சந்தையில் பார்த்த பட்ஜெட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2011
00:00

சில வேளைகளில் பேசுவதற்கு மட்டும் கூடப் போதும் எனக் குறைந்த விலையில் மொபைல் போன்களைத் தேடுவோம். வேலைக்காரர்களுக்கு, அடிக்கடி பொருட்களைத் தொலைக்கும் பழக்கம் உள்ள பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு, குறைந்த காலம் பயன்படுத்திப் பின் அழித்துவிட எனப் பலவற்றை இது போன்ற காரணங்களாகக் கூறலாம். ஒரு சிலர், எதற்கு இவ்வளவு பணம் போட்டு மொபைல் போன்; ஓரளவிற்கு வசதிகள் இருந்தால் போதும் என்று அடுத்த நிலையில் போன்களைத் தேடுவார்கள். இந்த நோக்கத்துடன் மொபைல் போன் சந்தையில் வந்த போது சில போன்கள் கண்ணில் பட்டன. அவற்றை இங்கு காணலாம்.
1. எல்.ஜி. ஏ 165: இந்த போன் ஒரு பார் டைப் போன். எடை 81 கிராம் மட்டுமே. இதன் பரிமாணம் 110 x 47.5 x 14.1 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால், 14 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். நான்கு பேண்ட் அலைவரிசையில் செயல்படுகிறது. இதன் வண்ண டிஸ்பிளே திரை 5.1 செமீ. 0.3 மெகா பிக்ஸெல் கேமரா 4 எக்ஸ் டிஜிட்டல் திறனுடன் உண்டு. போன் மெமரி 3.9 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. 2ஜிபி கார்ட் வரை கொள்ளும். இதன் முக்கிய அம்சம் இரண்டு சிம்களை இது இயக்குவதே. வீடியோ பைலையும் இது இயக்கும். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். செய்தி வசதி உண்டு. எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. புளுடூத் மூலம் பைல்களைப் பரிமாறலாம். அக்ஸிலரோமீட்டர் சென்சாரும் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2.740.
2. சாம்சங் இ 1172: நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த பார் வடிவ போன், 72 கிராம் எடையில், 108.7 x 46.1 x 14.1 மிமீ அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் வண்ணத்திரை 1.52 அங்குல அகலத்தில் உள்ளது. இதில் 1 எம்பி மெமரி தரப்பட்டுள்ளது. இதிலும் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். கருப்பு மற்றும் பிரவுண் வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் கேமரா தரப் படவில்லை. எஸ்.எம்.எஸ். மட்டும் சில வரையறைகளுக்குள் இயக்கப்படுகிறது. எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 1,365.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivabharath - madurai,இந்தியா
13-மார்ச்-201106:58:52 IST Report Abuse
sivabharath this site is very useful for the users
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X