இயற்கை மூலிகை பூச்சி விரட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2017
00:00

பயிர்களை தாக்கி அழிக்கின்ற பூச்சிகளை கட்டுப்படுத்தவும் அழிக்கவும் பயன்படும் தாவர இலை கரைசலையே மூலிகை பூச்சி விரட்டி என அழைக்கின்றோம். இயற்கை விவசாயிகள் மட்டுமே ரசாயன பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாக மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி வருகின்றனர். மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் தாவர வகைகளின் எண்ணிக்கையை வைத்து அதனை ஐந்திலை, மூவிலை மூலிகை பூச்சி விரட்டி எனலாம்.

மூலிகை பூச்சி விரட்டி: எருக்கு, தங்க அரளி, சிறியா நங்கை, நொச்சி, ஆடாதொடா, தும்பை, பார்த்தீனியம், ஊமத்தை, துத்தி, உண்ணிச்செடி, எட்டி, சீதா இலை, சீமைக் கருவேல், காட்டாமணக்கு, புகையிலை உள்ளிட்ட தாவரங்கள் கசப்பு தன்மை மிகுந்தது. ஒடித்தால் பால் வடியும். இவைகளை கால்நடைகள் உட்கொள்ளாது. மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க தேவைப்படும் தாவர இலைகள் வீட்டின் அருகாமை, தோட்டங்கள், வயல் வெளிகள், வேலி ஓரங்களில் தென்படும்.தேவையான பொருள்: ஒன்றுக்கு மேற்பட்ட தாவரங்களின் இலைகள், கல் உரல், பானை அல்லது பிளாஸ்டிக் பேரல், லிட்டர் குவளை ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். தாவர இலைகளை சம அளவு எடுத்து இடித்து வைத்து கொள்ளவும். அவற்றை ஊற வைக்கும்போது விரைந்து நொதிக்கும். இடித்து வைத்துள்ள இலைகள் மூழ்கும் வரை மாட்டுக் கோமியத்தை கலந்து பயிருக்கு தேவைப்படும் பூச்சி விரட்டியின் நீர்ம அளவை கணக்கிட்டு, அதில் 80 சதவிகிதம் அதாவது 100 லிட்டர் எனில் அதில் 80 லிட்டர் அளவிற்கு தண்ணீர் கலந்து 3, 4 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின் இலைகளை வடிகட்டி 20 சதவிகிதம் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இக்கலவையை தெளிப்பான் மூலமாக பயிர்களுக்கு தெளிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட தாவர இலைகளின் அளவை பூச்சிகளின் தாக்குதலுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும்.பயன்படுத்தும் முறை: ஆரம்பக்கட்ட தாக்குதலாக இருந்தால் 1, 2 சதவிகித கரைசலை தயாரித்து பயிர்கள் முழுமையாக நனையும்படி தெளிக்க வேண்டும். இதனால் பூச்சிகளின் அனைத்து பருவங்களும் அழிக்கப்பட்டு விடும். பூச்சியின் தாக்குதல் அதிகமிருப்பின் 3,5 சதவிகித கரைசல் தேவைப்படும். இக்கரைசலை 15 நாட்களுக்கு ஒருமுறை 2,3 முறை பயன்படுத்தலாம். 1 சதவிகித கரைசலை தயாரிக்க 1 கிலோ அளவிற்கு தாவர இலைகளை சேகரித்து, அதனை 80 லிட்டர் தண்ணீர் மற்றும் கோமியத்தில் ஊர வைக்க வேண்டும். பின் வடிகட்டி 100 லிட்டர் வருமளவிற்கு அதாவது மீதம் 20 லிட்டர் தண்ணீர் கலந்து கொண்டால் ஒரு சதவிகித மூலிகை கரைசல் தயாராகி விடும். தொடர்ந்து ஒரே வகை மூலிகை செடிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மூலிகை இலைச்சாறு தானே என அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது. அதனால் நம்மை செய்யும் பூச்சிகள் கூட அழிந்து விடும். சில சந்தர்ப்பங்களில் பயிர்கள் கருகி விடக்கூடும்.
- டி.யுவராஜ் வேளாண் பொறியாளர், உடுமலை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.