ஆர்கானிக் பால்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:00

பாக்கெட் உணவுகளால், ஆரோக்கியத்தை தொலைத்து விட்டவர்களுக்கு பிடித்த வார்த்தை, 'ஆர்கானிக்!'
காய்கறி, பழங்கள், தானியங்கள் என்று, இயற்கை உணவுகள் வந்து விட்ட நிலையில், 'ஆர்கானிக்' பசும் பால் விற்பனை செய்கிறார், சென்னையை சேர்ந்த அப்துல் ஷுகூர்.
இயற்கை விவசாயத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, கார்ப்பரேட் வேலையை துாக்கி எறிந்து, சமுதாய அக்கறையோடு, இப்பணியை மேற்கொண்டுள்ளார்.
திண்டிவனம், கீழ் பஜார் கிராமத்தில், ராத்தி, சாஹி, வால், கிர் மற்றும் தார்பார்க்கர் உள்ளிட்ட வட மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த, 176 நாட்டு மாடுகளை கொண்ட பண்ணை வைத்துள்ளார், அஹமத் என்பவர்.
இயற்கை சூழ்நிலையில், பசும்புல், வைக்கோல், புண்ணாக்கு போன்ற தீவனங்கள் சாப்பிட்டு வளரும் இப்பண்ணை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பாலை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அப்துல். இது, ஏ2 ரக பாலாகும்.
கறந்த பாலின் தன்மை மாறாமல், திண்டிவனத்திலிருந்து அப்படியே கொண்டு வந்து சென்னையில் விற்கிறார், அப்துல்.
ஆரம்பத்தில் ஐந்து, பத்து என்று இருந்த இவரது வாடிக்கையாளர்கள், மிகக் குறுகிய காலத்தில், முன்னுறை தாண்டியுள்ளனர்.
இவரிடம் பால் வாங்கி பயன்பெற்றோர், அதன் தரம் மற்றும் அப்துலிடம் தென்பட்ட உண்மைத் தன்மை காரணமாக, அவரிடம் மேலும் சில பொருட்களைக் கேட்டனர். அதன் அடிப்படையில், பொள்ளாச்சியிலிருந்து மரச்செக்கால் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளையும், ஈரோட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஆர்கானிக் பருப்பு வகைகளையும் நியாயமான விலையில் விற்பனை செய்கிறார்.
தற்போது, மலிவு விலையில், மக்களுக்கு சத்தான கீரை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
இப்படி, எதைச் செய்தாலும் மக்கள் நலனிற்கு ஏற்றதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்துலுக்கு உதித்தது ஒன்றும் புதிதல்ல... சென்னை மழை வெள்ளத்தின் போது, களத்தில் இறங்கி, மக்களுக்கு உதவியவர்களில் இவரும் ஒருவர்!
அடுத்த முறை பால் வாங்குவதற்கு முன், அப்துலை அழையுங்கள். அவரது மொபைல் எண்கள்:
89399 91573 - 98401 89403.

எல்.முருகராஜ்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
09-மார்ச்-201813:12:04 IST Report Abuse
Ajaykumar அருமை
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
05-மார்ச்-201808:21:06 IST Report Abuse
Chanemougam Ramachandirane இவர் இன்னும் படித்த இன்சர்களுக்கு வழி காட்டணும் ஒஸ்ழைப்பவர்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
04-மார்ச்-201808:55:05 IST Report Abuse
Manian இவர் வளம் பொங்குக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X