகைகளை சாப்பிடலாம்; கிரீம் சேர்த்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
* குளிர்காலத்தில், சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகியபடியே இருக்கும். இதற்கு, ஓமத்தை சிறிதளவு எடுத்து, வெள்ளைத் துணியில் முடிந்து, உறிஞ்சி வர, மூக்கு நீர் நிற்கும்; தலைபாரம் மற்றும் ஜலதோஷம் மாறும்.
* குளிர்பானங்கள், தயிர் மற்றும் மோர் போன்றவற்றை குடிப்பதற்கு மாறாக, இளஞ்சூடான பானங்கள் மற்றும் தேயிலை போன்றவற்றை குடிக்கலாம்.
* இரவில் தூங்க செல்லும் முன், கோல்டு கிரீமை தடவலாம்; உதடு வெடிப்பை தவிர்க்க, வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.
* காபி, டீ மற்றும் பால் இவற்றில், இஞ்சி சேர்த்தல் நல்லது; இது, தொண்டை சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கும்.
* மழைக்காலத்தில், தோல் செருப்பு மற்றும் கவர் ஷூக்களை பயன்படுத்தாமல், ரப்பர் செருப்புகளை அணியவும்.
* அதிக சூடான நீரில் குளித்தால், சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசை மாறிவிடும்; எனவே, இளஞ்சூடான நீரில் குளித்தல் நல்லது.
* குளிர்காலத்தில், கால்களில் சாக்ஸ் அணிவது நல்லது; வயதானவர்களுக்கு அதிக குளிர் தாக்காது.

சத்துமிக்க புதிய வாழைப்பழம்!
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த, உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர், ஜேம்ஸ் டேல், மரபணு மாற்றத்தில், அதிக சத்து நிறைந்த வாழைப்பழத்தை உருவாக்கி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும், ஏழு லட்சம் குழந்தைகள், வைட்டமின் - ஏ பற்றாக்குறையால் இறக்கின்றனர். மூன்று லட்சம் பேர் இந்த சத்துக்குறைவால், பார்வையை பறிக்கொடுக்கின்றனர்.
'உலக மக்களின், வைட்டமின் - ஏ பற்றாக்குறையை தீர்த்து வைக்க, மிக எளிதான வழி, மஞ்சள் வாழை பழத்தை, தினமும் சேர்த்துக் கொள்வது தான்...' என்கிறார், ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ்.
இவர், வழக்கமான காவெண்டிஸ் வாழையுடன், நியூகினியாவின் வாழை இனங்களில் உள்ள, சில மரபணுக்களை சேர்த்து, புதிய மஞ்சள் வாழை பழத்தை உருவாக்கி உள்ளார்.
இதில், மிகுதியான அளவு, வைட்டமின் - ஏ சத்து கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில், வரும், 2021ம் ஆண்டிற்குள், அதிக அளவில் மகசூலுக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. உகாண்டா நாடு உள்ளிட்ட, ஊட்டச்சத்து தேவைமிக்க பகுதிகளில், இந்த வாழைப்பழம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X