அனுபவம் : "டுவிஸ்டி டெயில்ஸ்” உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் செல்லங்களுக்கும்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜன
2018
00:00

உணவகங்களுக்கு செல்லும்போது, செல்ல நாய்களை உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை என்ற ஏக்கம் செல்ல நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு இருக்கும். அவர்களின் குறையை போக்குவதற்காக, செல்லப் பிராணிகளுடன் சேர்ந்து உணவருந்தவும், விளையாடவும் வாய்ப்பளிக்க, சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதுமையான உணவகம் தான், 'டுவிஸ்டி டெயில்ஸ்!'
உணவகத்தினுள் நுழையும்போதே, 'பப்பி லவ்' என்கிற வாசகத்தோடு சிறிய வீடு போன்றதொரு செட்டில், கருப்பும் வெள்ளையுமாக எட்டு நாய்குட்டிகள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றன. உணவருந்த வருபவர்கள் பொழுதைக் கழிப்பதற்காகவே, உணவக நிர்வாகத்தினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றனர். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நாய்க்குட்டிகளுடன் கொஞ்சி பொழுதைக் கழிக்கலாம்; இதற்கு கட்டணம் கிடையாது.
அடுத்ததாக உள்ள, 'டாக் சேம்பர்' வாடிக்கையாளர்கள் அழைத்துவரும் நாய்களை விளையாட விடுவதற்கான இடம். ஒரே சமையத்தில் பல நாய்கள் வந்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்தவும், விளையாட்டுக் காட்டவும், டிரெய்னர்களும் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு முறை வரும்போதும் புது அனுபவத்தை பெற, வாரம் ஒருமுறை டாக் சேம்பர் செட்டப்பை மாற்றி அமைக்கின்றனர்.
அடுத்ததாக வாடிக்கையாளர்களுடன், நாய்களும் அமர்ந்து சாப்பிடுவதற்கான 'டாக் கபே என்னும் இடம். வாடிக்கையாளர்களுக்கும், நாய்களுக்கும் தனித்தனி உணவுப்பட்டியல் வழங்குகின்றனர். ஸ்டாட்டர்ஸ், மெயின் கோர்ஸ் மற்றும் டெசர்ட்ஸ், பாஸ்தா என எல்லாமே நாய்களுக்கென பிரத்யேகமாக இருக்கிறது. அதேபோல் வாடிக்கையாளரின் நாய் என்ன சாப்பிடும், எதேனும் அலர்ஜி இருக்கிறதா என அதன் லைப் - ஸ்டைல் குறித்த கேள்விகளை கேட்ட பின்னரே, அதற்குரிய உணவைத் தயார் செய்கின்றனர்.
அடுத்ததாக வாடிக்கையாளர்களுக்கான ரெகுலர் ரெஸ்டாரன்ட். இதற்கு, 'ரெஸ்ட்ரோ கபே' என்று பெயர். இந்த மல்டி கியூசைன் ரெஸ்டாரன்ட்டின் உள் அலங்காரத்தை, முற்றிலும் ரெட்ரோ ஸ்டைல் பாணியில் டிசைன் செய்திருக்கின்றனர். காண்பதற்கு வீடு போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
டுவிஸ்டி டெயில்ஸ் உரிமையாளர் ரேகா பேசும்போது, “நான் நாய்களை என் குழந்தைகளாகத்தான் வளர்க்கிறேன். முன்பு பெங்களூரில் இருந்தேன். அங்கெல்லாம் நாய்களுக்கென இளைப்பாற இடம் இருக்கிறது. மற்ற நாடுகளிலும் இதுபோன்று இருக்கிறது. ஹாங்காங்கில் நாய்களுக்கென, 'பப்பி கபே' என தனியாக இருக்கிறது. சென்னையில் இப்படியான வசதி இல்லை என்று வருத்தப்படுவதைவிட, நாமே நாய்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் இளைப்பாற ஓர் இடத்தை ஏன் உருவாக்கக் கூடாது என்று யோசித்தேன். அப்படி உருவானதுதான் இந்த உணவகம்,'' என்கிறார்.
குழந்தைகளாக நீங்கள் பாவிக்கும் உங்கள் செல்லப் பிராணிகளுடன் உணவருந்திவிட்டு, விளையாடி பொழுதை கழிக்க, காலை, 11:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை இங்கு செல்லலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.