திண்ணை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

ஜன.,1,1970ல், 'குமுதம்' இதழில், தன் புத்தாண்டு செய்தியாக, எழுத்தாளர், ஜெயகாந்தன் தெரிவித்திருந்தது:
புத்தாண்டுகள் எல்லாமே நம்பிக்கை தருவன. அடுத்த புத்தாண்டு வருகிற வரை இந்த ஆண்டை தான் நம்பி வாழ்தல் வேண்டும். இந்த ஆண்டில் எனக்கு வயது, 36; வழக்கம் போல் பல சிறுகதைகளும், ஓரிரு நாவல்களும் நிச்சயம் எழுதுவேன். ஒரு படம் தயாரிக்கும் திட்டமும் உண்டு. அது, என் முந்தைய படைப்புகளிலிருந்து, மாறுபட்டிருக்கும். அதை, 'ஷார்ட் பிலிம்'மாகத் தயாரிக்க தான் என்னிடம் வசதி உண்டு. இதுவும் ஒரு புத்தாண்டு நம்பிக்கை!
இம்மாதிரியான நம்பிக்கை தான் எல்லா மனிதரையும் வாழ வைக்கிறது; நம்பிக்கை நிறைவேறுவது இரண்டாம் பட்சம்; ஆனால், நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை; அடித்தளம்!
எவ்வளவு தான் சிறப்பானதாயிருந்த போதிலும், முந்தைய ஆண்டு என்பது இறந்த காலம் தான்; எவ்வளவு தான் குழப்பமானதாக இருந்தாலும், இந்த ஆண்டு தான் எதிர்காலமும், நாம் எதிர்கொள்ள வேண்டிய காலமும் ஆகும். எனவே, புதிய நம்பிக்கைகளுடன் இந்த ஆண்டை எதிர்கொள்வோம்.
ஒவ்வொரு நாளின் உதயமும், நம்பிக்கையின் எழுச்சியாகவே மலர்கிறது. என் வீட்டு வாசலில் எப்போதும் ஒரு ரோஜா மலர்ந்திருக்கிறது; வந்து பாருங்கள். எல்லா வீடுகளின் முன்னாலும் எப்போதும் ஓர் இனிமை மலர்ந்திருக்கிறது; ஆழ்ந்து கவனியுங்கள்!
நேற்று வரை, விடிவே இல்லையா என்று தனிமையில், ரகசியமாக பெருமூச்செறிந்த ஒரு கன்னிப் பெண்ணுக்காக, இன்று கெட்டி மேளம் முழங்குகிறது. இந்த நல்ல செய்தியை இப்போது தனிமையில் பெருமூச்செறிந்து நிற்கிற கன்னிப் பெண்ணுக்கு சொல்வதை விட, நல்ல பணி உங்களுக்கு வேறு என்ன இருக்கிறது!
இதைத்தான் நான் செய்கிறேன். அதோ அந்த கூரையின் மீது ஏறி நின்று, இறுமாப்புடன் இந்த உலகைப் பார்த்து, நம்பிக்கையோடு கொக்கரிக்கிறது, செந்நிறக் கொண்டை கோழி.ஆனால், சில நண்பர்களின் பார்வை மட்டும் குனிந்தே போயிருக்கிறதே!
ஒடெட்டா என்ற நீக்ரோ மாது சொல்கிறாள்...
நீ உன்னையே பார்
நீ சர்வ வல்லமை வாய்ந்தவன்
நீ சர்வ வல்லமை பொருந்திய
உலகத்தின் ஓர் அங்கம்
எனவே, நீ சர்வ
வல்லமை வாய்ந்த ஆத்மா!
தன்னையும், காலத்தையும் நம்புவதை தவிர, இந்த வாழ்க்கையில் பயனுள்ள, அர்த்தமுள்ள காரியம் வேறில்லை.
பகைமையும், வெறுப்பும், வஞ்சனையும், ஏமாற்றும்,
பழைய நைந்து போன பிசாசுகள்!
நம்பிக்கை ஒன்று தான் எப்போதும் புதிதாய், ஒளிமிக்கதாய், மகிழ்ச்சி தருவதாய் உள்ள ஒரே ஆயுதம்; மருந்து; மந்திரம்!

ஒரு மசால் வடையில், எவ்வளவு சத்து இருக்கிறது என்பது குறித்து, பழைய, 'நல்வழி' இதழில் வெளியான குறிப்பு:
சுமார், 62 கிராம் எடையுள்ள மசால்வடையில்...
புரோட்டீன் - 6.3 கிராம்
கொழுப்பு - 9.6 கி.,
கார்போஹைட்ரேட் - 17.3 கி.,
தாது உப்புகள் - 1.5 கி.,
நார் சத்து - 0.3 கி.,
சுண்ணாம்புச் சத்து - 0.01 கி.,
பாஸ்பரஸ் - 0.09 கி.,
இரும்புச்சத்து - 2 மி.கி.,
- மொத்த கலோரிகள் - 180 மில்லி கிராம்!

தன் பத்திரிகையில், கருத்தடையை வலியுறுத்தி எழுதியதற்காக, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார், அன்னிபெசன்ட் அம்மையார். இது நடந்தது, 90 ஆண்டுகளுக்கு முன். அப்போது, கருத்தடை செய்து கொள்வது, சட்ட விரோதமாக இருந்தது.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.