ரயில்வேயில் 192 பணி வாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 நவ
2017
00:00

இந்தியாவில் 1980க்கு முன்னர் வரை ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள் மற்றும் ஆக்சில்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். பின் உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்கும் நோக்கத்தில் ரயில் வீல் பேக்டரி லிமிடெட் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி மையங்கள் பல்வேறு இடங்களிலும் உள்ளது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 192 அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: பிட்டரில் 85, மெஷினிஸ்டில் 31, மோட்டர் மெக்கானிக் வெகிக்கிளில் 8, டர்னரில் 5, சி.என்.சி., புரொகிராமிங் கம் ஆப்பரேட்டரில் 23, எலக்ட்ரீசியனில் 18, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 22ம் சேர்த்து மொத்தம் 192 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 2017 நவ., 29 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 15 - 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய டிரேடிங் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பையும் முடித்திருக்க வேண்டும். பயிற்சி காலம்: சி.என்.சி., டிரேடிங் பிரிவுக்கு 6 மாத காலமும், இதர பிரிவுகளுக்கு ஒரு வருட காலமும் பயிற்சி இருக்கும். ஸ்டைபண்டு எவ்வளவு: மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்ச்சி செய்யப்பட்டால் மாதம் ரூ.6 ஆயிரம் வரை பெறலாம்.
தேர்ச்சி முறை : மெரிட் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். இதனை போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி., யாக செலுத்த வேண்டும்.
Chief Personnel Officer, Rail Wheel Factory, Yelahanka, Bangalore - 560064
கடைசி நாள் : 2017 நவ., 29.
விபரங்களுக்கு: www.rwf.indianrailways.gov.in/view_detail.jsp?lang= 0 & dcd =170&id=0,297, 310

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.