வேர்டில் கால்குலேட் கமாண்ட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 பிப்
2011
00:00

வேர்ட் டாகுமெண்ட்டில் வித்தியாச மான முறையில் Calculate என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம். இந்த கட்டளை எண்களைக் கணக்கிடும் முறையே தனி. எடுத்துக்காட்டாக காய்கறி 25, கறி 34, துணி 162, பஸ் செலவு 35 , என ஒவ்வொரு வரியாக எழுதி இவற்றை மொத்தமாக செலக்ட் செய்து கூட்டச் சொல்லலாம். சொற்கள் இருந்தாலும் அவற்றை நீக்கிவிட்டு எண்களை மட்டும் வேர்டின் கால்குலேட் கட்டளை கணக்கிட்டுச் சொல்லும். இதனை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
முதலில் மெனு பாரில் கால்குலேட் கட்டளையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு Tools மெனு சென்று Customize என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Commands என்ற டேபில் கிளிக் செய்க. இப்போது கிடைக்கும் விண்டோவில் Commands மற்றும் Categories என்ற இரு கட்டப் பிரிவுகள் இருக்கும். இதில் Categories கட்டத்தில் All Commands என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இனி Commands கட்டத்தில் வரிசையாகக் கட்டளைகள் இருக்கும். இதில் Tools Calculate என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அதனை அப்படியே இழுத்து வந்து டாகுமெண்ட்டுக்கு மேலாக இருக்கும் மெனுபாரில் டூல்ஸ் மெனுவில் Speech என்ற ஆப்ஷன் பக்கத்தில் விட்டுவிடவும். அல்லது அந்த மெனுவில் எங்கு வேண்டுமானாலும் ஒட்டிவிடலாம். இந்த பிரிவினை Calculate என லேபிள் மாற்றம் செய்திடவும். இது மற்ற கட்டளைகள் போல் இல்லாமல் கிரே கலரில் தெரியும். இதற்குக் காரணம் டாகுமெண்ட்டில் ஏதேனும் டெக்ஸ்ட் இருந்தால் தான் அது மற்ற கட்டளைகள் போல் தெரியும்.
கால்குலேட் கட்டளையை மெனு பாரில் ஒட்டியாயிற்று. இனி இந்தக் கட்டளையை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். டெக்ஸ்ட்டில் உள்ள எண்களை அப்படியே கூட்டிச் சொல்ல இதனைப் பயன்படுத்தலாம். மற்ற கணக்குகளுக்கு அதற்குண்டான அடையாளங்களைப் (– / * /) பயன் படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக "உசிலம்பட்டி 123, திண்டுக்கல் 236, சென்னை 424, மதுரை 326' என டைப் செய்து அந்த வரியை சொற்கள் மற்றும் கமாக்களோடு செலக்ட் செய்து பின் கட்டளையைக் கிளிக் செய்தால் இதன் கூட்டுத் தொகை டாகுமெண்ட்டின் கீழாகக் காட்டப்படும். கிளிப் போர்டிலும் ஏற்றப்படும். அதன் மூலம் கூட்டுத் தொகையை எங்கு வேண்டு மானாலும் ஒட்டிக் கொள்ளலாம். இதில் என்ன விசேஷம் என்றால் எண்களைக் கூட்டுவதற்கு + அடையாளமும் தரலாம். ஜஸ்ட் ஒரு ஸ்பேஸ் அடையாளமும் தரலாம். எடுத்துக்காட்டாக 220+419 982 என டைப் செய்தால் 419 மற்றும் 982க்கும் இடையே உள்ள ஸ்பேஸ் கூட்டல் அடையாளத்திற்கு இணையாக எடுத்துக் கொள்ளப்பட்டு மூன்று எண்களும் கூட்டப்பட்டு விடையாக 1621 கிடைக்கும். எனவே இனி வேர்டில் ஏதேனும் பட்டியலில் வகைகளை எண்களுடன் அமைத்தால் தாராளமாக அவற்றைத் தேர்ந்தெடுத்து கால்குலேட் கட்டளை மூலம் கணக்கிடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X