ஒரு ஊர்ல ஒரு பாட்டி!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2018
00:00

சென்னை, கோடம்பாக்கத்தில் இயங்கி வரும், 'அன்னை உள்ளம்' முதியோர் இல்லத்தில் வாழ்கிறார், 104 வயது தங்கம் பாட்டி.
இவரிடம் ஆசிர்வாதம் வாங்கிச் சென்றால் பிள்ளைப்பேறு, தாலி பாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல நற்காரியங்கள் நிகழும் என்கின்றனர் இவரை அறிந்தவர்கள்.
'ராமேஸ்வரம் சொந்த ஊரு. அப்பா இறந்ததுக்கு அப்புறம் குடும்பத்தோட சென்னைக்கு வந்துட்டோம். அப்போ, ராமேஸ்வரத்துல இருந்து இங்கே வர்றதுக்கு ரயில்ல, 10 ரூபாய் தான்! இந்தா... இந்த கோடம்பாக்கம் முழுக்க முள்ளு காடா தான் கிடக்கும். தங்கம் ஒரு சவரன், 30 ரூபாய். காலணாவுக்கு ஒருபடி அரிசி, ஒருபடி உளுந்து கிடைக்கும்!' தன் நினைவுகளை முக்கால் நுாற்றாண்டுக்கு முன் விரட்டி அனுபவம் பேசுகிறார் தங்கம் பாட்டி.

ஒரு கைப்பிடி சோறு
'ஒருகாலத்துல, சாப்பாடு பலகாரமெல்லாம் பிரமாதமா செஞ்சு விற்பேன். எனக்கு வருமானம் அது தான்! ஆனா, நான் எதையும் சாப்பிட மாட்டேன். இப்போ கூட, காலையில இரண்டு இட்லி மட்டும் தான். தயிர் சோறு ஒரு கைப்பிடி அளவு! பசிக்கு மேலே ஒரு பருக்கை அதிகமா சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க மாட்டேன்!' தன் ஆரோக்கியத்தின் ரகசியம் பேசும் தங்கம் பாட்டி, காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள்கள் வாசிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

'தங்க' தத்துவம்
'கொஞ்சம் கூன், தோல்ல சுருக்கம், மத்தபடி... நான் இன்னும் இளமையா தான் இருக்கேன். வயசு உடம்புக்குத் தானே தவிர மனசுக்கு இல்லையே!' தத்துவம் சொல்லும் தங்கம் பாட்டிக்கு உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர்.
'அம்மாவும் நானும் சம்பாதிச்சு தான் எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சோம். அம்மா போனதுக்கு அப்புறம் யாருக்கும் தொந்தரவு தராம நான் தனியா வந்துட்டேன். கல்யாணமும் பண்ணிக்கலை. ஆனா, நான் இங்கே என் தோழிகளோட சந்தோஷமா தான் இருக்கேன்!' - சிரிக்கிறார் பாட்டி; சிலிர்க்கிறது நம் மனது.

தங்கம் பாட்டியின்
பிரியத்திற்குரியவர்: தமிழ்க்கடவுள் முருகன்
அறிவுரை: எதுவும் நிரந்தரமல்ல!
பிரார்த்தனை: எல்லாரும் நல்லாயிருக்கணும்!

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.