புதிய நோக்கியா 6 : ரெட்மி, ஓப்போவை ஓரம் கட்டுமா?!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் எ.எம்.டி., குளோபல் நிறுவனம் 2017ல் வெளியிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களில், மிட் ரேஞ்ச் விலையில், நோக்கியா பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடல், நோக்கியா 6! ஆனால், அதே நேரத்தில் ரெட்மி மற்றும் ஓப்போ நிறுவனங்களும் இதே பிரிவில் புதிய அம்சங்களுடன் பல மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன. இந்த நிலையில், அதிக வரவேற்பை பெற்ற நோக்கியா 6 மாடலில், கூடுதலாக சில அம்சங்களை சேர்த்து, புது பொலிவுடன், ஜனவரி மாதத்தில் வெளியிடுகிறது நோக்கியா நிறுவனம். இதுவரை வெளிவந்த நோக்கியா மாடல்களில் இல்லாத வடிவமைப்பு, நோக்கியா 6 மாடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மென்மையான உலோக வெளிப்புறத்துடன், பல வண்ண பேக் கேஸுடன் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போனின் தடிமனும் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி மற்றும் ஓப்போ நிறுவனங்களின் சில பட்ஜெட் போன்களில் இருப்பது போல, இரண்டு பின்புற கேமரா இருக்கலாம் என்று சொல்லப்படும் தகவல் இன்னும் உறுதியாகவில்லை. மேலும் இது ஸ்நாப்டிராகன் 630 அல்லது 660 புராசஸர், 4ஜி.பி., ரேம் மற்றும், 32 ஜி.பி., அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இருக்கும். உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஆப்ஷன், ஹைப்ரிட் இரட்டை சிம் கார்டு ஆப்ஷன் இருக்கும். ஆனால், ஆண்ட்ராய்டு நூகத் இயங்குதளத்தில் எந்த மாற்றமும் இல்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.