இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

ரஜினி கெட்டப்பில் நடிக்கும் ஆர்யா!
கஜினிகாந்த் என்ற படத்தில், ஆர்யா நடிப்பதாக தகவல் வெளியானபோது, இது ரஜினியை கிண்டல் செய்யும் படமாக இருக்குமோ என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது, அப்படத்தின், 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட்ட போது, அதில், தர்மத்தின் தலைவன் படத்தில், ரஜினி நடித்தது போன்ற கெட்டப்பில் கையில் பாரதியார் புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ளார், ஆர்யா. அத்துடன், இது, ரஜினியின் பெருமையை சொல்லும் படம் என்றும் ஆர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சி.பொ.,

அம்மா வேடங்கள் பக்கம் திரும்பிய ரம்யா நம்பீசன்!
பீட்சா, சேதுபதி மற்றும் சத்யா உட்பட பல படங்களில் நடித்துள்ள, ரம்யா நம்பீசனிடம், இளம் கதாநாயகர்களுடன் டூயட் பாட, உடல் எடையை குறைக்குமாறு கூறினர், சில இயக்குனர்கள். ஆனால், பல மாதங்களாக போராடியும் அவரால் எடையை குறைக்க முடியவில்லை. அதனால், இளவட்ட நடிகர்களுடன் டூயட் பாடும் ஆசையை ஓரங்கட்டி, சமீபத்தில் திரைக்கு வந்த, சத்யா படத்தில் நடித்தது போன்று குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது மாதிரி, மெச்சூரிட்டியான கதைகள் பக்கம் திரும்பியுள்ளார்.இட்டபடியே ஒழிய, ஆசைப்பட்டு பலன் இல்லை!
எலீசா

இடைவெளியை குறைக்கும் ஜெயம் ரவி!
டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஏப்ரல் மாதம் முதல் சுந்தர்.சி இயக்கும், சங்கமித்ரா என்ற சரித்திர படத்தில் நடிக்கயிருக்கிறார். ஆனால், அப்படத்தில் நடிக்க, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருப்பதால், அதுவரைக்கும் தான் நடிக்கும் படங்கள் வெளியாகாமல் இருந்தால் ரசிகர்களுக்கும், தனக்குமான இடைவெளி அதிகமாகி விடும் என நினைத்து, ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்து விட வேண்டும் என்று புதுமுக டைரக்டர் ஒருவரிடம் கதை கேட்டு ஓ.கே., செய்துள்ளார். அடங்க மறு என்ற பெயரில் உருவாகும் அப்படத்தில், தற்போது நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
சி.பொ.,

மாஸ் ஓப்பனிங் பாடல் கேட்கும் சந்தானம்!
காமெடியனாக இருந்து கதாநாயகனானதால், தனக்கு ஓப்பனிங் பாடல் வைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வரா என்று இதுவரை தயங்கி வந்த சந்தானம், தற்போது தான் நடித்து வரும் அனைத்து படங்களிலுமே ஓப்பனிங் பாடலுடன் தான் என்ட்ரி கொடுக்கிறார். அத்துடன், இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லும்போதே ஓப்பனிங் பாடலில் விஜய், அஜித் படங்களில் இடம்பெறுவது போன்று மாஸாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.
சி.பொ.,

கறுப்பு பூனை!
பையா நடிகை ஏற்கனவே, பிட் பட நடிகை ரேஞ்சுக்கு நடித்து விட்ட நிலையில், மேலும் அவரை தோலுரிக்க சிலர் முயற்சித்தனர். அத்துடன், எக்ஸ்ட்ராவாக, பல லட்சங்களை சம்பளமாக தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டினார். ஆனால், சுதாரித்துக்கொண்ட நடிகையோ, 'இன்னும் கிளாமராக நடிக்க என்னிடம் எதுவுமே இல்லை; ஆளை விடுங்க...' என்று கும்பிடு போட்டு நழுவி விட்டார்.

சூப்பர் ஸ்டாருடன் நடித்த அந்த நடிகர், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக வீடே கதியென்று கிடந்தார். இதனால், குடித்து குடித்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு பெருத்து விட்டார். இதனால், புதிதாக அவரை ஒரு படத்திற்கு, 'புக்' பண்ணியிருப்பவர்கள், 'முதலில் உடம்பை குறைத்து பழைய நிலைக்கு திரும்புங்கள்; இல்லையேல், உங்களை யாரோ புதுமுக நடிகர் என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்வர்...' என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

சினி துளிகள்!
* ஸ்கெட்ச் படத்திற்கு பின், தமிழில் படம் இல்லாத நிலையில், இந்தியில் ஜான் ஆபிரகாமுடன் ஒரு படத்தில் நடிக்கிறார், தமன்னா.
* இரண்டு கதாநாயகர்கள் கதைகளில் நடிக்க மாட்டேன் என்கிறார், அட்டகத்தி தினேஷ்.
* கலகலப்பு படத்தில், அஞ்சலி நடித்தது போன்று, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், நிக்கி கல்ராணியும் கிளாமராக நடித்துள்ளார்.

அவ்ளோதான்!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X