மித்து!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 செப்
2017
00:00

அரிசி ஆலையில், ஏராளமான எலிகள் வாழ்ந்து வந்தன. அந்த எலிகளை, ஆலையின் வெளியே வாழ்ந்த பூனைகள், அடித்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தன.
அவற்றில், மித்து என்ற பூனை, மற்ற பூனைகளுக்கு ஆலோசனை வழங்கியது...
“நண்பர்களே, நமக்கு ஆலைக்குள் வசித்து வருகிற எலிகளை, சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது. நம் ஆசை இனிதாக நிறைவேற வேண்டுமென்றால், நாம் தந்திரத்தோடு செயல்பட வேண்டும்,” என்றது.
'மந்திரம், தந்திரமெல்லாம் உனக்குத்தான் தெரியும். அந்த எலிகளை பிடிக்க யோசனை சொல்' என்றன மற்ற பூனைகள்.
“நண்பர்களே, நான் முதலில் அந்த எலிகளோடு நட்பு வைத்து கொள்கிறேன். அதன் பின், எலிகள் எல்லாம் ஓரிடத்தில் கூடியிருக்கிற நேரத்தில், உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன்,” என்றது.
மித்துவின் ஆலோசனைபடி, மற்ற பூனைகள், அந்த இடத்தை விட்டு சென்றன. மித்து பூனை மட்டும் எலிகள் வாழ்கிற அரிசி ஆலைக்குள் சென்றது.
எலிகள் எல்லாம் ஓரிடத்தில் கூடியிருந்து, மத்தியில் சுண்டெலி ஒன்று நடனமாடி கொண்டிருந்தது. மற்ற எலிகள் நடனத்தை ரசித்து கொண்டிருந்தன.
பூனை மித்து, மெதுவாக அந்த எலிகளின் அருகே சென்றது. பூனையை பார்த்த எலிகள் எல்லாம் திடுக்கிட்டன. உடனே, அவை அந்த இடத்தை விட்டு ஓட முடிவு செய்தன.
எலிகளின் நடுக்கத்தை புரிந்து கொண்டது மித்து.
“நண்பர்களே, நீங்கள் யாரும் என்னை கண்டு பயந்து ஓட வேண்டாம். நீங்கள் எலிகள்; நான் பூனை என்ற பேதம் எனக்கில்லை. உங்களோடு நட்பு வைத்து கொள்ளவே வந்துள்ளேன். என்னை நீங்கள் விரோதியாக நினைத்து கொள்ள வேண்டாம். தயவு செய்து யாரும் ஓடாதீர்கள்,” என்றது மித்து.
பூனை மித்து கூறியதை கேட்டு, எலிகள் வியப்படைந்தன.
'ஒரு பூனை நம்மிடம் நட்பு வைத்து கொள்ள விரும்புகிறதே... இதனோடு நாம் நட்பு வைத்து கொள்ளலாமா' என்ற யோசனையுடன் எல்லா எலிகளும் குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தன.
அப்போது நடனம் ஆடிய சுண்டெலி, தைரியமாக பூனையின் அருகே சென்று, ''பூனையாரே, நாங்கள் எல்லாரும் உங்களோடு நட்பு வைத்து கொள்ள தயாராக இருக்கிறோம். நாளை காலை உன் நண்பர்களுடன் இதே இடத்திற்கு வாருங்கள். நம் இரு இனத்தாருக்கும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி கொள்ளலாம்,” என்று கூறியது.
சுண்டெலி கூறியதை கேட்டு, மகிழ்ச்சியோடு தன் இருப்பிடத்திற்கு சென்றது மித்து. அங்கே சென்றதும், “நண்பர்களே, நாளை காலை எலிகளின் இருப்பிடத்திற்கு செல்வோம். நம் இனத்தாருக்கும், எலி இனத்தாருக்கும் நட்பு உடன்படிக்கையை ஏற்படுத்தி கொள்ளவே நம்மை எல்லா எலிகளும் சந்திக்க இருக்கின்றன.
''அந்த நேரத்தில், நாம் திடீரென எலிகளின் மீது பாய்ந்து, அவைகளை பிடித்து தின்று விடுவோம்,” என்றது.
'ஆஹா! அருமையான யோசனையை வழங்கினாய். நாளை காலை, நாம் எலி வேட்டைக்கு செல்லலாம்' என்றன மற்ற பூனைகள்.
மறுநாள் காலை -
பூனைகள் எல்லாம் ஆலைக்குள் சென்றன.
'மியாவ்... மியாவ்...' என்றபடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தபடி சென்றன. மற்ற பூனைகளுக்கு முன்னால் மிடுக்காக சென்றது மித்து பூனை.
பூனைகள் எல்லாம் எலிகளின் வருகைக்காக காத்து கொண்டிருந்தன. நீண்ட நேரமாகியும் எலிகள் வராதது பூனைகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
உடனே, பூனைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபடி, 'மியாவ்... மியாவ்...' என்று சத்தமாக குரல் எழுப்ப துவங்கின.
தொடர்ந்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தன பூனைகள். ஆனால், எலிகள் தலைகாட்டவில்லை.
அதே நேரத்தில், ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்கள், கையில் தடியுடன் ஓடி வந்து பூனைகளை நையப் புடைந்தனர்.
உயிர் பிழைத்தால் போதுமென்று, எல்லா பூனைகளும் ஓட்டமெடுத்தன. மித்து பூனைக்கும் சரியான அடி கிடைத்தது; நொண்டியபடி மற்ற பூனைகளை பார்த்தது.
“நண்பர்களே, நாம் தான் புத்திசாலிகள் என்று நினைத்தோம். ஆனால், அந்த எலிகள் நம்மை விட புத்திசாலிகளாக இருக்கின்றன,” என்றது மித்து.
அதன்பின், அந்த ஆலைக்குள் பூனைகள் செல்லவே இல்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X