ரப்னே பனாதி ஜோடி (ஹிந்தி)
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

அன்னைக்கு எனக்கு கல்யாணம். ஆடிப் பாடி சந்தோஷமா இருந்தேன். அப்போ தான் விபத்துல அவர் இறந்துட்டாருங்கிற தகவல் வந்தது. விதியை நினைச்சு மனம் நொந்து போயிருந்தப்போ என் அப்பா சொன்னார்.
'இதோ பாரு டானி, வாழ்க்கையில சில உறவுகளை நாம ஏற்படுத்திக்குவோம்; சில உறவுகளை கடவுளே உண்டாக்கித் தருவார். அப்படி கடவுளா உனக்கு தர்ற உறவு தான் இந்த சுரீந்தர்!'
சுரீந்தர் எங்க அப்பாகிட்டே படிச்ச மாணவர். ரொம்ப ஒழுக்கமானவர். அதிகமா பேச மாட்டார். சுமாரான உடைகள் தான் அணிவார். மொத்தத்துல எந்த ஈர்ப்பும் இல்லாத ஒரு சாதாரண மனிதர். 'என்னால உங்களுக்கு நல்ல மனைவியா நடந்துக்க முடியும்; ஆனா, ஒருபோதும் காதலை தர முடியாது'ன்னு அவர்கிட்டே நான் சொன்னேன். எந்தவித சலனமும் இல்லாம தலையாட்டி ஏத்துக்கிட்டார்.
சலிப்பா போயிட்டு இருந்தது வாழ்க்கை. அப்போ தான் ராஜ் வந்தார். ரொம்ப குதுாகலமானவர். அவர் பக்கத்துல இருக்கும் போது நான் ரொம்ப சந்தோஷமா உணர்ந்தேன். ஒருநாள், என்னை அவர் காதலிக்கிறதா சொன்னப்போ, 'என் மனசுல அன்பு வத்திப் போச்சு. என்னால யாரையும் காதலிக்க முடியாது'ன்னு சொன்னேன்.
அதுக்கு அவர், 'அன்பு கிடைச்சா தான் அன்பை கொடுப்பேன்ங்கிறது அன்பே கிடையாது'ன்னு சொன்னார்.
அடுத்த நாள் அந்த உண்மை எனக்கு தெரிய வந்தது. ஆமா, இவ்வளவு நாள் என் சோகத்தை, வெறுமையை சந்தோஷமா மாத்தின ராஜ் வேற யாருமில்ல; என் கணவர் சுரீந்தர் தான்! சுரீந்தரா என்கிட்டே வெளிப்படுத்த முடியாத காதலை ராஜ் வேஷத்துல செய்திருக்கார். அப்புறம்...
என்ன அப்புறம்; மனைவியோட காயங்களுக்கு மருந்தா இருக்குற கணவனை எந்த பெண்தான் நேசிக்காம இருப்பா?

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.