80ம் ஆண்டு விழா காணும் சைபால்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

மதுரை சைபால் நிறுவனத்தை, தாத்தா, சுப்பிரமணியன், அப்பா, சங்கர நாராயணணுக்கு பின், பேரன்கள், எஸ்.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகியோர் திறம்பட நடத்தி வருகின்றனர்.
நவீன யுகத்துக்கு ஏற்ப செயல்படும் இவ்விருவரும், பழைய விஷயங்களை துாசு தட்டி பார்த்த போது, தாத்தா, சைபால் மருந்துக்கு மட்டும் அனுமதி பெற்றிருக்கவில்லை; குழந்தைகளின் செரிமானத்திற்கு, பெரியவர்களுக்கு வரும் நீர் கடுப்பு நோய்க்கு என பல மருந்துகளை தயாரிக்க அனுமதி பெற்றிருந்தது தெரிய வந்தது.
தரமான மருந்துகளை குறைந்த விலைக்கு தரும் சைபாலின் தாரக மந்திரத்துடன், இந்த மருந்துகளையும் பெரிய அளவில் தயார் செய்து, சந்தைப்படுத்த உள்ளனர். இதற்காக, நிறுவனத்தை விரிவுபடுத்தி, மேலும், பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் உள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக, சைபால் நிறுவனத்தின் கதையை படித்தவர்கள், சைபால் நிறுவனம் நடந்து வந்த பாதை, மலர் பாதை அல்ல; தோல்விகளும், சறுக்கல்களும், ஏமாற்றங்களும், எதிர்பாராத அசம்பாவிதங்களும், துரோகங்களும் கொண்ட முள் பாதைதான் என்பதை அறிவர்.
ஆனால், அது அத்தனையையும் பொறுத்து, லட்சியத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களுக்கு, வெற்றியானது, மாலை சூடி வரவேற்கும் என்பதைத் தான், இன்றைய சைபால் நிறுவனம் நமக்கு சொல்கிறது.
வியாபாரம் செய்யணும் என்றாலே, மும்பை, டில்லி மற்றும் சென்னை போன்ற பெரிய ஊர்களுக்கு போனால் தான் ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, தாம் இருக்கும் ஊரிலேயே ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதைப் படிப்படியாக உயர்த்தி, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, மருத்துவ உலகிலும் முத்திரை பதித்து, வெற்றி வாகை சூடி நிற்கிறது, சைபால் நிறுவனம். 'மேக் இன் இன்டியா' என்ற இன்றைய கோஷத்திற்கு, அன்றே வலு சேர்த்து, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது, இந்நிறுவனம்.
இத்தனை பெருமைகளை உள்ளடக்கிய சைபால் நிறுவனம், மதுரையின் சிறந்த தொழில் நிறுவனம் என்பது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வருகிறது. இன்னும் பல புதிய தயாரிப்புகளுடனும், நவீன உத்திகளுடனும் உலா வந்து, நாட்டிற்கும், மக்களுக்கும் பயன் தர வாழ்த்துவோம்!

சைபால் மண்டபம்...
மதுரை என்றாலே, மீனாட்சி அம்மன் கோவிலும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அழகர்கோவிலில் இருந்து கிளம்பும் அழகர், வழியெங்கும் பக்தர்கள் அமைத்திருக்கும் நானுாறுக்கும் அதிகமான மண்டபங்களில் தங்கி அருள்பாலித்தபடி வருவார்.
இதில், ஆற்றுக்குள் அமைந்திருக்கும் சைபால் மண்டபத்தில் அழகர் தங்கும் போது, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசிப்பர். அழகர், 'சைபால் மண்டபத்திற்கு வந்தாச்சா...' என்பதுதான் அன்றைய தினம், அனைவரது வாயிலிருந்து உதிர்க்கப்படும் வார்த்தையாக இருக்கும்.
அறநிலையத்துறை அனுமதி பெற்று, பல ஆண்டுகளாக ஆற்றுக்குள் அழகரை வரவேற்க, மண்டபம் அமைத்து வருகிறது, சைபால் நிறுவனம்.
வெறும் விளம்பரத்திற்காக மட்டும் என்றில்லாமல், அன்று, மண்டபத்திற்கு வரும் பக்தர்களுக்கு, சைபால் மருந்து, விசிறி, மோர் மற்றும் பானகம் போன்றவைகளை வழங்கும் சேவையையும் செய்து வருகின்றனர்.

சினிமாவும், சைபாலும்!
முப்பது ஆண்டுகளுக்கு முன், மதுரையை மையப்படுத்தி, எந்த சினிமா எடுத்தாலும், சைபால் விளம்பரம் வருவது போல காட்டிவிட்டால் போதும், அது பழமையான மதுரை என்பது உடனே மூளையில் பதிவாகிவிடும் என்பது சினிமாக்காரர்களின் கணக்கு; அது நிஜமும் கூட, சுப்பிரமணியபுரம் படம் கூட அதற்கு ஒரு சாட்சி.
இன்றைய சினிமாவும் சைபாலை விடவில்லை. ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான, நண்பன் படத்தில், ஒரு காட்சியில், நண்பரின் வீட்டில் விஜய் சாப்பிட போயிருப்பார், அந்த வீட்டு பெண்மணி சமைத்துக் கொண்டே உடம்பு நமைச்சலை குறைக்க, தோசைக் கரண்டியால் சுரண்டிக் கொள்வார், 'ஏன் இவ்வளவு சிரமம், கொஞ்சம், சைபால் உபயோகிச்சு பாருங்களேன்...' என்று அந்த காட்சியில் டயலாக் வரும்.

நீங்களும் வாழ்த்த விரும்பினால், கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
போன்: 0452-2534108 மொபைல்: 91 - 77083 87080.
முற்றும்
- எல். முருகராஜ்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஜன-201806:53:36 IST Report Abuse
Bhaskaran உண்மை சேத்துப்புண் பித்தவெடிப்பு தொந்தரவுகளுக்காக நான் வெளிநாடு செல்லும்போதெல்லாம் saibol வாங்கி செல்வது வழக்கமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X