ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2011
00:00

டேப்ளட் பிசி குறித்த கட்டுரை நல்ல வழிகாட்டியாக உள்ளது. இறுதியில் யார் இதனை இப்போது வாங்கலாம் என்ற எச்சரிக்கை கலந்த தகவல், அனைவருக்கும் பயன்படும்.
-சா. குணசேகரன், மதுரை.
இப்போதைக்கு ஆர்வத்திற்காக அல்லது ஜஸ்ட் எங்கு சென்றாலும் எளிதான இன்டர்நெட் தொடர்புக்காக டேப்ளட் பிசியை வாங்கலாம். மற்றபடி, மக்கள் பயன்பாட்டிற்கு இது சரியானது என்று நிரூபணம் ஆகிவிட்டால், நிச்சயம் நம் மக்கள் முதலில் மாறிவிடுவார்கள்.
-டாக்டர் ஆர். மாலதி, சென்னை.
இந்த வாரம் அரைப் பக்கத்தில் எக்ஸெல் டிப்ஸ்களைப் போட்டது போல, வாராவாரம் ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்குப் போட்டுத் தரவும்.
-என். சுகவனம், திருப்பூர்.
என்றைக்கு சயின்ஸ் மக்கள் வாழ்க்கையில் கலந்ததோ, அன்றே நாம் விஞ்ஞானத் திற்கு, அதன் சாதனங்களுக்கு அடிமை ஆகிவிட்டோம். நம் படைப்புகளுக்கு நாம் அடிமை. இதில் என்ன தனியே டிஜிட்டல் சாதனங்களுக்கு நாம் அடிமை எனத் தனியே சொல்ல வேண்டும்.
-ஆர். சி. கலாராணி, கோயம்புத்தூர்.
டி.டி.ஆர்.4 மற்றும் புதிய வர இருக்கும் சாதனங்களைப் பற்றி முதலில் கூறிய இதழ் நம் கம்ப்யூட்டர் மலர் இதழ்தான். கீ ப் இட் அப்.
-என். பார்த்திபன், புதுச்சேரி.
கூகுள் தரும் அலகு மாற்றத்தினைப் பயன்படுத்தி னேன். சூப்பராக தகவல்களைத் தருகிறது. எதிலும் தனித்தன்மையுடன் நம் சிரமத்தைக் குறைத்து சேவை தருவதில் கூகுள் நம்பர் ஒன்.
-ஓ. ராஜநாயகம், சென்னை.
குழந்தை வளர்ப்பு வெப்சைட் குறித்த தகவல் பயனுள்ளதாய் இருந்தது. குழந்தைகளுக்கு என வாரா வாரம் ஏதேனும் செய்திகள் தரவும். பல தாய்மார்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
-டி.கே. வித்யா மூர்த்தி, விழுப்புரம்.
ப்ராசசர் சிப்பில் இணைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் -- ஆஹா! கேட்கவே விந்தையாக இருக்கிறது. மைக்ரோசாப்ட் மட்டும் தான் இந்த சிந்தனையைச் செயல்படுத்த முடியும்.
-பேரா. ஆர். மனோகரன், தாம்பரம்.
இணைய வேகத்தினை அளந்து காட்டும் வெப்சைட், நம்மிடம் ஐ.எஸ்.பி. நிறுவனங்கள் இன்டர்நெட் வேகம் குறித்து கூறுவதனை நாம் சோதித்துக் கொள்ள கிடைக்கும் உரைகல்.
-மா. ஜூலியானா, மதுரை.
128, 256 ஜிபிக்களில் பிளாஷ் ட்ரைவ்களா!! நாம் எங்கே போய்க் கொண்டிருக் கிறோம். போகிற போக்கில், என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா நம் நக அளவு சிப்பில் வந்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எதிர்பார்க்கலாம்.
-டி. தினேஷ், காரைக்கால்.
டேப்ளட் பிசி - அடுத்த கல்வி ஆண்டில், ஆங்கில மீடியம் தொடக்க பள்ளிகளில், மாணவர்களுக்குத் தரப்படும் நோட்டு புத்தகங்களுடன் ஒன்று தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போது எம்.பி.ஏ. மாணவர்களுக்கு லேப் டாப் கட்டாயப்படுத்துவது போல!
-பேரா, சி. ஆறுமுகம், பொள்ளாச்சி.
எக்ஸெல்லில் எட்ஜுக்குச் செல்லும் வழி பிரமாதம். இதுவரை நேரத்தை அதிகம் செலவழித்து, போராடி சில செல்களுக்குச் செல்லும் பழக்கத்தினைக் கொண்டிருந்தோம். நன்றி.
-சி. சரஸ்வதி பாஸ்கரன், திருநகர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X