இறைவனின் அருள் இருந்தால்....
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று, தாயை விட கருணை நிறைந்தவர், சிவபெருமான் என்பார் மாணிக்கவாசகர். அதை, நிரூபிக்கும் வரலாறு இது:
திருச்சிக்கு அருகில் உள்ள திருமாந்துறை, ஒரு காலத்தில் ஆம்ரவனம் என்று அழைக்கப்பட்டது. இவ்வனத்தில், ஆணும், பெண்ணுமாக இரு மான்கள் தங்கள் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, அக்காட்டிற்கு வந்த வேடன் ஒருவன், அம்பு எய்து, இரு மான்களையும் வீழ்த்தி, அவற்றை துாக்கிப் போய் விட்டான்.
பெற்றோரை இழந்த மான் குட்டிகள், பாலுக்கு பரிதவித்து அழுதன.
மான் குட்டிகளின் துயரைக் கண்ட, மிருகண்டு மகரிஷியின் சீடர்கள், அத்தகவலை மகரிஷியிடம் தெரிவிக்க, அவர், 'சம்போ மகாதேவா... ஆம்ரவனேஸ்வரா...' எனக்கூவி, சிவபெருமானிடம் முறையிட்டார்.
அதைக்கேட்ட அம்பிகை, 'இறைவா... தாயை இழந்த இக்குட்டிகள் பாலுக்காக பரிதவிப்பதை என்னால் காணமுடியவில்லை. நாம் அக்குட்டிகளின் துயரை தீர்க்க வேண்டும்...' என்றார். அதற்கு சிவபெருமான், 'தேவி... அவரவர் செய்த கர்ம வினையின் பலனை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும்; நடந்ததை சொல்கிறேன், கேள்...' என்றவர், மான்களின் பூர்வ ஜென்மத்தைப் பற்றி கூறத் துவங்கினார்...
'கனகஜாங்கலம் எனும் அக்ரஹாரத்தில் அந்தணத் தம்பதியர் இருந்தனர். அவர்களின் குழந்தைகள் கன்றுக் குட்டியை அவிழ்த்து, அவை பால் குடிப்பதற்கு முன்பாகவே, இழுத்து சென்று கயிறால் கட்டி விடுவர். அவர்களின் தாய் தந்தையரோ, பசுவிற்கு சரியாக உணவளிக்காமல், பாலை கறப்பதிலேயே குறியாய் இருப்பர்; மாடு, கன்றுகளை மேய்த்து பராமரிக்கும் இடையனுக்கு கூலியும் கொடுக்க மாட்டார்கள்.
'அப்பாவத்தின் காரணமாக, அந்தண தம்பதி மான்களாகவும், அவர்களின் பிள்ளைகள் மான் குட்டிகளாகவும் பிறந்தனர். கூலி கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட இடையன், வேடனாக பிறந்தான்; கூலி தராமல் தன்னை ஏமாற்றியவர்களை (மான்களை) அம்பால் அடித்து, உணவாக எடுத்துச் சென்று விட்டான் வேடன்.
'அந்தண தம்பதியின் பிள்ளைகளோ கன்றுக்கு பால் விடாமல், அவற்றை கட்டிப் போட்டாலும், ஒரு நற்காரியம் செய்துள்ளனர். அது, வேதங்களில் கரை கண்டவரான உக்ரதபஸ், காசிக்கு போகும் வழியில், இவர்கள் இருந்த இடத்திற்கு வந்தபோது, அச்சிறுவர்கள் உக்ரதபஸ் பூஜை செய்வதற்காக, மலர்கள், தளிர்கள், இலைகளை பறித்து வந்து கொடுத்தனர். அப்புண்ணியத்தின் காரணமாகவே, இந்த ஷேத்திரத்தில் வந்து பிறந்து, நம்மால் பாலுாட்டப்படும் பாக்கியத்தை பெறப் போகின்றனர்...' எனக் கூறி, அம்பாளுடன் மான் வடிவம் எடுத்து, மான் குட்டிகளுக்கு பாலுாட்டி அவைகளை காப்பாற்றினார்.
அந்நேரத்தில் மிருகண்டு முனிவர், தன் சீடர்களிடம், 'இப்போது, நீங்கள் போய் அந்த மான் குட்டிகளின் நிலையை பார்த்து வாருங்கள்...' என்றார். அவர்களும் பார்த்து வந்து, 'குருநாதா... எப்படியோ தெரியவில்லை; குட்டிகள் பால் குடித்து, துள்ளிக் குதித்து விளையாடுகின்றன...' என்று வியந்தனர்.
உடனே விரைந்து போய், மான் குட்டிகளை கண்டார், மிருகண்டு முனிவர். தன் ஞான திருஷ்டியால் விபரம் அறிந்து, சிவபெருமானின் கருணையை எண்ணி மகிழ்ந்தார்.
சிவபெருமானால் பாலுாட்டப்பட்ட குட்டிகள், கைலாயத்தில் சிவபெருமானின் கணங்களின் தலைவர்களாக ஆயின!

தெரிந்ததும் தெரியாததும்!

மார்கழி மாதத்தில் ஏன் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை?
மார்கழி மாதத்தை, பீடை மாதம் என்று சிலர் கூறுவர். இது, மூட நம்பிக்கை; மார்கழி மாதம் முழுவதுமே, கடவுளை வழிபடும் மாதமாகவே அனுசரிக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டுக்கு, இடையூறு வந்து விடக்கூடாது என்பதாலேயே, இம்மாதத்தில், மற்ற நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்வதில்லை.
திறக்காத கோவில்களும் திறந்திருக்கும் ஒரே மாதம் மார்கழி மாதம். அத்துடன், விவசாயிகள், கரும்பு, நெல், உளுந்து, வாழை மற்றும் மஞ்சள் போன்றவற்றை இம்மாதத்தில் சேகரித்து வைப்பதால், மார்கழியில் மங்கள நிகழ்வுகளை வைப்பதில்லை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - chennai,இந்தியா
03-ஜன-201813:01:55 IST Report Abuse
bala ஓம் நமச்சிவாய
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X