அவளே சரணம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2018
00:00

இரு விழிப் பார்வையில் இரு ஜோடி கால்கள், வயல் வரப்பில் தடம் பிறழாமல் நடக்கும் அந்த அதிசயத்தை நம் கேமரா அள்ளி விழுங்கி முடித்த கணத்தில்...

'பார்த்தீங்கள்ல... 'வரப்புல கூட என் கணவன் வழுக்கி விழுந்துடக் கூடாது'ன்னு இத்தனை அக்கறையா என் பிரேமா என்னைப் பார்த்துக்குறப்போ, இந்த வாழ்க்கையெல்லாம் எனக்கு ஒரு விஷயமா!' - பார்வையற்ற, 33 வயது விக்னேஷ் இப்படி கேட்கும் போது, அவரை அன்பு பொங்க பார்த்தபடியே கம்பீரமாய் நின்றிருந்தார், 26 வயது பிரேமா.
நெல்லை மாவட்டம், பாபநாசம், முத்துநகர் முதலியார்பட்டியில் குருவியின் கூடாய் இருக்கிறது அம்மா ஸ்டுடியோ. அதன் முன்னாள் பொறுப்பாளர் விக்னேஷ்; இந்நாள் பொறுப்பாளர் பிரேமா விக்னேஷ்.

என்ன ஆச்சு விக்னேஷுக்கு?
ரெண்டு பசங்க, சந்தோஷமான குடும்பம்னு வாழ்க்கை நல்லாத் தான் போயிட்டு இருந்தது. இவரோட தொழில் நேர்த்தி காரணமா, ஊர்ல என்ன விசேஷம்னாலும் இவரைத்தான் போட்டோ எடுக்க கூப்பிடுவாங்க. நாலு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள், 'பார்வை மங்கலா தெரியுது பிரேமா'ன்னு சொன்னார். அடுத்த ஒரே வருஷத்துல, மொத்த பார்வையும் போயிடுச்சு. 'பார்வை நரம்புகள் செயலிழப்பு'ன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. வாழ்ந்தாகணுமே... அதான், கேமராவை நான் துாக்கிட்டேன்!

ஆக... விதியை ஜெயிச்சிட்டீங்க; அப்படித்தானே விக்னேஷ்?
இல்லேங்க... முயற்சியும், துணிச்சலும் இருக்குறதால, விதியோட போராடிட்டு இருக்குறோம். அறுவை சிகிச்சை மூலமா ரெண்டாவது பிரசவம் முடிஞ்ச ஒரே வாரத்துல, கடும் வலியோட, 12 மணி நேரம் நின்னு போட்டோ எடுத்தா என் பிரேமா; இவ என் சாமிங்க!
காற்றில் வேகமாய் துழாவி, மனைவியின் கரம் பற்றி கண்ணீர் கசிகிறார் விக்னேஷ். அவரது கரத்தை ஆதரவாய் இறுக்கிக் கொள்கிறார் பிரேமா.

நிறைவான வாழ்க்கைக்கு எது அவசியம்?
'கிராமத்துல தீப்பெட்டி கம்பெனியிலே வேலை செஞ்சுட்டு, சைக்கிள் கூட ஓட்டத் தெரியாம இருந்த நான், இப்போ ஒரு ஸ்டுடியோவை நிர்வகிக்கிறேன்னா அதுக்கு உங்க அன்புதான் காரணம்'னு, என் பிரேமா அடிக்கடி சொல்வா! இந்த அன்புதான் வாழ்க்கைக்கு அவசியம்; நான் நிறைவா உணர்றேன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X