அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

என்.வசந்தான், சிவகாசி: இன்றைய இளம் தலைமுறையினர், 'இன்டர்நெட்'ஐ பயன்படுத்துவதில், நன்மையை விட தீமை அதிகம் என்று சொல்கின்றனரே... இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது?
'இன்டர்நெட்' ஒரு நெருப்பு... வீட்டின் விளக்காக நெருப்பை பயன்படுத்தலாம்; வீட்டையே எரிக்கவும், அதனால் முடியும். 'இன்டர்நெட்' தகவல் களஞ்சியம்; அறிவு வளர்ச்சிக்கு அபார உதவி செய்யும். அதே நேரம் அதில் விரசங்களும், ஆபாசங்களும் உண்டு. இளைய தலைமுறை வழி தவற வாய்ப்புண்டு; எல்லாம் பயன்படுத்தும் விதத்தில் அடக்கம்!

பி.ரகுவரன், விருதுநகர்: கையில் காசு இருக்கும்போது உள்ள மனோ திடமும், நம்பிக்கையும் அது செலவான பின் இருப்பதில்லையே...

உண்மைதான்... ஒரு பெரியவர் ரொம்ப வருடம் முன், எனக்கு சொன்ன அறிவுரை... 'தம்பி... சம்பாதிப்பது சுலபம்; அதைச் சேர்த்து வைப்பது தான் சிரமம், -கஷ்டம். சேர்த்து வைக்கும் கலையை கற்றுக்கொண்டு விட்டால், யானை பலம் இருக்கும் உன்னிடம்...' என்றார். அவரது அறிவுரையில் இருந்து இம்மி அளவும் விலகவில்லை நான்!

ஆர்.வெங்கட்ராம், சென்னை: நான் தினமும் ஏதாவது ஒரு பிரச்னையைச் சந்தித்து வருகிறேன்; பிரச்னைகளே இல்லாமல் வாழ்வது எப்படி?
பிரச்னை இல்லாதவர்கள் உலகில் இல்லை என்பதை முதலில் நினைவில் வையுங்கள்; அமெரிக்க அதிபராக, உலகின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் டிரம்ப்க்கு பிரச்னை இல்லை என்றா நினைக்கிறீர்கள்... 'ரிலையன்ஸ்' தொழில் குழுமத்தின் தலைவர்கள் அனில் மற்றும் முகேஷ் அம்பானி மிகப் பெரிய தனவந்தர்கள்... அவர்களுக்கு பிரச்னைகளே இருக்காது என்றா எண்ணுகிறீர்கள்... நம்மூர் தெரு பிச்சைக்காரன், 'அவனுக்கென்ன... பிரச்னை இல்லை...' என்றா முடிவு செய்கிறீர்கள்?
தவறு... அவரவர் நிலைக்கு ஏற்ப, உலகின் அனைத்து மனிதருக்கும் பிரச்னைகள் இருக்கத் தான் செய்கின்றன. பிரச்னைகளே இல்லாத மனிதர்கள் உலகில் எவரும் இல்லை!

* எல்.பாலாஜி, ராமநாதபுரம்: சிலர், எந்த திட்டம் தீட்டினாலும் தவிடுபொடி ஆகிறது; இருந்தாலும், சப்பை கட்டு கட்டி, அதை பூசி மெழுக முயல்கின்றனரே...
தம்மிடம் இல்லாத திறமையை, ஆற்றலை இருப்பதாக எண்ணி ஏமாந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். அது மட்டுமல்லாமல், தம்மைத் தாமே ஏமாற்றி கொண்டிருப்பவர்கள், 'புலியைப் பார்த்து, பூனை சூடு போட்டுக் கொண்டதாம்...' என்று ஒரு பழமொழி சொல்வார்களே... அப்படிப்பட்டவர்கள் இவர்கள்!

* எம்.கார்த்திக், வந்தவாசி: மனிதன் தடுமாறுவது எப்போது?
மனசாட்சியை அடகு வைக்கும்போது, இழக்கும்போது... மனசாட்சிக்கு உண்மையாகவே நடப்பவன் எப்போதும் தடுமாறுவது இல்லை!

எம்.ஸ்ரீமதி, கூடுவாஞ்சேரி: காதலிக்கும் இளம்பெண்கள், தங்கள் காதலைப் பற்றி, திருமணமான, வயதில் பெரிய பெண்களிடம் கூறலாமா?
திருமணமான அப்பெண்ணிடம், இந்த இளம் பெண்ணுக்கு இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்து கூறி, ஆலோசனை கேட்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X