ஏர்டெல் 3 ஜி சேவை தொடங்கியது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2011
00:00

இந்தியாவில் மொபைல் போன் சேவை வழங்குவதில் முதல் இடத்தில் இயங்கும் ஏர்டெல் நிறுவனம், 3ஜி சேவையினை பெங்களூருவில் சென்ற திங்கள் கிழமை தொடங்கியது. அடுத்ததாக, சென்ற ஜனவரி 27 அன்று, சென்னை மற்றும் கோவையிலும் தன் 3ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தரத் தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனப் பிரிவில், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனங்களை அடுத்து, ஏர்டெல் இந்த சேவையினை மக்களுக்கு வழங்குகிறது.
இந்த சேவை மூலம், மொபைல் வழி இன்டர்நெட் சேவையினை தென் பகுதி மக்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம் என்று ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் சேவை பிரிவு தலைவர் அதுல் பிண்டால் கூறினார்.
இப்போது வைத்திருக்கும் சிம் கார்ட் மூலமாகவே, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையினைப் பெறலாம். லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு 3ஜி டேட்டா கார்டினை ஏர்டெல் வழங்குகிறது. அனைத்து தரப்பிலும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, பல்வேறு அளவுகளில் கட்டண விகிதங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் வழங்கும் இன்டர்நெட் யூசேஜ் கால்குலேட்டர் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் எந்த அளவில், 3ஜி சேவையைப் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பு பெறுகின்றனர் என்பதனை கண்காணிக்கலாம். இதன் மூலம் தங்கள் பயன்பாட்டினை வரையறை செய்திடலாம்.
3ஜி சேவை மூலம், வாடிக்கையாளர்கள், வீடியோ கான்பரன்சிங், அதிவேக இன்டர்நெட் இணைப்பு, வேகமான டேட்டா டவுண்லோடிங், கேம்ஸ் ஆகியவற்றைத் தங்கள் மொபைல் போன்களில் மேற்கொள்ளலாம். இதுவரை பி.எஸ்.என்.எல்., டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 3ஜி சேவையினை வழங்கி வருகின்றன. வோடபோன் எஸ்ஸார். ஏர்செல், ஐடியா செல்லுலர் மற்றும் எஸ் - டெல் ஆகியவை இந்த சேவையை வழங்க உரிமம் பெற்றுள்ளன.
வரும் மார்ச் மாதத்திற்குள், ஏறத்தாழ 50 நகரங்களில் 3ஜி சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிடுகிறது. மீத நகரங்களில், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும். சென்ற டிசம்பர் முடிவிலான காலத்தில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 15 கோடி அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் உள்ள 22 தொலை தொடர்பு மண்டலங்களில், 13 மண்டலங்களில் 3ஜி சேவை வழங்க, ஏர்டெல் ரூ.12,295 கோடி செலுத்தி உரிமம் பெற்றது. இந்த 13 மண்டலங்களில் மட்டுமின்றி, பிற மண்டலங்களில் இயங்கும் நிறுவனங்க ளுடன் இணைந்து மற்ற மண்டலங்களிலும் ஏர்டெல் இந்த சேவையை வழங்கும் எனத் தெரிகிறது.
3ஜி சேவை வழங்குவதற்கான தொலை தொடர்பு பொறியியல் கட்டமைப்பினை, எரிக்சன், சீமென்ஸ், ஹுவெய் மற்றும் ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஏர்டெல் பெற்றுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X