நண்பேன்டா!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

அடர்ந்த காட்டு பகுதியில், மா, பலா, அரசு என, பல மரங்கள் இருந்தன. அவற்றின் நிழலில், விலங்குகள் ஓய்வு எடுத்து கொண்டன. பலா மரத்திற்கு, அதன் நிழலில் விலங்குகள் ஓய்வு எடுப்பது பிடிக்கவே பிடிக்காது. அவற்றை விரட்ட வேண்டும் என்று எண்ணியது.
ஒரு நாள் -
மரங்கள், தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தன. அப்போது பலாமரம், ''இன்று முதல் இந்த காட்டில் வாழும் எந்த விலங்கையும், அருகில் வர, அனுமதிக்க மாட்டேன்!'' என்று எரிச்சலோடு சொன்னது.
''ஏன் அப்படி சொல்கிறாய்... அவை என்ன செய்தன,'' என்று கேட்டது அரசமரம்.
''விலங்குகள் வந்தாலே, துர்நாற்றம் வீசுகிறது; வேட்டையாடியவற்றை, நிழலில் போட்டு உண்கின்றன; அதனால், என்னை சுற்றி, மிகவும் அசுத்தமாகிறது,'' என்று கோபத்துடன் சொன்னது பலா மரம்.
''உண்மைதான். குரங்குகள், கிளைகளில் ஏறி தாவுகின்றன; பழங்களை பறித்து வீணடிக்கின்றன; விலங்குகள் அருகில் வர, நானும் அனுமதிக்க மாட்டேன்,'' என்றது மாமரம்.
அப்போது குறுக்கிட்ட பூவரச மரம், ''நண்பர்களே... விலங்குகளை பற்றி மட்டும் தான் புகார் சொன்னீர்கள்; இந்த பறவைகள் செய்யும் அட்டகாசத்தை கேட்கிறீர்களா... எப்போதும், கிளைகளில் அமர்ந்து சத்தம் போடுகின்றன; ஒரு நிமிடம் கூட, நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவை கூடுகட்டும் காலத்தில், குச்சுகளுக்காக, கிளைகளை உடைத்து, உடைத்து காயப்படுத்துகின்றன. அதனால், நான் பறவைகளையும் அருகில் நெருங்க விடப் போவதில்லை,'' என்று கூறியது.
இதைக் கேட்டு கொண்டிருந்த, அரச மரம், ''நண்பர்களே! மரங்களாகிய நாமும், விலங்குகளும், பறவைகளும் ஒருவரை ஒருவர் நம்பியே, வாழ்கிறோம்; நமக்கு உதவி செய்பவர்களால், சிறு தொந்தரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக, அவர்களை ஒரேயடியாக புறக்கணித்துவிட கூடாது; பொறுத்து வாழ்வதே நல்லது,'' என்று அறிவுரை கூறியது.
அரச மரத்தின் அறிவுரையை, எந்த மரமும் ஏற்கவில்லை.
'அரச மரமே! உன் மீது மதிப்பும், மரியாதையும் இருக்கிறது; ஆனால், விலங்குகளை பொறுத்தவரை, எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை' என்று மற்ற மரங்கள் தீர்மானமாக சொல்லிவிட்டன.
வேப்ப மரத்திற்கு மட்டும், அரச மரத்தின் அறிவுரை சரியாக தோன்றியது. எனவே, அது மற்ற மரங்களுடன் சேராமல், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தது.
சில நாட்கள் சென்றன-
சிறுத்தை ஒன்று, பலா மரத்தின் அடியில் இளைப்பாற வந்தது. அதை கண்ட பலா மரம், வேகமாக கிளைகளை அசைத்தது; இலைகளை படபடவென்று அடித்து, ஓசையெழுப்பியது; அச்சம் கொண்ட சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.
இதைக் கண்ட பலா மரம், மனதுக்குள் சிரித்து கொண்டது. அரச மரத்தையும், வேப்பமரத்தையும் தவிர மற்ற மரங்கள் அனைத்தும் விலங்குகளையும், பறவைகளையும் அச்சமூட்டி விரட்டின.
விலங்குகளும், பறவைகளும், வேம்பு, அரச மரங்களிடம் தஞ்சம் புகுந்தன. அவற்றின் நிழலில் படுத்து இளைப்பாறின. பறவைகள், அந்த மரங்களில் வசிக்க துவங்கின; சில பறவைகள், மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டன.
ஒரு நாள் -
சில மனிதர்கள், திடீர் என, காட்டுப் பகுதிக்கு வந்தனர். அங்கும், இங்கும் நடந்து, இறுதியாக பலாமரத்தின் அடியில் வந்து நின்றனர்.
அவர்களில் தலைவர், ''பலா மரமும், மாமரமும், பூவரசு மரமும்தான் சரியானவை. ஏனென்றால், நாம் வனத்துறையினருக்கு தெரியாமல் இரவில்தான் மரத்தை வெட்ட வருவோம்; நான் கண்காணித்த வரையில், அரச மரம் மற்றும் வேப்ப மரத்தின் அருகே, புலி, சிறுத்தை போன்றவற்றின் நடமாட்டம் உள்ளது. வேப்பமர பொந்தில் பாம்பு கூட இருப்பதாக தெரிகிறது. கூடவே பறவைகளும், கூடுகட்டி குஞ்சு பொரித்துள்ளன. அருகில் போனால், பறவைகள் கூச்சலிட்டு நம்மை காட்டி கொடுத்துவிடும்; எனவே, இன்று இரவு, அரசு, வேம்பு தவிர, மற்ற மரங்களை வெட்டலாம்,'' என்று கூறினார்.
மற்றவர்கள், அதுவே சரியென்று புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் பேசியது, மரங்களின் காதிலும் விழுந்தது.
பலாவும், மாமரமும், பூவரசும் அச்சத்தால் நடுங்கின. 'ஐயோ! இன்று இரவு வெட்டி விடுவார்களே...' என்று நிலைகுலைந்து வருந்தின; அச்சத்தை, அரசமரத்திடம் கூறின.
''பார்த்தீர்களா... விலங்குகள் மற்றும் பறவைகளின் நடமாட்டம் இருப்பதால், மனிதர்கள் என்னையும், வேப்ப மரத்தையும் வெட்ட துணியவில்லை; அவற்றை புறக்கணித்த உங்களை வெட்ட தீர்மானித்துள்ளனர். பறவைகளையும், விலங்குகளையும் சார்ந்தே, நாம் வாழ்கிறோம் என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா...'' என்றது அரச மரம்.
'மன்னித்து விடுங்கள்; மனிதர்களிடமிருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள்' என்று வேண்டிக் கொண்டன மரங்கள்.
''பயப்படாதீர்கள்... நிச்சயம் உதவி செய்வேன்,'' என்றது அரச மரம்.
இரவில், அந்த தீய மனிதர்கள் மரங்களை வெட்ட வந்தனர். முதலில் பலா மரத்தின் அருகே சென்றனர். அப்போது திடீரென்று, புலி ஒன்று உறுமியபடி பாய்ந்து வந்தது. இதைக் கண்ட மனிதர்கள், பயந்து ஓடி, வேப்ப மரம் அருகே சென்றனர்.
வேப்ப மரத்தின் அருகில், யானை ஒன்று பிளிறியபடி வந்தது; பறவைகள் கூச்சல் போடத் துவங்கின; பாம்புகளும் தங்கள் பங்கிற்கு சீறின. மரத்தை வெட்ட வந்தவர்கள், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்.
மரங்கள் நிம்மதி அடைந்தன; அவை, அரச மரத்திற்கு நன்றி கூறின.
''பார்த்தீர்களா... புலிகளுக்கும், சிறுத்தைகளுக்கும், யானைகளுக்கும் தஞ்சம் அளித்ததால், அவை நன்றியுணர்வோடு நடந்து கொண்டன. உங்களை காப்பாற்ற உதவி செய்தன.
''இனியேனும் பறவை, விலங்குகளிடம் நட்போடு நடந்து கொள்ளுங்கள்; அவை பாதுகாப்பு அளிக்கும். உறவுகளால், சில சங்கடங்களும் இருக்கும்; அவற்றைப் பொறுப்பது நன்மையை தரும்!'' என்று அறிவுரை கூறியது அரச மரம்.
மரங்கள், பறவைகளை அழைத்து தங்களுடன் வசிக்கும் படி வேண்டின; விலங்குகளை, நிழலில் இளைப்பாறும்படி வேண்டின. அவ்வாறே, விலங்குகளும், பறவைகளும் நட்பு பாராட்டின. இப்போதெல்லாம் மரங்களை வெட்ட எவரும், அப்பகுதிக்கு வருவதில்லை.
குட்டீஸ்... எப்பவும் நண்பர்களிடம் அன்பாக பழகுங்க; விட்டுக் கொடுத்து போங்க... வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், உங்க ரூமை விட்டு வெளியே வராமல், கம்ப்யூட்டர், வாட்ஸ் ஆப்பே கதி என்று இருக்காதீங்க... கொஞ்சம் விட்டுக் கொடுத்து போனா, ஆபத்து நேரத்தில் உதவுவர். சரியா...

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X