காதல், கத்திரிக்காய்க்கு குறும்படமா? | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements
காதல், கத்திரிக்காய்க்கு குறும்படமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2018
00:00

''மக்களுக்கு பிடிச்சத குடுக்குறது கலையோட வேலை இல்லை, மக்களுக்கு தேவையானதை தான் குடுக்கணும்'' என்கிறார் ஜெர்மனி, கொரியா திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய முதல் குறும்படம் 'டூ - லெட்'டின் இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி.
அவருடன் ஒரு நேர் காணல்...

* உங்கள் சொந்த கதை...
பிறந்தது மதுரை. படித்தது சென்னையில் மீடியா ஆர்ட்ஸ். இயக்கியது பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள். வாங்கியது திரைப்பட விழாக்களில் பல விருதுகள். வேலை பார்த்தது 'இடம் பொருள் ஏவல்' படத்தில் இயக்குனர் சீனு ராமசாமியிடம்... உதவியாளராக.

* மதுரைக்காரர் நீங்கள்... அதென்ன பெயரில் 'ஹாஷ்மி'?
டில்லியைச் சேர்ந்த வீதி நாடக கலைஞர், எழுத்தாளர் 'சப்தர் ஹாஷ்மி'யின் நினைவாக அப்பா வச்ச பெயர். அன்பே சிவம் படத்துல கமலோட 'நல்லசிவம்' கேரக்டர் இவரோட பிரதிபலிப்பு தான்.

* சர்வதேச திரைப்பட விழா எப்படி வசமானது
'டூ - லெட்'டிற்கு முன்னாடியே நான் இயக்கிய மவுன மொழி, அறம், களவு குறும்படங்கள் எல்லாமே பல திரைப்பட விழாக்களில் விருது வாங்கி என்னை அடையாளப்படுத்தி விட்டன. ஆனா 'டூ - லெட்' தான் என்னை ஜெர்மனி, கொரியா சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கூட்டிட்டு போச்சு. அது மட்டுமில்லாம, பெரும்பான்மை மக்கள் கிட்டேயும் என்னை கொண்டு போய் சேர்த்திருக்கு. அதற்கு காரணம், அந்தப்படம் பேசியிருக்கற விஷயம்.

* டூ - லெட்டில் அப்படி என்ன தான் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்க, கூட்டுக் குடும்பமா...? சினிமாக் காரங்களா...? பேச்சுலரா...? திருநங்கையா...? இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொண்டு வாடகைக்கு வீடு தேடி கஷ்டப்பட்ட அனுபவம் எல்லோருக்குமே இருந்திருக்கும். எனக்கும் அப்படி ஏற்பட்ட அனுபவத்தின் பிரதிபலிப்பு தான் 'டூ - லெட்'. நாம் நாமாக இருப்பதால் நமக்கு நம் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எவ்வளவு கொடுமையானது தெரியுமா! அதனை சொல்லியிருக்கிறேன்

* இன்னும் தெரியப்படுத்த நினைப்பது...
மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும். அதற்கான ஒரு சிறந்த ஆயுதம் தான் குறும்படம். பல நாடுகள்ல இருந்து ஜெர்மனி திரைப்பட விழாவுக்கு வந்த 99 சதவீத குறும்படங்கள் அந்தந்த நாட்டு மக்களுடைய பிரச்னைகளை தான் பேசின. படைப்பாளிக்கு அத்தனை சுதந்திரம் உள்ள மீடியம். அது புரியாம நம்ம ஆளுங்க காதல், கத்தரிக்காய்க்கு எல்லாம் அதைப் பயன்படுத்திட்டு இருக்காங்க. அது மட்டுமில்லாம குறும்படம்ங்கறது சினிமாவுக்கான 'விசிட்டிங் கார்டு' னு ஒரு தப்பான லாஜிக்கும் இங்க இருக்கு. அத முதல்ல உடைக்கணும்.

* இன்ஸ்பிரேஷன்...
புதுப்பேட்டை படம் தான் என்னை சினிமாவுக்கு இழுத்துட்டு வந்துச்சு. அப்புறம் பாலுமகேந்திரா. இதுல ஸ்பெஷல் என்னன்னா, 'தமிழ் ஸ்டூடியோல' கொஞ்சநாள் வேலை பார்த்தப்போ பாலுமகேந்திராவை கடைசியா இன்டர்வியூ எடுத்த, பாக்கியமும் என்னையே சேரும்.

* இனி...
சினிமாவுலயும் வாடகைக்கு ஒரு 'வீடு' தேட வேண்டியது தான்.
வாழ்த்த 97898 95953

Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X