ஒரு ஊர்ல ஒரு பாட்டி!
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

'ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை நேரம். எங்க குடியிருப்புல யாரும் எழுந்திரிக்கலை. வாசல் கேட்டுல பூட்டு. எப்படியாவது வியாபாரத்துக்கு போயே ஆகணும். என்ன பண்றது? ஆள் உயரம் இருக்கிற மதிலுக்கு பக்கத்துல, டூவீலர் ஒண்ணு இருந்திருக்கு.

'அவ்வளவு தான்; தடதடன்னு அது மேலே ஏறி, மதிலை தாண்டி குதிச்சு போயிட்டாங்க!' - தன் பேத்தி, தன் சாகசங்கள் பற்றிச் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் சீதா பாட்டிக்கு வயது, 103!
'இப்போ கொஞ்ச நாளா தான் காது சரியா கேட்க மாட்டேங்குது. இதை கழட்டிட்டா கண்ணும் மங்கலாத் தான் தெரியுது!' மூக்கு கண்ணாடியை சேலைத் தலைப்பில் துடைத்தபடியே பேசும் பாட்டிக்கு, தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி பூர்வீகம். தஞ்சை சுற்றுவட்டாரத்தில், 'வளையல் பாட்டி' என்பது இவர் அடையாளம். 22 வயது முதல் இந்த வியாபாரம்.

கைராசி பாட்டி
'பாட்டிகிட்டே வளையல் போட்டுக்கிட்டா உடனே திருமணமாகும்; சீக்கிரம் வாரிசு உண்டாகும்னு எல்லாரும் நம்புறாங்க. அதனால, சுற்றுவட்டாரத்துல யார் வீட்டுல விசேஷம்னாலும், இவங்களை கூப்பிட்டு தான் முதல்வளையல் போடச் சொல்வாங்க!' என்கின்றனர் பாட்டியை அறிந்தவர்கள்!
கண்ணாடி வளையல், ஸ்டிக்கர் பொட்டு, சிறு அணிகலன்கள் நிறைந்திருக்கும் ஒரு கூடையையும், வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்ட அட்டைப் பெட்டியையும் சுமந்தபடி, தினமும் வியாபாரத்திற்கு கிளம்பும் வளையல் பாட்டிக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள்; இரண்டு டஜன் பேரன் - பேத்திகள்!

பாட்டிடா...
'தனியா நடந்து போனா கொஞ்சம் தள்ளாடுவேன். ரெண்டு கைகள்லேயும் ஏதாவது சுமை இருந்துச்சுன்னா தடுமாறாம நடந்திடுவேன். இப்பவும், 10 தேங்காய்களை ஒத்தையில சுமந்துட்டு வந்திடுவேன் தெரியுமா?' பெருமையாய் தன் பலம் சொல்லும் பாட்டி, 'இந்த வலிமைக்கு என்ன காரணம்?' எனக் கேட்டால், 'கஞ்சி சோறும், காய்கறிகளும், கீரைகளும் தான்' என்கிறார்.

உழைச்சு பிழைக்கணும்!
சீதா பாட்டிக்கு யாரையும் நம்பி வாழ்றது பிடிக்காதாம்! 'அதனால தான், இப்பவும் நான் உழைச்சிட்டு இருக்குறேன். அரசு தர்ற முதியோர் உதவித்தொகையையும் வேண்டாம்னு மறுத்துட்டேன். என்ன ஒண்ணு, இந்த வயசுலேயும் நான் வளையல் வித்து உழைச்சு சாப்பிடுறேன். ஆனா, என்கிட்டேயும் சிலர் திருடி வாழுறாங்க!' என, வேதனைப்படுகிறார் பாட்டி. 'அப்படிப்பட்டவங்களை என்ன செய்வீங்க?' எனக் கேட்டால், 'என் வயசு வரைக்கும் நல்லா வாழணும்னு வாழ்த்திட்டு வந்திடுவேன்' என்கிறார்.

வளையல் பாட்டியின்...
ஏக்கம்: ஒரு தடவையாவது காசிக்குப் போயிட்டு வந்திடணும்.

அறிவுரை: தினமும் கொஞ்ச துாரமாவது நடந்து பழகுங்க செல்லங்களா!

வேண்டுதல்: ஆண்டவா... எல்லாருக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடு!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.