ரவுத்திர வீணை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2018
00:00

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
மூன்றாம் பாலினத்தவர் நலனிற்காக நல வாரியம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள்னு பல விஷயங்களை செய்றதா சொல்ற நீங்க, என் கேள்விக்கு மனசாட்சியோட பதில் சொல்லுங்க. திருநங்கைகள்னா யாசகம் கேட்பாங்க; பாலியல் தொழில் பண்ணுவாங்கன்னு இந்த சமூகம் கண்ணை மூடிட்டு பேசுற சூழல்ல, நல்லபடியா படிச்சு வாழ்க்கையில உயரணும்னு நான் ஆசைப்படுறது தப்பா?
அம்மாவுக்கு கூலி வேலை. ஆனாலும், பிளஸ் டூ தேர்வுல 74 சதவீத மதிப்பெண்கள் வாங்கி, கடந்த கல்வியாண்டுல டிப்ளமா நர்சிங் படிப்புக்காக அரசு மருத்துவக் கல்லுாரியில விண்ணப்பிச்சேன். 'மூன்றாம் பாலினம்'ங்கிற ஒரே காரணத்துக்காக என்னை நிராகரிச்சுட்டாங்க. பெண் பாலினப் பிரிவுல தனியார் கல்லுாரியில இடம் கிடைச்சது. ஆனா, அங்கேயும் இதே பிரச்னை. 'மூன்றாம் பாலினத்தவரை செவிலியர் படிப்புக்கு அனுமதிக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க!
மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு போனேன். தமிழக நர்சிங் கவுன்சிலை கை காமிச்சாங்க. அவங்க, இந்தியன் நர்சிங் கவுன்சிலை கை காமிச்சாங்க.
அங்கே போனா, 'மூன்றாம் பாலினத்தவரை எல்லா கல்வி நிறுவனங்களிலும் பயில அனுமதிக்க வேண்டும்னு, 2014ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் சொல்லிடுச்சு. இனி, உங்க தமிழக அரசு தான் முடிவு செய்யணும்'னு கை விரிச்சிட்டாங்க.
உங்க அரசோட என்னால போராட முடியலை. இந்த விரக்தியில, 'அரசு நர்சிங் கல்லுாரியில இடம் கொடுங்க: இல்ல, கருணைக் கொலைக்கு அனுமதி கொடுங்க!'ன்னு, சுகாதாரத்துறை செயலர்கிட்டே மனு கொடுத்தேன். அதை கொடுத்தும் மூணு மாசமாச்சு; பதிலில்லை!
என்னய்யா நடக்குது இங்கே?
- தகுதியிருந்தும் அரசு செவிலியர் பட்டயப் படிப்பிற்கான இடம் மறுக்கப்பட்ட, 22 வயது திருநங்கை தமிழ்செல்வி, வேலுார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X