கனரா வங்கியில் பணிபுரிய விருப்பமா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 நவ
2017
00:00

கேன்பின் ஹோம்ஸ் என்பது கனரா வங்கியின் துணை நிறுவனமாகும். இது வீட்டு வசதிக் கடன்களை வழங்குவதை பிரத்யேகமாக செய்து வருகிறது. 1987ல் வீடு இல்லாதவர்களுக்கான சிறப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்ட போது தொடங்கப்பட்டது.இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. தற்சமயம் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள கேன்பின் நிறுவனத்தில் மேலாளர் பிரிவில் காலியாக இருக்கும் 20 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 2017 நவ., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர தேவைகள்: பட்டப் படிப்பை முடித்த பின்னர் குறைந்தபட்சம் 3 வருட காலம் பணியாற்றிய அனுபவம் தேவைப்படும். இதில் இரண்டு வருட காலத்திற்கு ஏதாவது ஒரு வீட்டு வசதிப் பிரிவில் கிளை அல்லது பிரிவுத் தலைவராகப் பணியாற்றியிருக்க வேண்டும். கடன் பேப்பர்களை பரிசீலித்தது, கிரெடிட் புரொபோசல்களைப் பரிசீலித்த அனுபவம் தேவைப்படும்.
இதர தகவல்கள்: மேற்கண்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலாளர் அல்லது முதுநிலை மேலாளராக பணி புரிய வேண்டும். இதற்கு ஒரு வருட காலம் புரொபேஷன் இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். இதனை நெப்ட் அல்லது
ஆர்.டி.ஜி.எஸ்., முறையில் கேன்பின் ஹோம்ஸ் நிறுவனத்தின் கரண்ட் அக்கவுண்ட் எண். 0684201001486, Canara Bank, Lalbagh West branch, Bangalore IFSC Code -CNRB0000684 என்ற முறையில் செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 நவ., 23.
விபரங்களுக்கு: www.canfinhomes.com/canfinhomes.php?page=news

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.