நல்லதை செய்து நல்லதை பெறுவோம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:00

எத்தனை தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தான் எனும் அகங்காரம், கோபம் இருந்தால், அவர்கள் கீழ் நிலையை அடைவர் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்:
அவந்தி நாட்டை, சுலபன் எனும் அரசர் ஆண்டு வந்தார். அவர் மனைவி சுலபை; மன்னர் கல்வியறிவில் சிறந்தவர் என்றாலும், பதவியும், அதன் மூலம் கிடைத்த போகங்களும் அவர் மனதை மயக்கின.
'மனிதனாக பிறந்ததே, இந்த போகங்களை அனுபவிப்பதற்காகத் தான்; இதை விட்டு, பாவமாவது, புண்ணியமாவது...' என்று மனம் போன போக்கில் வாழ்ந்தார். அத்துடன், தெய்வ நம்பிக்கை கொண்டவர்களை இகழ்ந்து, அவமானப்படுத்தவும் செய்தார். ஆனால், அவர் மனைவி சுலபையோ, கணவனே கண் கண்ட தெய்வம் என, வாழ்ந்ததோடு, அனைவரிடமும் மிகுந்த அன்பு காட்டினாள்.
ஒருநாள், அரசவைக்கு, மதுசூதனன் எனும் முனிவர் வந்தார். அவருடைய தவக்கோலத்தையும், துறவு ஒழுக்கத்தையும் கண்ட சுலபன், அவரை இழிவுபடுத்தி பேசினார். 'மன்னா... ஒன்றை பிடிக்கவில்லையென்றால், ஒதுங்கியிருக்க வேண்டுமே தவிர, அறியாமல் அதை இகழக்கூடாது. இந்த பொது நாகரிகம் கூட தெரியாத நீ, எருதாக மாறக் கடவாய்...' என, சாபம் கொடுத்தார், முனிவர்.
உடனே எருதாக மாறினார், சுலபன்.
தன் கணவருக்கு நேர்ந்த துயரத்தை கண்டு மனம் வெதும்பிய சுலபை, 'முனிவரே... நீங்கள் தவசீலராய் இருந்தும், அரசர்களின் குணங்களை புரிந்து கொள்ளாமல், பொறுமை இழந்து சாபம் கொடுத்ததால், நீங்கள் கழுதையாகக் கடவது...' என, சாபம் கொடுத்தாள்.
கற்புக்கரசியான அவள் சாபம் பலிக்கவே, கழுதையாக மாறத் துவங்கிய முனிவர், 'தவறு செய்த கணவனை கண்டிக்காமல், என்னை கழுதையாக சபித்த நீ, புல் சுமந்து விற்கும் பெண்ணாக கடவது...' என்று, பதில் சாபம் கொடுத்தார்.
அதனால், புல் சுமந்து விற்கும் பெண்ணாக மாறினாள், சுலபை.
பல ஆண்டுகளுக்கு பின், இவர்கள் மூவரும் சந்தித்தனர்.
புல் விற்கும் பெண் வைத்திருந்த அருகம்புல்லை, தன் வாயால் பற்றி இழுத்தது, எருது. அதன் வாயில் இருந்த அருகம்புல்லை பிடுங்கியது, கழுதை. மூவருக்கும் சிறு களேபரம் மூள, அங்கிருந்தோர் மூவரையும் விரட்டினர்.
அப்போது, கழுதை வாயில் இருந்த புல், வழியில் இருந்த விநாயகர் மீது விழுந்தது. அந்த அருகம்புல்லை, மூவரும் அர்ச்சித்ததாக ஏற்றுக்கொண்ட விநாயகர், மூவருக்கும் முக்தியை வழங்கினார்.
தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் நாம் செய்யும் நற்செயல்களை வழிபாடாக ஏற்று, அருள் புரியும், தெய்வம். அதனால், நல்லதை செய்வோம்... விநாயகர் அருளை பெறுவோம்!

பி.என்.பரசுராமன்


அறிவோம் ஆன்மிகம்!
பஞ்சநாத ஸ்தலங்கள் எங்குள்ளன?
நாதம் என்றால் பாட்டு; இறைவனை உளமுருக பாடி வணங்குவதே மிகவும் உயர்ந்தது என, பக்தி நுால்கள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில், பாடி வணங்க, உயர்ந்த ஸ்தலங்கள் இந்தியாவில் ஐந்து உள்ளன. அவற்றை, 'பஞ்சநாத ஸ்தலங்கள்' என்று அழைக்கின்றனர். அவை, விஸ்வநாதம், சோமநாதம், வைத்தியநாதம், ஜகந்நாதம் மற்றும் ராமநாதம். இந்த சிவஸ்தலங்களில், ராமநாதம் என்பது, ராமேஸ்வரமாகும்; மற்றவை உத்தரபிரதேசத்தில் உள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
09-மார்ச்-201813:18:41 IST Report Abuse
Ajaykumar ஜெகந்நாதம் ஒரிஸ்ஸாவில் உள்ள ஜெகநாதர் ஆலயம் தானே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X