அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

அன்புள்ள அம்மாவுக்கு -—
என் வயது, 28; என் கணவரின் வயது, 33. எனக்கு ஐந்து மற்றும் மூன்று வயதுகளில் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரிந்த என் கணவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, மனநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
மனநோய் ஏற்பட்டதால், அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். என் மாமனாரும் இறந்து விட்டார்; மாமியார் மட்டும் உள்ளார். இவர், அவர்களுக்கு ஒரே மகன்.
குழந்தைகளின் படிப்பு செலவை, என் தந்தை ஏற்றுள்ளார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில், அவரும் பணி ஓய்வு பெற்று விடுவார். எனக்கு திருமணமாகாத ஒரு தங்கை உண்டு; பணியில் உள்ளாள். நான், பிளஸ் 2 வரை படித்துள்ளேன். என் கணவர் பணிபுரிந்த அலுவலகத்தில், 'அட்டெண்டர்' வேலை கொடுப்பதாக சொல்கின்றனர்; ஆனால், 'வேலைக்கு செல்ல வேண்டாம்...' என்கிறார், கணவர்.
நாங்கள் குடியிருப்பது வாடகை வீடு; என் மாமியாருக்கு அரசு உதவித் தொகை கிடைக்கிறது. என் கணவருக்கு, அவரது அலுவலகத்திலிருந்து, 5 லட்ச ரூபாய் கொடுத்தனர். அத்துடன், எங்களது சேமிப்பு பணம், 7 லட்ச ரூபாய் என வங்கியில், 12 லட்சம் ரூபாய் உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வட்டியில் தான், காலம் தள்ளுகிறோம்.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு, இந்த கஷ்டம் என்று தெரியவில்லை. என் கணவருக்கு மனநோய் எப்போது குணமாகும் என்று கேட்டால், சரியான பதில் இல்லை. அவருக்கு மன நோய் எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணமும் தெரியவில்லை.
சில சமயம் சாதுவாக இருக்கிறார்; சில சமயங்களில் ஆவேசமாக கத்தி, ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதனால், குழந்தைகள் மிகவும் பயந்து விடுகின்றனர்.
எனக்கு நல்ல ஆலோசனை சொல்வீர்களா அம்மா!
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
இதயநோய், நீரிழிவு நோய் போல் தான் மன நோயும். உலகில், ஐவரில் ஒருவர் மன நலமின்மையாலும், 25 பேரில் ஒருவர், கடுமையான மன நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மன நோயாளிகளில்,
7 சதவீதம் பேர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இந்நோய் ஆரம்ப நிலையில் இருந்தால், ஆலோசனை மற்றும் மருந்துகளால் விரைவில் குணப்படுத்தி விடலாம்.
சில, மன நோய்களை கட்டுப்படுத்த முடியுமே தவிர, ஆயுளுக்கும் நீடிக்கக் கூடியவை.
மன அழுத்தம், பதற்றம், திருமண பிரச்னைகள், குடி பழக்கம், போதை மாத்திரை பழக்கம், சூதாட்டம், பூகம்பம், குடும்ப அங்கத்தினரின் அகால மரணம், ஆண்மையின்மை, ஒரு பொருளின் மீது அதீத வெறுப்பு, விருப்பு, வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகள், பணியிட பிரச்னைகள், உணவு சிக்கல்கள், மறதி நோய், அதீக கற்பனைகள், மிதமிஞ்சிய தற்பெருமை இதெல்லாம் மனநோய் ஏற்பட காரணங்கள் ஆகும்.
கொள்ளு தாத்தா, தாத்தா, தந்தைக்கு மன நோய் இருந்தால், அவர்களது வாரிசுக்கு மன நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
எதிர் மறையாய் யோசிப்பதை மாற்றும் சிகிச்சை, ஆரோக்கியமில்லாத, தேவையில்லாத நடத்தைகளை அகற்றும் சிகிச்சை, கணவனுக்கு மன நோய் இருந்தால், கணவன் - மனைவிக்கு கூட்டாய் ஆலோசனை அளித்தல், நோயாளியின் இறந்த காலத்தை, 'ஹிப்னடைஸ்' செய்து அறிந்து, தகுந்த மருத்துவம் செய்தல், குடும்பத்தில் ஒருவருக்கு மன நோய் இருந்தால், அக்குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் ஆலோசனை அளித்தால் போன்றவை மன நோயாளியை விரைவில் குணப்படுத்தும்.
வங்கியில், பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தாலும், நீயும் வேலை பார்ப்பது நல்லது. உன் கணவரின் ஆட்சேபனையை அன்பாய் அலட்சியப்படுத்து. பணியில் இருந்தவாறே தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் பட்டப்படிப்பு படித்தால், உயர் பதவி பெறலாம்.
உன் கணவருக்கு செய்யப்படும் மனநோய் மருத்துவத்தை மேம்படுத்த, இன்னொரு மனநல மருத்துவரிடம் அபிப்ராயம் பெற்று, உயரிய மருத்துவம் கொடு.
எந்த வயதில் மன நோய் ஏற்பட்டது என்பதை கணித்து, அந்தகால சம்பவங்களை அலசி ஆராய்ந்தால், உன் கணவருக்கு மனநோய் ஏற்பட்டதற்கான காரணம் புரிபடும்.
அவருடைய நலனுக்காக நீயும், உன் குடும்பத்தினரும் வாழ்வதை அவருக்கு உணர்த்துவதுடன், நீயும் அந்நோயின் வீரியத்தை உணர்ந்து, மன நோயாளி என்ற பாவனையை தவிர்த்து, மரியாதை மற்றும் கனிவுடன் நடந்து கொள். 'இந்தாளுக்கு மனநோய் குணமே ஆகாது...' என, அவரை கை கழுவி விடாமல், வீட்டினர் அனைவரின் அன்பும், ஆதரவும் அவருக்குத்தான் என்பதை அவரே உணரும் வகையில் நடந்து கொள்ளுங்கள். நெகடிவ் மனிதர்களை, உன் கணவரிடம் நெருங்க விடாதே!
ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை, பேச்சுகளை, நடத்தைகளை உன் கணவர் மேற்கொள்ள உதவு... நல்ல புத்தகத்தை படிக்க கொடு; உபந்நியாசம் கூட்டி போ... எப்.எம்., ரேடியோ கேட்க வை... ஏதாவது, ஒரு விளையாட்டை விளையாட ஊக்கப்படுத்து. அருங்காட்சியகம் சுற்றிக் காட்டு... புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்.
'உன் வியாதி, உனக்கு அடையாளம் தரக்கூடாது; உன் வலிமையும், தைரியமும் உன் அடையாளத்தை நிர்ணயிக்கட்டும்...' என, உன் கணவருக்கு எழுச்சியூட்டு. உன் காதலும், கரிசனமும் தான் உன் கணவரை குணப்படுத்தும். மருத்துவரை, 50 சதவீதம் நம்பினால், இறைவனை, 50 சதவீதம் நம்பு. வாரா வாரம் கோவிலுக்கு சென்று கணவரின் பெயரில் அர்ச்சனை செய். மனநோயை அதிகரிக்கும் காரணிகளை, அவரின் தினசரி வாழ்க்கையிலிருந்து அகற்று. ஆயுட்காலம் முழுக்க கணவரை கவனித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், அதை, விருப்பத்துடன் ஏற்றுக்கொள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவருக்கு தரப்படும், மருந்து, மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப்படி மாற்று.
உன் கணவரின் மனநோய் குணமாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.senthil kumar - tamilnadu,இந்தியா
03-ஜன-201813:23:50 IST Report Abuse
m.senthil kumar இதற்க்கு ஒரே தீர்வு மனதை ஒருநிலை படுத்தினால் கண்டிப்பாக அவர் பழைய நிலைமைக்கு வருவார். சிலசமயம்தான் மாறிவிடுகிறார் என்கிறீர்கள் கண்டிப்பாக மன நிலை பாதிப்புதான், இதை அவர்களாகவே செய்யவேண்டும் மருந்து மாத்திரைகள் அவரை முழுமையாக குணப்படுத்தாது. நீங்க செய்யவேண்டியது வடலூர் இராமலிங்க சுவாமிகள் கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள் சன்மார்க்க தியானம் செய்வது எப்படி அறிந்து, அல்லது உங்கள் ஊர் இராமலிங்க ஸ்வாமிகள் மன்றம் இருந்தால் அங்கு சென்று விவரத்தை கேட்டறிந்து அதன்படி உங்கள் கணவரை இடைவிடாது தினமும் செய்துவர சொல்லுங்கள் நீங்களும் சேர்ந்து செய்யலாம் மாற்றத்தை வள்ளலார் ஏற்படுத்துவார் இது 100% உண்மை. இது வியாதியல்ல இதை இலவசமாக சொல்லித்தருவார்கள் நீங்கள் வெளியூர் என்றால் Google லில் தியானம் செய்யும் முறை தமிழ் என்று type செய்து பார்த்தால் அதில் விளக்கமாக போடப்பட்டிருக்கிறது அதை படித்து பாருங்கள் இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதை பதிவிட்டவர் "ஆன்மநேயன் கதிர்வேல் " ஐயா அவர்கள். அவரிடம் தொடர்புகொண்டு தியானம் செய்யும் வழிமுறையை தெரிந்துகொண்டு செய்துவாருங்கள் நன்றி. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
Rate this:
Share this comment
Cancel
sudharshana - Aukland ,நியூ சிலாந்து
01-ஜன-201815:17:03 IST Report Abuse
sudharshana சீக்கிமாக வந்துவிடும் எந்த க்குறைவுகளும் நீங்க நாளாகிறது மனம் தளராதீர்கள் . இறைவனிடம் மட்டுமே நம்பிக்கை வைத்து பிரார்த்தனை யில் இருங்கள் ஆண்டவர் தாமே உங்களுக்கு நல்ல வழியை காட்டி நல்ல வாழ்க்கை திரும்ப வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
s.sadhasivam - chennai,இந்தியா
31-டிச-201712:38:01 IST Report Abuse
s.sadhasivam I analysed the names of people who are subjected to depression. If I tell them, it will hurt other people who are bearing those names. There are many I'll effects for them apart from depression. Interestingly, the psychologists names who treat the patients of depression also are similar to names of depressed people.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X