மீன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2017
00:00

தென்னிந்தியாவில் உணவுக்காகவும், அலங்காரத்திற்காகவும் வளர்க்கும் மீன்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மீன் வளப் பல்கலை வழங்கும் பயிற்சிகள், விழிப்புணர்வு, உதவிகள் மூலம் பலர் வண்ண மீன்கள், பலவகை உணவு மீன்கள், இறால் மீன்கள் உற்பத்தியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். வண்ண மீன்களை உற்பத்தி செய்து பல மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் மீன் துறைகள், மீன் வளர்ச்சி கழகங்கள், முகமைகள் கொடுக்கும் பயிற்சி, கடன், மானியம் ஆகியவற்றால் இந்தியாவில் வளர்ப்பு மீன் உற்பத்தி 5 லட்சம் பண்ணைகளை கடந்து விட்டது.1,000 கோடி டாலர்கடல் உணவு பொருட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2009 - 10ல் 560 கோடி டாலராக ஏற்றுமதி இருந்தது. படிப்படியாக வளர்ந்து 2020 ல் 1,000 கோடி டாலராக உயரும் என அரசு மதிப்பிட்டுள்ளது. செயற்கைக் கோள் தொழில் நுட்பம் ஆப் மூலம் கண்காணிப்பு, பல வகை ஆராய்ச்சிகள், பயிற்சிகள், மார்க்கெட் உதவிகள், ஏற்றுமதி மானியம், இவற்றால் இது சாத்தியமாகி வருகிறது. வளர்ப்பு மீன்கள், வண்ண மீன்கள் வளர்ப்பு மூலம் தொழில் முனைவோர், தீவன உற்பத்தியாளர்கள், ஊழியர்கள், வணிகர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். விபரங்களுக்கு www.tn.gov.in/fisheries, www.india.gov.in/agriculture.
--எம்.ஞானசேகர் விவசாய ஆலோசகர், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.