அதிகம் கவர்ந்த 'அஞ்சு' | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
அதிகம் கவர்ந்த 'அஞ்சு'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
00:00

ஆதார்-பான் கார்டு இணைப்பு, 'பிட்காயின்', ஜியோ அலைபேசி புக் செய்வது, ஜி.எஸ்.டி., வரி தாக்கல், கேஷ் பேக் பெறுவது ஆகியவை 2017ல் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தன.

ஆதார்
மத்திய அரசு, ஆதார் மூலமாக பல்வேறு சமூக நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதற்காக ஆதாருடன் வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் உள்ளிட்டவற்றை 2017 டிச., 31க்குள் இணைக்க வேண்டும் என தெரிவித்தது. மக்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
11.5 லட்சம் போலி பான் கார்டுகள் ரத்தாகின. 14 கோடி பான்கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. தற்போது கால அவகாசம் 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

'பிட்காயின்'
'பிட்காயின்' என்பது ஒரு மெய்நிகர் கரன்சி. 2009 ஜன., 3ல் ஜப்பான் கம்ப்யூட்டர் இன்ஜினியர் சந்தோஷி நகமோடோவால் உருவாக்கப்பட்டது. எந்தவொரு கட்டுப்பாட்டு அமைப்பும்இன்றி, சாப்ட்வேர் குறியீடுகள் மூலம், 'பிட்காயின்' உள்ளிட்ட, மெய்நிகர் கரன்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2017 துவக்கத்தில், 1,000 அமெரிக்க டாலராக இருந்த 'பிட்காயின்' மதிப்பு, ஆண்டு இறுதியில் 10 ஆயிரம் டாலரை தாண்டியது. 'பிட்காயின்' மொத்த மதிப்பு, 16,700 கோடி டாலரை தாண்டி உள்ளது.

இலவச 'ஜியோ' அலைபேசி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இலவச ஜியோ '4ஜி ஸ்மார்ட்' அலைபேசியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவு ஆக. 24ல் தொடங்கியது. ரூ.1,500 டெபாசிட் செய்து பெற்றுக்கொள்ளலாம். இத்தொகையை 3 வருடத்திற்கு பின், திரும்ப பெற்று கொள்ளலாம். இதனால் பலர் முன்பதிவு செய்தனர். அலைபேசியை 'டிவி'யில் இணைத்து, இணைய சேவை மூலம் வீடியோ, படங்களை பார்த்து கொள்ளலாம். ரூ.153க்கு இலவச அழைப்புகள், குறுஞ்செய்தி, அன் லிமிடெட் இணைய சேவை என பல சலுகைகள் வழங்கப்பட்டன.

'கேஷ் பேக்' சலுகை
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்து, இ-வாலட், டெபிட் மற்றும் கிரடிட் கார்டு, உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து. இதில் 'பேடிஎம்' முக்கிய பங்கு வகித்தது. 'கேஷ் பேக்' உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. தற்போது பல நிறுவனங்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன.

ஜி.எஸ்.டி., வரி
நாட்டில் பயன்பாட்டில் இருந்த வணிக வரி, மதிப்புக்கூட்டு வரி, கலால் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளுக்குப் பதிலாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) ஜூலை 1ல் நாடு முழுவதும் அமலானது. அறிமுக விழா, பார்லிமென்ட்டின் மைய மண்டபத்தில் நடந்தது. 2002ல் வாஜ்பாய் தொடங்கி வைத்த இத்திட்டம் நிறைவேறியது. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.,யில் 5%, 12%, 18%, 28% என நான்கு விதமான வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., பதிவு செய்யும் முறை, கணக்கு தாக்கல் செய்வது எப்படி உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு மத்திய அரசு, பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X