ஒரு ஏக்கரில் செம்பருத்தி சாகுபடி ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் லாபம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2017
00:00

மருத்துவத்துக்கு பயன்படும் மலர்களில் செம்பருத்தி முதலிடம் வகிக்கிறது. செம்பருத்தி மலர்கள், இலைகள் இனிப்பு சுவையும், குளிர்ச்சி தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும், வறட்சியை அகற்றும், மலமிளக்கும், உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும், முடி வளர்ச்சி, நரைமுடி பிரச்னைகளை குணமாக்கும். அங்கீகரிக்கப்பட்ட பல தமிழ் மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது.
செம்பருத்தியை தென்னையில் ஊடுபயிராக விளைவித்து லாபம் ஈட்டி வருகிறார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த எஸ்.எம்.கே.ராமனாதன்.அவர் கூறியதாவது: சாக்கோட்டை அருகே உள்ள நவத்தாவு கிராமத்தில் உள்ள ஏழு ஏக்கர் தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் ஊடுபயிராக செம்பருத்தி நட்டுள்ளேன். குச்சி மூலம் பதியம் போட்டு ஆறாவது மாதத்தில் பூக்க ஆரம்பிக்கும். ஒன்பதாவது மாதத்தில் இருந்து பூக்களை எடுக்கலாம். 15 ஆண்டு வரை பலன் தரும். 15 ஆண்டுக்கு மேலான தென்னந்தோப்பு என்றால் மட்டுமே வெயில் நன்றாக கிடைக்கும். மானாவாரி நிலங்களில் தரிசு பகுதியில் செழிப்பாக வளரும் தன்மை கொண்டது. ஒரு ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு 10 கிலோ பூ கிடைக்கும். காலை ஒரு மணி நேரத்தில் இந்த பூவை பறித்து விடலாம். இதை நிழலில் காய வைத்தால் 2.5 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 320 ரூபாய் வரை விலை போகிறது.ஆறு அடிக்கு ஆறு அடி நீள, அகலத்தில் இரண்டடி ஆழத்தில் பதியம் போட வேண்டும். 15 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். மாவு பூச்சி மட்டுமே தாக்கும். இயற்கை பூச்சி விரட்டி தயார் செய்து அவற்றை அழிக்கலாம். செம்பருத்தி பூ மட்டுமன்றி, இலையும் நல்ல மருத்துவ குணம் கொண்டது. இலை விலை கிலோ 40 ரூபாய். ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும் முதலீடு செய்தால் போதும். ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம். பூவை மதிப்பு கூட்டி பவுடராக்கி விற்றால் கிலோ ரூ.1,000 வரை விற்கலாம். செம்பருத்தி பூக்கள், இலைகளை மதுரை, கோவை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
ஒற்றை அடுக்கில் ஐந்து இதழ்களை கொண்ட சிவப்பு பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. கொத்தான அடுக்கில் பல இதழ்கள் கொண்ட அடுக்கு செம்பருத்தி அழகிற்கு மட்டுமே பயன்படுகிறது. செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி, சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வர தலைமுடி கருத்து அடர்த்தியாக வளரும், என்றார்.
செம்பருத்தியில் செழிப்பான லாபம் பெற விரும்புவோர்: 89032 24222.- த.செந்தில்குமார், காரைக்குடி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.