பொன்னான நேரம் வந்தாச்சு!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

சிவன், பெருமாள், முருகன், அம்பிகை என, பல தெய்வங்களுக்கு கோவில் உண்டு. ஆனால், 'காலத்திற்கு' (நேரம்) கோவில் இருப்பதை அறிவீர்களா? மதுரை அருகிலுள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் தான், அந்தக் கோவில் உள்ளது.
இரவில் மட்டுமே திறந்திருக்கும் இக்கோவிலில், அருள்புரிகிறார், காலதேவி.
தெய்வத்திடம் நாம் எத்தனை தான் வேண்டுதல் வைத்தாலும், நல்ல நேரம் வந்தால் தான், அதைப் பெற முடியும். அந்த நல்ல நேரத்தை அருள்பவளாக விளங்குகிறாள், காலதேவி.
பஞ்சபூதங்கள், நவக்கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் என அனைத்தும், இவளின் ஆற்றலுக்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டவை. காலச்சக்கரத்தை இயக்கும் தலைவி இவள். இவளின் கடைக்கண் பார்வை பெற்று விட்டால், கெட்ட நேரமும், நல்ல நேரமாக மாறும். நேரத்தை மாற்றும் கோவில் என்பதால், இது, நேரக்கோவில் என்று அழைக்கப் படுகிறது.
இங்கு, கோவில் விமானம் மட்டுல்ல, கருவறையும் எண்கோண வடிவில் உள்ளது. காலச்சக்கரத்தை குறிக்கும் விதத்தில், வட்ட வளையங்களின் நடுவில், நட்சத்திர நாயகியாக அபய, வரஹஸ்த முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள், காலதேவி. அமாவாசை, பவுர்ணமி நாளில் யாகத்துடன் சிறப்பு பூஜையும், மாசி பவுர்ணமி நாளில் வருஷாபிஷேகமும் நடைபெறும். சூரியன் மறைந்ததும், நடை திறந்து, மறுநாள், சூரிய உதயத்தின் போது சாத்தப்படும்.
இக்கோவிலை வலமிருந்து இடமாக, 11 முறையும், இடமிருந்து வலமாக, 11 முறையும் சுற்றி வந்து வணங்கிய பின், சன்னிதி முன் இருக்கும் காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். பின், அம்பாளுக்கு விளக்கேற்றி வழிபட்டால், துன்பம் நீங்குவதோடு நல்ல நேரமும் வந்து சேரும்.
மதுரை - தென்காசி சாலையில், 45 கி.மீ., துாரத்தில் உள்ளது,
எம்.சுப்புலாபுரம். அங்கிருந்து சிறிது துாரம் நடந்தால், சிலார்பட்டி வந்து விடும்.
எம்.சுப்புலாபுரத்தில் கோவில் இருக்குமிடத்தைக் காட்டும் கைகாட்டி உள்ளது.

தி.செல்லப்பா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
07-ஜன-201805:44:14 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ITHEPOLA MAISUURLENTHU VARACHCHA NIMISAAMBAAL ENRU ORU AMMBAAL KOYIL PAARTHTHURUKKEN
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.