இளஸ்... மனஸ்... (93)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன்; எந்த பாடத்தை கண்டாலும், பயமா இருக்கு ஆன்டி. 'இது கஷ்டம்; நம்மால் படிக்க முடியாது' என்ற எண்ணம் தான் வருகிறது. ரொம்ப சுமாராத்தான் படிப்பேன்; ஒரே மகன் என்பதால், என்னை குறித்து மிகவும் கவலைப்படுகின்றனர் பெற்றோர்.
எந்த வேலையை சொன்னாலும், 'இதை செய்ய முடியாது; இது வராது' என்று தான் சொல்வேன். உடனே, 'மம்மி'க்கு ரொம்ப கோபம் வரும். 'எதையும் செய்வதற்கு முன்பே, ஏன் இப்படி சொல்ற... இப்படி சொல்லி சொல்லியே உருப்படாமல் போற...' என திட்டுறாங்க.
'நான் எதுக்குமே லாயக்கு இல்லை; என்னால் பெற்றோருக்கு எந்த பயனும் இல்லை... எதற்காக உயிர் வாழணும்!' என்று நினைக்கிறேன் ஆன்டி.
எதெற்கெடுத்தாலும் பயம் என்னை வாட்டுது; என்னால் எந்த காரியத்தையும், தைரியமா செய்ய முடியல. சின்ன குழந்தையா இருக்கும் போதே, 'இதை செய்யாதே... அதை செய்யாதே'ன்னு சொல்லி, என்னை பயமுறுத்தி பயமுறுத்தியே பாட்டி வளர்த்துட்டாங்க; இப்போ, 'கோழையா இருக்கியே'ன்னு திட்டினால், நான் என்ன செய்வது ஆன்டி... என்னை எப்படியாவது தைரியசாலிப் பையனா உருவாக்குங்க ப்ளீஸ்...

மகனே... நீ ஒரு ஆண் மகன்; சாதிக்கப் பிறந்தவன். பயம், வெட்கம், எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் செய்து விடும்; இவற்றை எல்லாம் தூக்கி எறி.
அந்த காலத்துல, படிப்பறிவு கம்மி. எனவே, எதற்கெடுத்தாலும் பயப்படுவர்; நீ ஒரே பேரன் என்பதால், பொத்தி பொத்தி வளர்த்திருக்கிறார் உன் பாட்டி.
நீ, வெற்றியுள்ள வாழ்க்கை வாழணும் என்றால், எதற்கும் பயப்படக் கூடாது; தைரியமாக இருக்கணும்; தோல்வியான வார்த்தைகளை பேசினால், உன் வாழ்க்கையும் தோல்வியிலேயே முடிந்து விடும்.
ஜப்பானில், கிமட்டோ என்ற விஞ்ஞானி ஒரு ஆராய்ச்சி செய்துள்ளார். உலகமே, அவரது ஆராய்ச்சி கண்டு வியந்தது; தற்போது, அவர் உயிருடன் இல்லை.
தண்ணீரை, ஒரு டம்ளரில் எடுத்து, அதில், 'அன்பு' என்ற வார்த்தையை எழுதி போட்டு, அந்த தண்ணீரை உறைய வைத்து, 'மைக்ரோஸ்கோப்' மூலம் காட்டினார். தண்ணீரின் மூலக்கூறுகள் அழகிய வடிவத்தில் தெரிந்துள்ளன. பின், 'முட்டாள்' என்ற வார்த்தையை எழுதி போட்டு, காட்டினார்.
அப்போது, தண்ணீரின் மூலக்கூறுகள் மிகவும் கோரமாக இருந்தது. இப்படியாக, நல்ல வார்த்தைகளை போடும் போது, அதன் வடிவம் அழகாக மாறுவதும், எதிர்மறையான வார்த்தைகளை போடும் போது, கோரமாக மாறுவதையும் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
நம் உடலில், ௭௦ சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே, 'எப்போதும் நல்லதையே பேசுங்கள்; அப்போது தான், நோய் நொடிகள் வராது; எப்பவும் சிரித்தபடியே இருப்பவர்களை, நோய் நொடிகள் தாக்காது...' என்கிறார்.
என்ன ஆச்சரியம் பாரு... இதையே தான் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால், அந்த விஷம் உடலில் பாய்ந்து இறப்பவர்களை விட, 'ஐயோ... என்னை பாம்பு கடித்து விட்டதே... நான் இறக்க போகிறேனே' என்ற பயத்தில் இறப்பவர்கள், ௭௦ சதவீதம் பேர் என்கின்றனர். பயம் எவ்வளவு பயங்கரமான ஆயுதம் பார்! இந்த பயம் உனக்கு தேவையா... துாக்கி எறி!
தினமும், கண்ணாடி முன் நின்று, 'நான் ஜெயிக்கப் பிறந்தவன்; எல்லா பாடங்களும் எனக்கு சுலபமாக வரும்; நான் அறிவாளி; நான் தான், 'பர்ஸ்ட் மார்க்' வாங்குவேன்; எனக்கு, எதை பற்றியும் பயம் இல்லை. என்னால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை; நான் மிகவும் தைரியசாலி...'
இப்படி நீ என்னவாக நினைக்கிறாயோ அதை பற்றி பேசு... காலை, மாலை என, தினமும், பத்து நிமிடங்கள் பேசு... அதை அப்படியே, உன் மூளை எடுத்து, நரம்புகளுக்கு சொல்லும்.
இந்த பாடம் எல்லாமே, நமக்கு சுலபமா வரும்; எதுவுமே கஷ்டம் இல்லை; நம்மால் எல்லாமே செய்ய முடியும்; பயப்படாதே என்று கட்டளையிடும். அந்தக் கட்டளைகளை, நரம்பு மண்டலம் அப்படியே செயல்படுத்த ஆரம்பிக்கும். அதன்பின், பயம் தெளிந்து, மிகுந்த புத்திசாலி, தைரியசாலி பையனாக மாறிவிடுவாய்.
இந்த முறையை பயன்படுத்தி பார்... நிச்சயம் நீ வெற்றியுள்ள மாணவனாக வருவாய்... அப்போது, 'ஆன்டி'க்கு கடிதம் போடு; ஓ.கே., எப்பவும் சந்தோஷமா இரு!
- என்றும் மகிழ்ச்சியுடன்
ஜெனிபர் பிரேம்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X