குரு பார்வை
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
00:00

இந்திய விமானப் படையில் சேர பார்வை குறைபாடு இருப்பவர் விண்ணப்பிக்க முடியுமா?

குரு, பரமக்குடி
நமது ராணுவப் படைகளில் சேர சில அடிப்படை உடல்தகுதி மற்றும் பார்வை திறன் தகுதிகள் தேவை. விமானப் படையில் சேர ஒவ்வொரு கண்ணிலும் 6/12 குறைந்த பட்ச Corrected vision தேவை. நல்ல பார்வை இருக்கும் கண்ணில் 6/6 திறனும் சுமாரான கண்ணில் 6/18 என்பதாக திறன் வேண்டும். இது தவிர கண் பார்வை தொடர்பாக சில அடிப்படை கூடுதல் குறிப்புகளும் படைகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முழு தகவல்களை இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.

இன்ஜினியரிங் முடித்திருப்ப வருக்கான அப்ரெண்டிஸ் வாய்ப்பு எதுவும் உள்ளதா?
கவிதா, கோவை
இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்திருப்பவருக்கான அப்ரெண்டிஸ் வாய்ப்பை சில பொதுத் துறை நிறுவனங்கள் அவ்வப்போது அறிவித்து வருகின்றன. Board of Apprenticeship Training ( Southern Region) என்னும் அமைப்பு தான் இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. தற்போதும் கூட அப்ரெண்டிஸ் வாய்ப்பு உள்ளது. இதற்கு 'வாக் இன்' எனப்படும் நேரடியாக தேர்வு முறைகளில் கலந்து கொள்வது அவசியம்.
இதற்கான முகவரி :
HKES Polytechnic, Beside MSI Degree College, Aiwan-E-Shahi Area, Shambhognlli, Kalaburgi - 585102, Karnataka
அந்த அமைப்பின் ஈமெயில் முகவரி இதோ: hkesboyspolyglb@yahoo.com.
வரும் ஜனவரி 5 ம் தேதி காலை பத்து மணிக்கு இந்த 'வாக் இன்' துவங்கும். முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி
<http://www.boatsr-apprentice.tn.nic.in/CSKN17.pdf>

உளவியல் எனப்படும் சைக்கலாஜி படிப்பு பற்றி கூறவும்.
ஜென்சி, கடலுார்
உளவியல் எனப்படும் மனது சம்பந்தமான படிப்பு. மனது வேலை செய்யும் விதத்தை படிப்பதே இந்தப் படிப்பு. உணர்வுகள், நோக்கங்கள், மனதின் தன்மை போன்றவற்றை இந்தப் படிப்பு ஆய்வு செய்கிறது. கவுன்சலிங் எனப்படும் ஆலோசனைகளை இந்தப் படிப்பை முடித்து பயிற்சி செய்பவர்கள் தருகிறார்கள். இதன் மூலமாக நம்மின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மீண்டும் கொண்டு வருகின்றனர். இதற்கு மருத்துவப் படிப்பு தேவையில்லை. எனினும் பல ஆண்டுகள் படிப்பின் பின்தான் இவர்களால் இதில் திறன் பெற முடிகிறது.
பிளஸ் 2 நிலையிலும், பட்டப்படிப்பு நிலையிலும் பட்ட மேற்படிப்பு நிலையிலும் இதை படிக்க வேண்டும். இதில் சோசியல் சைக்கலாஜி,
சைல்ட் சைக்கலாஜி, எஜுகேஷனல் சைக்காலஜி, எக்ச்பெரிமேண்டல் சைக்கலாஜி என பல பிரிவுகளில் படிப்புகள் தரப்படுகின்றன. இதில் பெரும் தகுதியை விட திறன்களின் அடிப்படை யிலேயே ஒருவர் பிரகாசிக்க முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.