ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 பிப்
2011
00:00

வேர்ட் 2010 இன்னும் சற்று வசப்படாத தொகுப்பாகவே உள்ளது. எனவே இந்த வாரம் தந்தது போல டிப்ஸ்களைத் தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-அ. கலையரசன், போடி.
இன்டர்நெட் இணைப்பில்லையேல், பரிதவித்திடும் நபர்களுக்கு, தொடர்ந்து இன்டர்நெட் பெற, உங்கள் முன் ஜாக்கிரதை டிப்ஸ்கள் மிகவும் உபயோகமானவை. ஆனால் செலவு அதிகமாகும் போல் உள்ளதே.
-சு. சிதம்பரம், மதுரை.
பலமுறை டேபிள்களை உருவாக்கி வந்திருக்கிறேன். செல்களுக் கிடையே இடைவெளி அமைப்பதை நீங்கள் தந்த டிப்ஸ்தான் கற்றுக் கொடுத்துள்ளது. நன்றி.
-நி. அனுபிரசன்னா, சென்னை.
அழகழகாய் அடிக்கோடுகள் அமைவது பார்க்க நன்றாக உள்ளது. அச்சில் சில வேளைகளில் பிசிரடிக்கிறது.
-ஜ. உசேன், விழுப்புரம்.
அலகு குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு நல்ல அறிவூட்டல். பாட நூல்களில் கூட இவ்வளவு தகவல்களும் ஒரு இடத்தில் கிடைப்பதில்லை. ஹேட்ஸ் ஆப் டு கம்ப்யூட்டர் மலர்.
-மா. சிக்கண்ணன், திருப்பூர்.
நீங்கள் தரும் தகவல்களைப் படிக்கையில், கம்ப்யூட்டர் வாங்குவதை ஒத்தி போட்டு, டேப்ளட் பிசி நன்றாக வரும் வரை காத்திருக்கும் முடிவிற்கு வர வேண்டியதுள்ளது. எனவே டேப்ளட் பிசி குறித்து உறுதியான தகவல்களைத் தரவும்.
-டி. கார்த்திகேயன், மதுரை.
உங்கள் இணைய தள கம்ப்யூட்டர் மலர் சூப்பர் தளமாகும். இதிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்.
-செந்தில் குமார், அபுதாபி. (இணைய தளத்தில்)
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் படங்களை இதுவரை இணைத்து வந்தோம். இனி சுழலும்படியும் அமைப்போம். கற்றுக் கொடுத்த தங்களுக்கு நன்றி.
-ஆ. சுரேஷ், பொறியியல் மாணவர்கள் சார்பாக, கிருஷ்ணன் கோவில்.
வை-பி குறித்து நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை. எதிர்பார்க்கும் இடங்களில் இணைப்பு மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் சில இடங்களில் வேகமாகக் கிடைக்கிறது. அந்த வகையில், செம்மொழி மாநாட்டின் போது, வை-பி மிகச் சிறப்பாகக் கிடைத்தது. என்.ஐ.சி. நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும்.
-டாக்டர் இ.முத்து கிருஷ்ணன், கோவை.
நல்ல இணைய தளங்கள் குறித்து தகவல் தரவும். மிகவும் உபயோகமாக இருக்கும். குறிப்பாக சமையல், சிறுவர்களுகானது நல்ல பயன் தரும்.
-ஆ. மீனாட்சி உமையாள், காரைக்குடி.
ஆபீஸ் 2010 குறித்த குறிப்புகள் சிறப்பாக இருந்தன. ஆபீஸ் தொகுப்பின் அனைத்து அப்ளிகேஷன் குறித்தும் டிப்ஸ் வழங்கவும்.
-என். சுரேஷ் குமார், திருப்பூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X