புதிதாய் வந்த மொபைல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 பிப்
2011
00:00

சென்ற டிசம்பரில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் போன்களை அறிவித்தன. ஜனவரி முதல் தொடங்கி அவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கி யுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமான சில மொபைல்களை இங்கு காணலாம்.
1. எல்.ஜி. பி 520 (P 520): பார் வடிவ மாடலாக 120 கிராம் எடையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 108.9x55.9x12.9 மிமீ. ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 9 மணி நேரம் பேசலாம். நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனில் டி.எப்.டி. ரெசிஸ்டிவ் திரை 2.8 அங்குல அகலத்தில் வழங்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 2.0 மெகா பிக்ஸெல் கேமரா, 15 எம்பி நினைவகம், 4 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.ஸ்லாட், A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., வீடியோ பைல் இயக்கம், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டன்ட் மெசேஜ், இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், ஸ்டிரீயோ எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், டாகுமெண்ட் வியூவர், வாய்ஸ் மெமோ, யூனிட் கன்வர்டர், வேர்ல்ட் கடிகாரம், அலாரம், ஸ்டாப் வாட்ச், மொபைல் திருட்டுக்கு எதிரான ட்ரேக்கர் ஆகிய அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. ஆயிரம் முகவரிகளை கொள்ளக் கூடிய அட்ரஸ்புக், பெறப்பட்ட, டயல் செய்யப்பட்ட, மிஸ் ஆன அழைப்புகள் தலா 100 பதியப்படுகின்றன. எல்.ஜி. அப்ளிகேஷன் ஸ்டோர், என்.டி.டி.வி. ஆக்டிவ், ஆப்பரா மினி 5, டேட்டா வாலட், டிக்ஷனரி, இ-காமிக்ஸ் ஆகிய அப்ளிகேஷன்கள் பதிந்து தரப்படுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,400.
2. சாம்சங் சாட் 335: இந்த பிப்ரவரியில் வெளியான சாம்சங் சாட் 335 ஏற்கனவே வெளிநாடுகளில் பிரபல மானது. 93 கிராம் எடையில் 111.2x61.2x12மிமீ பரிமாணத்தில் பார் டைப் போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலம் கொண்டது. 2 எம்பி கேமரா தரப்பட்டுள்ளது. நான்கு பேண்ட் அலைவரிசையில் செயல்படுகிறது. இதன் நினைவகம் 60 எம்பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் 4 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. ஒரு சிம் இயக்கம் கொண்டது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெயில் வசதி கிடைக்கிறது. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வை-பி, A2DP இணைந்த புளுடூத், அக்ஸிலரோ மீட்டர் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,040.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X