உச்சா போயிட்டேன்!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

இன்ஜினியராக பணிபுரிகிறேன்; வயது, 26 ஆகிறது; கேரள மாநிலம், கோழிக்கோடு, வெள்ளிமாடுகுன்னு பகுதியில் உள்ள, அம்ரித வித்யாலயத்தில், ஒன்றாம் வகுப்பு படித்த போது, கிடைத்த அனுபவம் இது!
தேர்வுக்கு முன் தினம், ஆசிரியர், 'போர்ஷன்' முடிக்கும் அவசரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரது ஆவேசம் கண்டு, அனுமதி கேட்க பயந்து, வகுப்பறையிலேயே, உச்சா போயிட்டேன்; உடன் படித்த மாணவ, மாணவியர் கிண்டல் செய்து சிரித்தனர்; அவமானத்தில், தலைகுனிந்து அழுது கொண்டிருந்தேன்.
வகுப்புத் தோழி ஆத்மா, ஆசிரியர் அனுமதியுடன், ஆயாவிடம் அழைத்துச் சென்றாள்; விவரம் கூறி, 'டவல்' வாங்கி கொடுத்து, ட்ரவுசரை அலசி, காய வைக்க சொன்னாள். பின், வகுப்பறைக்கு அழைத்து வந்து, பக்கத்திலேயே அமர்ந்து, கவலை மறக்க பேசி, நட்பின் சிறப்பை உணர்த்தினாள்.
ஆத்மாவின் கருணை உள்ளம், என் மனதில் பசுமரத்தாணியாக பதிந்தது. நான்காம் வகுப்பில், வேறு மாநிலத்திற்கு சென்று விட்டேன்; எந்த தொடர்பும் இல்லை. ஒரு நாள், முகநுாலில் அடையாளம் கண்டவள், திருமணத்திற்கு அழைத்தாள்; நிகழ்வில் பங்கேற்றேன்.
இருவரும் மருத்துவர்கள். தோழியின் கணவர் என்னைப் பார்த்தவுடன், 'ஓ... விக்னேஷ் என்பவர் நீங்கள் தானா...' என்று, கை குலுக்கி சிரித்தார்; என் முகத்தில் அசடு வழிந்தது. சின்னஞ்சிறு வயதில், ஆத்மா நடந்து கொண்ட விதத்தை எண்ணி, மகிழ்கிறேன்; ஆத்மார்த்த நட்பு என்பது, இதுதான் போலும்!
- டி.விக்னேஷ், சென்னை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.