ஓ மை ப்ரெண்ட் (தெலுங்கு)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மார்
2018
00:00

பெண்மையை ஆண்மை உணர... அழுது புரளணுமா; அடம் பிடிக்கணுமா; அவகாசம் கொடுக்கணுமா?
பள்ளிப் பருவத்துல இருந்தே சந்துவும் நானும் ப்ரெண்ட்ஸ். அவன் இல்லாம என் வாழ்க்கையோட எந்த ஒரு நிகழ்வும் நடந்ததில்லை. அவனுக்கும் அதேமாதிரி தான்! நாங்க குழந்தைகளா இருக்கிறவரைக்கும், எங்களோட இந்த அன்பை நட்பா புரிஞ்சுக்கிட்ட இந்த சமூகம், நாங்க வயதுக்கு வந்ததுக்கு அப்புறம் வேற மாதிரி பார்த்தது. நாங்க கவலைப்படலை. சிரிச்சுக்கிட்டே அதை ரொம்ப சுலபமா கடந்துட்டோம்.
ஒரு கட்டத்துல, என்னை கல்யாணம் பண்ணிக்க இருந்த உதய்கிட்டே இருந்தும் அப்படி ஒரு வார்த்தை வந்தப்போ எங்களால தாங்கிக்க முடியலை. அம்மாகிட்டே சொல்லி நான் அழுதேன். ஆனா, அம்மாவுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குனு தெரிஞ்சதும் உடைஞ்சுட்டேன்.
'அக்கா தம்பியோ, இல்ல... அண்ணன் தங்கையோ ஒண்ணா போனா கூட இந்த சமூகம் தப்பா தான் நினைக்கும்னு சொல்றீங்களே... அவங்க அப்படி நினைக்கிறதுக்காக உண்மையான உறவுகள் அப்படி மாறிடுமா என்ன?' சந்து இப்படி கேட்டும், உதய் உட்பட யாருடைய மனசும் மாறலை. என் திருமணம் நடக்கணுங்கிறதுக்காக நானும் சந்துவும் பிரிஞ்சுட்டோம்.
மூணு வருட திருமண வாழ்க்கையில சந்துவைப் பத்தி ஒரு வார்த்தை கூட நான் உதய்கிட்டே பேசலை. அது அவரை உறுத்தியிருக்கு. திடீர்னு ஒருநாள் சந்துவை என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினார். கடந்த காலத்துக்காக மன்னிப்பு கேட்டார்; கண் கலங்கினார்.
உதய்ங்கிற ஆண்மைக்கு, சந்தனாங்கிற இந்த பெண்மை கொடுத்த அவகாசம் வீண் போகலை!
பெண்புத்தி பின்புத்தியா என்ன?

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X