ஹேப்பி நியூ இயர்! - 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

தங்கள் கலாசாரத்துக்கு ஏற்ப, அந்தந்த நாடுகளில் புத்தாண்டு கொண்டாடினாலும், உலகம் முழுவதும், நடைமுறையில் உள்ளது ஆங்கில புத்தாண்டு தான். ஜனவரி 1ம் தேதி அடிப்படையில், சர்வதேச நாள்காட்டி அமைந்துள்ளது. உலகத்தோடு ஒட்டி, ஆங்கிலப் புத்தாண்டை இனிமையாக வரவேற்போம்!

தங்க நிற வெளிச்சம் பரவட்டும்!
இனிய நிகழ்ச்சிகளும், நினைவுகளும், வாழ்வில் நிரம்ப வேண்டும் என்பதுதான், நம் விருப்பமும் வேண்டுதலும். அதற்காகத் தான், வாழ்த்துகளை பகிர்கிறோம்.
மனித குல வரலாற்றில், வளர்ச்சி ஒரே நாளில் நடந்துவிடவில்லை; படிப் படியாகத்தான் நடந்து வருகிறது. மனித இனம், போக வேண்டிய துாரம் அதிகம். வாழ்த்துகள், இந்த துாரத்தின் குறியீடு; அது வளர்ச்சியை எட்டும் நம்பிக்கையை தருகிறது.
பயணம் துவங்கும் தருணம் இது. ஆம்... புதிய ஆண்டின் நுழைவுப் படியில் நிற்கிறோம்; இந்த ஆண்டில், 365 படிகள் உள்ளன. அவை, வாழ்த்துகளால் நிரம்பியவை; நன்மையைத் தேடும் நம்பிக்கைகள்.
பண்டிகைகள் உற்சாகம் தருபவை. மற்ற பண்டிகைகளை விட, புத்தாண்டு உலகத்தை, ஒரே கோட்டில் இணைக்கிறது. இனம், மதம், நாடு என்ற எல்லைகளைக் கடந்தது. குதுாகலத்துடன், ஒளி பரவுகிறது; தங்க நிற வெளிச்சம் கண்களை நிறைத்து பயணப்பாதையைக் காட்டுகிறது!

ஜூலியன் நாட்காட்டி!
போப் கிரிகோரியால், 1582ல், உருவாக்கப் பட்டது, கிரிகோரியன் நாட்காட்டி. இதை, மேற்கத்திய நாட்காட்டி, கிறிஸ்துவ நாட்காட்டி என்றும் அழைப்பர். ஜூலியன் நாட்காட்டியே, சில மாற்றங்களுடன் கிரிகோரி நாட்காட்டியானது. கி.மு., 713ல், ரோம அரசு, ஜூலியன் நாட்காட்டியை நடைமுறைப்படுத்தியிருந்தது. கிரிகோரியன் நாள்காட்டி தான், இப்போது, உலக காலண்டராக உள்ளது.

பல இடங்களில் பல மாதிரி!
சீனாவில், ஜன., 21 முதல், பிப்., 21க்குள் புத்தாண்டு பிறக்கும். அந்த நாட்களில் வரும் முதல் பவுர்ணமியை, புத்தாண்டாக கொண்டாடுவர். சீனர்கள், மாதங்களுக்கு, விலங்குகள் பெயரை சூட்டியுள்ளனர். சீன வழக்கத்தையே, வியட்நாம் நாட்டிலும் கடைபிடிக்கின்றனர்.
இந்தியாவில், வட மாநிலங்களில், 'நவ வர்ஷா' என்ற பெயரில், மார்ச் அல்லது ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.
மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில், யுகாதி தினத்தன்று, 'குதிபத்வா' என்ற பெயரில், புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சிந்தி மக்களும், இதே நாளில் கொண்டாடுகின்றனர்.

வாழ்த்தோடு வருபவை!
வாழ்த்தோடு வருபவை, மூன்று; அவை, சபதம், டைரி, காலண்டர்.
சிறப்பான காலண்டர்கள், கண்ணை, கருத்தை ஆண்டு முழுவதும் கவரும்!
தமிழகத்தில், பயனுள்ளதாய், துவக்கம் முதலே, நம்பர் 1 ஆக, மலர்வது, 'தினமலர்' காலண்டர்தான். அதை வாங்கி, குங்கும பொட்டு வைத்து, சுவரில் மாட்டி, அழகு பார்க்கும் அனுபவத்துடன், அனைத்திலும் முதன்மை பெறுங்கள்!

அடுத்தது டைரி!
ஆண்டையே, கையில் கொடுத்தது போல ஆனந்தம்! முக்கிய நாட்களை, நிகழ்வுகளை குறிப்போம்.

முக்கியமானது சபதம்!
கடைப்பிடிக்கப்படாததே சபதம் என்பது தான் பலரின் அனுபவம்; முன்னேற்றதுக்காக, எடுக்கும் சபதங்களை நிறைவேற்ற முயற்சிப்போம்.

புத்தாண்டு ஜனவரி 1 தானா...
இந்தோனேஷியாவில், இரண்டு புத்தாண்டுகள்; அதிகாரப்பூர்வமானது, ஜனவரி, 1ம் தேதி; மற்றொன்று, இஸ்லாமிய புத்தாண்டு; இது, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.
ரஷ்யாவில், பழமையை கடைபிடிக்கும் தேவாலயங்கள், பழைய ஜூலியன் நாள்காட்டி அடிப்படையில், ஜனவரி, 14ம் தேதியை, புத்தாண்டாக அனுசரிக்கின்றன. வியட்நாமில், பிப்ரவரியில் புத்தாண்டு துவங்குகிறது.
ஈரானில், மார்ச் 21, புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது. மத்திய ஆசியாவில் சில நாடுகள், இதையே கடைபிடிக்கின்றன.
கொரியாவில், ஜனவரி முதல் மூன்று நாட்களை, புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
பாலி தீவில், மார்ச் மாதம் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.
சுவிட்சர்லாந்தில், 1600 முதல், ஜனவரி 1 புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரிட்டனில், 1752 முதல், ஜனவரி 1 புத்தாண்டு.

நடைமுறையில் மாற்றம்!
ஆஸ்திரியா நாட்டில், வியன்னா நகர, புனித ஸ்டீபன் ஆலயத்தில் உள்ள, 'பும்மெரின்' என்ற வரலாற்று சிறப்புமிக்க, பிரமாண்ட மணிகளை, புத்தாண்டில் இயக்குவதை, ரேடியோ மற்றும், 'டிவி'களில் ஒளி, ஒலிபரப்புகின்றனர். இதை நேரடியாக பார்க்க, மக்கள் கூடுவர்.
டென்மார்க்கில், மிக ருசியான விருந்து தயார் செய்கின்றனர். அதுபோன்ற விருந்தை, அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தான், மறுபடி ருசிக்க முடியும். விருந்தின் சுவை, ஆண்டு முழுவதும் பேசப்படும்.
பிரான்சில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் மெயின் ஐட்டமே, ஐஸ்கிரீம் தான். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ரகங்களில், ஐஸ்கிரீம் களம் இறங்கும். 'சாப்பிடு... சாப்பிடு...' என, உருகுவதால், மக்களும் புகுந்து விளையாடுவர்.

உணவில் துவக்கம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தில், வித்தியாசமான நடைமுறைகள் உண்டு! பாரம்பரியமாக, சில வகை உணவுகளை பகிர்ந்து வரவேற்பது, பல நாடுகளில் நடைமுறையாக உள்ளது.
வட்ட வடிவ, 'டோ நெட்' என்ற உணவை பரிமாறி, டச்சு மக்கள், புத்தாண்டை வரவேற்கின்றனர். ஐரீஷ் மக்கள், 'பான்னோக்ஸ்' என்ற கேக்கை, புத்தாண்டில் சாப்பிடுகின்றனர். ஸ்பெயினில், புத்தாண்டு துவங்கும் நள்ளிரவில், 12 திராட்சை பழங்களை சாப்பிடுகின்றனர். .
யூதர்கள் புத்தாண்டை, 'ரோஸ் ஹாஷானா' என்பர்; ஆப்பிள் துண்டுகளை, தேனில் நனைத்து சாப்பிடுவதே புத்தாண்டை வரவேற்கும் சடங்கு; அன்று, கிரீமை தரையில் கொட்டி ஆர்ப்பரிப்பர்.
இங்கிலாந்தில், 'வாஸ்ஸாயில்' என்ற உணவு பரிமாறப்படுகிறது. இதை, வீட்டில் தயாரித்து, குடும்பத்தவர் ருசித்த பின்பே, அக்கம்பக்கத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.