வங்கி அதிகாரி ஆகலாம் 500 பணியிடங்கள்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
00:00

பொதுத்துறை வங்கிகளில், சிண்டிகேட் வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இதன் தலைமையகம் கர்நாடகாவின் மணிப்பாலில் உள்ளது. இவ்வங்கியில் 500 புரொபஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவை, மணிப்பால் பல்கலையின் ஓராண்டு Post Graduate Diploma in Banking and Finance course என்ற சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வயது:
2017 அக்., 10 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.10.1989 முதல் 1.10.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

படிப்பு விபரம்: மணிப்பால் பல்கலை நடத்தும் இந்த ஓராண்டு படிப்புக்கான கட்டணம் ரூ.3.50 லட்சம். இதற்கு வங்கிக்கடன் வசதிகளும் உள்ளன. படிப்பில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுபவர்கள் சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெறமுடியும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நெல்லை உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் தேர்வு மையம் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் : ரூ.600.

கடைசி நாள்: 2018 ஜன., 17.

விபரங்களுக்கு: www. syndicatebank.in/Recruitment Files/PGDBF_ADVERTISEMENT_2018-2019_27122017.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.