அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

ஏ.சி., ரூமுக்குள் கூட புகை விட்டு மனிதனை மூச்சுத் திணற செய்து விடுவார், 'வெண் குழல் வத்தி' மன்னர், லென்ஸ் மாமா.
ஐந்தாவது வகுப்புப் படிக்கும் போது, ஸ்டார், பாசிங் ஷோ, யானை அல்லது கத்திரி இந்த வகை சிகரெட்களில் ஏதோ ஒன்றை, மூன்று காசுக்கு வாங்கி, முதன் முதலில், திருட்டு, 'தம்' அடித்தாராம்... அடுத்து, ஒன்பதாவது படிக்கும் போது, 'கூல்' சிகரெட் புகைத்துப் பார்த்தாராம்... அதன் பின், டிகிரி, பிஜி படிக்கும் போதெல்லாம், வில்ஸ் பில்டர் கிங்ஸ், நாளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆரம்பித்தவர், இன்று, '555'ஐ ஊதித் தள்ளுகிறார்.
வெளிநாடுகளில் லென்ஸ் மாமாவுடன் காரில் பயணம் செய்வது என்றால் பெரும் அவஸ்தை. லண்டனில் இருக்கும் டாக்டர் நண்பர் ஒருவர், 'ஹம்லட்' சுருட்டு தான் பிடிப்பார்... சுருட்டு நாற்றம் குடலைப் பிரட்டும் என்பதை அறிந்திருப்பீர்களே... அவருடன் சேர்ந்து மாமாவும் சுருட்டு பிடிக்க ஆரம்பித்து விடுவார். அதுவும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது! கார், 150 - -160 கி.மீ., வேகத்தில் செல்லும் நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைக்கவும் முடியாது. காரணம், வேகக் காற்று. அப்போது படும் அவஸ்தை இருக்கிறதே...
யார் என்ன, 'அட்வைஸ்' செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார், மாமா.
இது இப்படி இருக்க... இங்கிலாந்து நாட்டு, 'இண்டிபென்டன்ட்' நாளிதழில் ஒரு செய்தி படித்தேன். ('ஏன்யா ரீல் சுத்துரே... உனக்குத் தான் இங்கிலீஷ் தெரியாதே... உதவி ஆசிரியர் யாராவது படித்துக் காட்டி இருப்பர்...' என, நீங்கள் அங்கே சொல்வது, என் காதில் விழத் தான் செய்கிறது... நீங்கள் சொல்வது தான் சரி!)
அச்செய்தியில், சூ பார்கரே என்ற பெண்மணி, 'நான், 38 வருஷமாக சிகரெட் பிடிக்கிறேன்; இப்பழக்கத்தை விட, பல வழிகளில் முயன்றேன்... மனக் கட்டுப்பாட்டு சிகிச்சை, நிக்கோடின் கலந்த சூயிங்கம் மெல்லுதல்
உட்பட, நிக்கோடின் பேச்சஸ் சிகிச்சை கூட எடுத்துக் கொண்டேன். இவை எல்லாம் வெறுப்பைத் துாண்டின... இதனால், வழக்கத்துக்கு அதிகமாக, 'தம்' அடிக்க ஆரம்பித்தேன்...' என்று கூறுகிறார், இப்பெண்மணி.
இப்போது, சிகரெட்டைத் தலை முழுக, பேனா மூடி அளவில், சிகரெட் ஹோல்டர் மாடலில், பிளாஸ்டிக்கில் ஒரு கருவி அறிமுகமாகியுள்ளதாம். இக்கருவியில் உள்ள நிக்கோடினை உறிஞ்சும்போது, அதன் ஆவி, நேரடியாக நாக்கில் படும்போது, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதில்லை என்கிறார், இப்பெண்மணி. மேலும் அவர் கூறும் போது, 'எங்கள் அலுவலகத்தில் சிகரெட் பிடிக்க தடை வந்தபோது, ரொம்ப அவதிப்பட்டேன். நிக்கோடின் சூயிங்கம் மென்றேன்... 'பிரேக்' விடும்போது, சிகரெட் பிடிப்பதற்காக, 'ஸ்மோக்கிங்' ரூமுக்கு ஓடிப் போய் சிகரெட் பிடித்து வந்தேன். இப்போது, இந்தக் கருவியை பயன்படுத்த ஆரம்பித்த பின், சிகரெட் புகைக்க வேண்டும் என்ற நினைப்பு வெகுவாகக் குறைந்துள்ளது...' என்கிறார்.
அப்படி என்ன தான் உள்ளது, இந்தக் கருவியில்?
இதனுள், சிகரெட்டில் இருப்பது போன்றே, 'நிக்கோடின்' குழல் இருக்கும். உபயோகித்த பின், இந்த, 'நிக்கோடின்' குழலை மாற்றும் வசதி இருக்கிறது. பிளாஸ்டிக் குழலை உதட்டில் வைத்து சிகரெட் புகையை உள்ளிழுக்கும் போது, வாயினுள் நுழையும் நிக்கோடின் அளவில், மூன்றில் ஒரு பங்கு வாயினுள் நுழையும்... ஆனால், நுரையீரலை நிரப்பும், கேன்சரை வரவழைக்கும் புகை மட்டும் இதில் கிடையாது. மேலும், சிகரெட் போல சூடாக இல்லாததால், உடனடியாக நுரையீரலைச் சென்று அடைவதில்லை; அதனால், ஆபத்தும் குறைவு!
இங்கிலாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், எட்டு கோடி பேர் சிகரெட் பிடிப்பதை நிறுத்த விரும்புகின்றனராம். இந்தப் புதிய கருவி அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என, அச்செய்தி கூறுகிறது.
இந்தச் செய்தி கட்டிங்கை, லென்ஸ் மாமாவிடம் கொடுத்தேன்... முழுமையாகப் படித்து முடித்தவர், வெட்டும் புலி தீக்குச்சி ஒன்றைக் காலி செய்து, '555' ஒன்றைப் பற்ற வைத்து, ரயில் இன்ஜின் வேலையைத் தொடங்கினார்!

எம்.ஓ.மத்தாய்; மலையாளியான இவர், மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின், 'நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தத்தை எழுதி, பரபரப்பு ஏற்படுத்தியவர். நேருவின் அந்தரங்கங்களை அறிந்தவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்றுத் தீர்ந்தது.
அப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி: கடந்த, 1947ல் குளிர் காலத்தில் லக்னோவுக்கு வருவதாக இருந்தார், நேரு. அப்போது, உ.பி., ஆளுனராக இருந்தார், சரோஜினி நாயுடு. இவரது மகள் பத்மஜாவை நேரு திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி பரவியது. பத்மஜாவும் மிகுந்த பரபரப்போடு இருந்தார். ஆனால், லேடி மவுண்ட் பேட்டனுடன், நேரு வந்து சேர்ந்ததும் சீறினார், பத்மஜா. 1948ல் அரசியல் நிர்ணய சபைக்கு பத்மஜா தேர்ந்தெடுக்கப்பட்டதும், உடனே, நேருவின் வீட்டிற்கு வந்து, பக்கத்து அறையில் தங்க ஆரம்பித்தார், பத்மஜா.
'இவர், இப்படியே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது...' என்று நினைத்து, 'கிழக்கிந்திய நாடுகளுக்கு சுற்றுலா போகும் போது, வழியில், நேரு வீட்டில் தங்குவார், மவுண்ட் பேட்டனின் மனைவி...' என்று பத்மஜாவிடம் தெரிவிக்க, உடனே கோபித்துக் கொண்டு வெளியில் போய் தங்கினார், பத்மஜா.
இந்திராவைக் கூப்பிட்டனுப்பி, நேரு தனக்கு எழுதிய கடிதங்களை எல்லாம், தான் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னார், பத்மஜா.
உடனே, என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொன்னார், இந்திரா; நான் சிரித்தேன்.
ஒரு ஆண்டு சென்றதும், நேருவின் படுக்கை அறையில் லேடி மவுண்ட் பேட்டனின் இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து, தன் படம் ஒன்றையும் நேரு பார்க்கும்படியாக மாட்டி வைத்தார், பத்மஜா. ஆனால், அதை அப்புறப்படுத்தி விட்டார், நேரு.
காசியிலிருந்து, 1948ல் டில்லி வந்தார், ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசி. அவருக்கு பேட்டியளித்தார், நேரு. ரொம்ப அழகாக, இளம் வயதினளாக இருந்தாள், சந்நியாசினி. அதன் பின், அவள் அடிக்கடி நேருவைப் பார்க்க வந்து போய் கொண்டிருந்தாள்.
ஒருநாள் திடீரென்று மறைந்து விட்டாள், ஷாரதா மாதா. நவம்பர், 1949ல் பெங்களூரில் இருந்த ஒரு கன்னிமடத்தினர், ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினர்.
வட மாநிலத்திலிருந்து தங்கள் கன்னி மடத்திற்கு ஒரு பெண் வந்தாள் என்றும், அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்து விட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய் விட்டாள் என்றும், இந்தியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் பிரதம மந்திரியால் எழுதப்பட்டவை என்று அறிந்து, அனுப்பி யுள்ளதாகவும், கன்னிமடத் தலைவி (வெளிநாட்டு மாது) வந்தவரிடம் குறிப்பு அனுப்பி இருந்தார்.
இந்த விஷயங்கள் நேருவுக்குச் சொல்லப்பட்டன; அவர் கடிதங்களை வாங்கிக் கிழித்தெறிந்தார்.
சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய ஒரு சம்பவம் இப்போது என் ஞாபகத்துக்கு வருகிறது. போசுடன் கூட இருந்த, ஏ.ஸி.என்.நம்பியார் என்னிடம் சொன்னது இது... ஜெர்மனியில், போசுடன் பணிபுரிந்த ஒரு ஆஸ்திரியப் பெண், போஸ் மூலம் கருவுறவே, கருச்சிதைவு செய்ய வேண்டும் என்று நினைத்தார் போஸ். ஆனால், அவள் கருவுற்று பல மாதங்களாகி விட்டபடியால் கருச்சிதைவு ஆபத்தெனக் கருதப்பட்டது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் போசுக்கு விருப்பமில்லை. அதனால், சீக்கிரமே, ஒரு நீர் மூழ்கிக் கப்பலில், ஜெர்மனியை விட்டு ஜப்பான் சென்று விட்டார், போஸ்.
இந்தியாவை விட்டு போன பிறகும், நேருவுக்கு கடிதங்கள் எழுதுவார், லேடி மவுண்ட்பேட்டன். 'அவருக்கு' என்று போடப்பட்டு வரும் அந்தக் கடிதத்தை மட்டும் பிரிக்க எங்களுக்கு உரிமை கிடையாது. அதை, நேருவே நேரடியாகப் பிரித்துப் படிப்பார்.
— பெரிய இடத்து சமாசாரங்கள் இப்படித்தான் இருக்கும் போலும்!

சென்னை ஐகோர்ட் வாசலில் கேட்டது:
வக்கீல்: ''நான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லணும்...''
கட்சிக்காரர்: ''சரிங்க!''
வக்கீல்: ''மறக்கக் கூடாது...''
கட்சிக்காரர்: ''சரிங்க!''
வக்கீல்: ''மறந்து போனால் என்ன செய்வே?''
கட்சிக்காரர்: ''நீங்க தான் கோர்ட்டிலே இருப்பீங்களே... கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்!''

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy - chingola,ஜாம்பியா
02-ஜன-201814:55:52 IST Report Abuse
ramasamy நேரு இந்தியாவிற்கு பல நன்மைகள் செய்து உள்ளார். சுதந்திரம் வாங்கிய பொது கிட்டத்தட்ட உணவு பஞ்சம் வரும் நிலை தான். அதை போக்க எதனை நாடுகளில் உதவி பெற பிரதமர் என்ற முறையில் கையேந்தினார். இப்போது ஆளும் எதனை நல்லவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள். பஞ்ச ஷீலா கொள்கை, ஐ நா சபை என்று பல நல்லவற்றை செய்தவர் நேரு. ராஜிவ் காந்தி இல்லை என்றால் நாம் கம்ப்யூட்டரில் உலக அளவில் இந்த நிலை அடைந்திருக்க முடியாது. சந்திரா பாபு நாயுடு வால் ஹைதராபாத்தும் ஆந்திர மக்களும் கம்ப்யூட்டரில் இப்போது உலக அளவில் கோடி கட்டி பறக்கிறார்கள். நல்லவரை ஏற்போம். அவரும் மனிதர் தானே. இங்கேயே பல தலைவர்கள் ரயிலில் பயணம் செய்யும் பொது இடையில் அவருக்கு தேவையானதை தந்து வளர்ந்தவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
31-டிச-201707:14:42 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இது போன்ற தலைவர்கள் தான் நம்மை ஆண்டு வந்திருக்கின்றனர், , இதே போன்ற காம பிசாசுகள் வாழ்ந்த காலத்தில் காமராஜர் போன்றோரும் வாழ்ந்துள்ளனர்
Rate this:
Share this comment
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
03-ஜன-201805:46:37 IST Report Abuse
.Dr.A.Josephகாமராஜரை சொன்னால் கக்கனை சொல்லாமல் இருக்க கூடாது....
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
31-டிச-201707:06:58 IST Report Abuse
கதிரழகன், SSLC நேரு ஒரு ஸ்த்ரீ லோலன், எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஊருக்கு ஒரு வைப்பு அவருக்கு.
Rate this:
Share this comment
Dynamo - Den Haag,நெதர்லாந்து
04-ஜன-201822:19:31 IST Report Abuse
Dynamoசுபாஷ் சந்திரபொஸ் நீர்முழ்கி கப்பல்ல தப்பிச்சி போய் இருக்காரு......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X