அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

'புட் பாய்சன்' தவிர்க்கலாம்!
'புட் பாய்சன்' எனப்படும் உணவு நஞ்சால், அவ்வப்போது பலர் அவதிப்படுகின்றனர். பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவும், கோடையில் தான், 'புட் பாய்சன்' பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது; உணவு சமைப்பதிலும், சேமிப்பதிலும் சுகாதாரத்தைப் பராமரித்தால், இதை தவிர்க்கலாம்.
'பிரிட்ஜ்' ஐ, சுத்தமாக பராமரிக்கா விட்டால், அதில் வைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகளில் நோய் உண்டாக்கும் கிருமிகள் பரவி, நஞ்சாகி விடும். பிரிட்ஜ் மற்றும் சமையலறையில், பாக்டீரியாக்கள் பரவுவதைத் தவிர்க்க, சில வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்.
கோடையில், துரித உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். சுத்தப்படுத்தும் திரவம் மற்றும் தண்ணீரை உபயோகித்து, வாரம் ஒருமுறை, பிரிட்ஜை துடைப்பது அவசியம். காய்கறி, பழங்களை நல்ல தண்ணீரில், கழுவி உபயோகிக்க வேண்டும். சமையலறை துணிகளை, அவ்வப்போது துவைக்க வேண்டும்.
இறைச்சியை, கவரில் போட்டு, பிரிட்ஜின் கீழ்தட்டில் வைத்தால், கிருமிகள் பரவாது. இறைச்சியுடன், காய்கறி மற்றும் உணவுகளை வைக்க கூடாது. பிரிட்ஜ்க்குள் சரியான குளிர்நிலையைப் பராமரித்தால், வைக்கும் பொருள், 'பிரெஷ்' ஆக இருக்கும்.
காய்கறிகள் மற்றும் இறைச்சி வெட்டுவதற்கு தனித்தனிப் பலகைகளை உபயோகிக்க வேண்டும். இறைச்சியை நன்கு கழுவி, சுத்தப்படுத்திய பின்பே பயன்படுத்த வேண்டும்.
அளவுக்கு அதிகமாக பொருட்களை, பிரிட்ஜூக்குள் திணித்தால், காற்றோட்டமின்றி, கிருமிகள் உருவாகும். பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து, பயன்படுத்த வேண்டும். இறைச்சி, முட்டை மற்றும் பால் போன்ற பொருட்களை நன்கு சமைத்து உண்பது அவசியம்; சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் கவனத்துடன் செயல்பட்டால், உணவு நஞ்சாகும் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

ரொம்ப சுட்டி மீன்!
டால்பின் அழகான, கடல்வாழ் உயிரினம். இதற்கு, வளமான மூளை உள்ளது; அதிபுத்திசாலி; ஒரு டால்பின் மூளை, சராசரி மனித மூளையை விட, அதிக எடை உள்ளது. மனித மூளை, 1,450 கிராம்; டால்பின் மூளை எடை, 1,700 கிராம். மூளை எடை மட்டுமல்ல; அதன் செயல்பாடும் மேம்பட்டது.
சொல்லி கொடுப்பதை, கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். கடலில் துள்ளிப் பாய்வதும், மனிதர்களிடம் கொஞ்சி விளையாடுவதும் கண் கொள்ளாக் காட்சி. கடலையே, விளையாட்டுத் திடலாக எண்ணி, உற்சாக ஊர்வலம் வரும். குட்டிப் போட்டு, பால் கொடுக்கும் பிராணி வகையைச் சேர்ந்தது. பிறந்த நொடியில், கடல் வாழ்க்கைக்கு தயாராகிவிடும் டால்பின் குட்டி.
ஆஸ்திரேலியாவில், டால்பின் விளையாட்டுக் கூடம் ஒன்றில் பயிற்சி பெற்ற சில டால்பின்கள், கடலில் மூழ்கும் மனிதனை, காப்பாற்றும் திறன் உள்ளவை. டால்பின் நிகழ்த்தும் சாகசங்களில், மூழ்கும் மனிதனை காப்பதும் ஒன்று.
டால்பின்கள், நிலத்தில் வாழ்ந்து பின், கடலில் புகுந்தவை என்று, விலங்கியல் அறிஞர்களில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். அவை, கூட்டம் கூட்டமாக வாழும்; அவற்றிற்குள், ஒரு சமுதாயக் கட்டமைப்பு இருப்பது போல தோன்றும்.
நீருக்கு அடியிலும் அபாரமாக பார்க்கும், கேட்கும் திறன் பெற்றவை. டால்பின் கடல் விளையாட்டு அரங்கங்கள், பல நாடுகளில் உள்ளன; லட்சக்கணக்கானோர் தினமும், டால்பின் சாகசங்களை ரசித்து மகிழ்கின்றனர்.

டால்பின்களிடம் கற்க வேண்டிய பாடம்:
* எந்த சூழ்நிலையிலும், வெகு இயல்பாக இருப்பது
* கொடுக்கும் வேலையை கச்சிதமாக முடிப்பது
* இணக்கமான குடும்பமாக, சமுதாயமாக வாழ்வது
* எப்போதும் உற்சாகமாக இருப்பது
* பிற உயிர்களை நேசிப்பது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.