கறவை மாடு வளர்ப்பு வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2017
00:00

பெண் சுய தொழில் முனைவோருக்கு கறவை மாடு வளர்ப்பு ஏற்றது. பால் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண்கள் பலர் கறவை மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடும்பத்தின் அன்றாட செலவுகளை பால் விற்பனை மூலம் சரிக்கட்டி வருகின்றனர். மாதம் தோறும் கணிசமாக சேமிக்கவும் கறவை மாடு வளர்ப்பு கை கொடுக்கிறது.மதுரை மாவட்டம் புல்லுாத்து பகுதியை சேர்ந்தவர் விவசாயி கலாதேவி. தனது மூன்று ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்கிறார். கறவை மாடு வளர்ப்பில் 20 ஆண்டு அனுபவம் கொண்டவர். ''விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய் சேமிப்பு கணக்கிலும், கறவை மாடு வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய் குடும்ப செலவுகளை பூர்த்தி செய்கிறது,'' என்கிறார்.60 லிட்டர் பால்
கலாதேவி கூறியதாவது: விவசாயம் செய்ய நிலம் இல்லாவிட்டாலும் சிறிய இடம் இருந்தால் போதும் கறவை மாடுகளை வளர்க்கலாம். சுய தொழில் முனைவோருக்கு ஏற்றது. ஒரு ஜோடி ஜெர்சி இன மாடுகளை வளர்த்தேன். அது ஒரு கன்று ஈன்றது. ஒவ்வொரு ஆண்டும் கன்றுகள் பெருகியது. தற்போது 10 கறவை மாடுகளாகி விட்டன. ஆறு மாடுகள் பால் தருகின்றன. பசு ஒன்று தினமும் பத்து லிட்டர் பால் தருகிறது. டீக்கடை ஒன்றுக்கு ஒரு லிட்டர் பால் 30 ரூபாய் வீதம் 60 லிட்டர் பால் விற்கிறேன். கூட்டுறவு சங்கங்களில் லிட்டர் 21 ரூபாய்க்கு எடுப்பதால் விலை கட்டுபடியாகாது. எனவே டீக்கடைக்கு விற்று விடுகிறேன்.
மாடுகளின் வாக்கிங்காலையில் வீட்டில் இருந்து 2 கி.மீ., துாரம் மாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்து வருகிறேன். வயல்களில் புற்களை உண்டு, தண்ணீர் காட்டிய பின் மாலையில் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். தினமும் 4 கி.மீ., துாரம் மாடுகள் நடப்பதால் ஆரோக்கியமாக உள்ளது. இயற்கையாக கிடைக்கும் இலைகள், புற்களை உண்ணுவதால் பால் சத்து நிறைந்ததாக உள்ளது. வீட்டில் வைத்து கடலை புண்ணாக்கு, தவிட்டு புண்ணாக்கு வழங்குவதால் கூடுதல் பால் கிடைக்கிறது. கன்று ஈன்ற மாதத்தில் இருந்து பால் கறவை கூடுதலாக இருக்கும். பின் ஒவ்வொரு மாதமும் பால் கறவை குறையும். சத்தான உணவு வழங்கினால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
சினை ஊசி ரூ.500 மாட்டிற்கான சினை ஊசிக்கு 500 ரூபாய். கால்நடை மருத்துவர் வீட்டிற்கே வந்து சினை ஊசி போட்டு செல்வார். மாட்டு தொழுவத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மாடுகளை தினமும் குளிப்பாட்ட வேண்டும். நன்றாக பராமரித்தால் 15 ஆண்டுகள் வரை பசுக்கள் பலன் கொடுக்கும். நானே பால் கறப்பதால் கறவை கூலி மிச்சம். மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளேன். கறவை மாடு வளர்ப்பு மூலம் திடமான உழைப்பு, சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்பு, யாரையும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து தொழில் துவங்கலாம். பெண்களுக்கு ஏற்றது. வங்கி கடன் சுலபமாக கிடைக்கிறது. வளமான வாழ்க்கைக்கு வற்றாத காமதேனு போல் கறவை மாடு வளர்ப்பு மிளிர்கிறது, என்றார்.கறவை மாடு வளர்ப்பு குறித்து மாவட்டம் தோறும் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகலாம்.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.