நங்கையர் திலகம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
00:00

தென் மண்டல அளவில் இரண்டாவது இடம்; தேசிய அளவில் ஆறாவது இடம்! துப்பாக்கி சுடுதலில் சாதித்து வரும் கோமதியின் தற்போதைய இலக்கு, 2020ல் நடக்கவிருக்கும் பாராலிம்பிக் போட்டிகள்.

அன்றாடம் அதிகாலையில் துப்பாக்கி சுடும் பயிற்சி, காலை, 9:00 மணிக்குப் பின் எழுதுபொருள் விற்பனையகத்தில் பகுதி நேர வேலை, மதிய நேரத்தில் வீடுகளுக்கு அரிசி மூட்டை சப்ளை, மாலையில் அம்மாவின் அரிசி மாவு விற்பனைக்கு உதவி என, ஓய்வின்றி இயங்குகிறார் சென்னை, அசோக்நகரின் மிகச்சிறிய வீட்டில் வாழும், 34 வயது கோமதி. இவருக்கு உறுதுணையாய் ஒரு, 'மூன்று சக்கர' வண்டி!

ஆம்... கோமதி ஒரு மாற்றுத்திறனாளி!

'பாரா ஷூட்டர்' கோமதி ரொம்ப பாவம் தான் இல்ல?
இல்லையே... என் வாழ்க்கையை நானே வழிநடத்துறேன். பிழைப்பை தேடி நிற்காம ஓடுறேன். எனக்குன்னு ஒரு இலக்கை உருவாக்கிட்டு அதை அடைய முயற்சி பண்றேன். கொஞ்சம் கொஞ்சமா என் வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திட்டு வர்றேன். இப்படி தன்னம்பிக்கையோட வாழ்ற நான், எதுக்காக என்னை பாவமா நினைக்கணும்; என் ஊனத்தைப் பார்த்து என்னை அப்படி நினைக்கிறவங்க தான் பாவம்!
பிறவியிலேயே கால் ஊனப்பட்ட கோமதிக்கு எல்லாமும் தாய் ராஜேஸ்வரி தான்! 'கருவாய் என்னை வயிற்றில் சுமந்தவள், என் பள்ளி காலம் முழுக்க தன் முதுகில் சுமந்தாள்' என்று நெகிழ்ச்சியோடு, தாயின் பெருமை சொல்கிறார் கோமதி. தான் இட்லி விற்றாலும், பொருளாதார பாடத்தில் மகளை பட்டம் பெற வைத்திருக்கிறார் இந்த தாய். ஏழு ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்து விட்ட நிலையில், திருமண வயதில் இருக்கும் தங்கைக்காகவும், 64 வயது தாய்க்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார் கோமதி!

ஒருவேளை இந்த ஊனம் இல்லாதிருந்தால்...?
'மூச்சு விடுறது மட்டும் தான் வாழ்க்கை'ன்னு நானும் முடங்கியிருப்பேன். ஒரு சராசரி பெண்ணா குடும்பம், குழந்தைன்னு என் வாழ்க்கையும் ஒரு வட்டத்துக்குள்ளே சிக்கியிருக்கும். 'சாதிக்கணும்'ங்கிற எண்ணம் வந்திருக்காது; இந்த, 'பாரா ஷூட்டர்' அடையாளமும் கிடைச்சிருக்காது.
சபாஷ் கோமதி!

கோமதியின் புதுப்புது அர்த்தங்கள்
இலக்கு - முயற்சிக்கான எரிபொருள்
விதி - மாயவலை
அம்மா - வேர்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X