அக்கரை அதிசயம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2018
00:00

தன் 16ம் வயதில் தாய்மாமனுக்கு கழுத்தை நீட்டுகிறார் ரெங்கநாயகி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நான்கு குழந்தைகளுக்கு தாய். முதலாவது குறைப் பிரசவத்தால் உயிரிழக்க, அடுத்ததாக ஒரு பெண் குழந்தை; அதற்கடுத்து மனநலம் குன்றிய ஒரு பெண்; கடைக்குட்டியாக ஒரு ஆண் குழந்தை. 25 ஆண்டுகளுக்குப் பின் கணவரை புற்றுநோய் கொண்டு போக, அதற்கடுத்த சில ஆண்டுகளில் மூன்று குழந்தைகளுக்கு தாயான மூத்த மகளும் விடைபெறுகிறாள்; அவள் பின்னாலேயே மருமகனும்!
இதுதான் ரெங்கநாயகியா என்றால், நிச்சயமாக இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் தன் விதியை தானே எழுதினாள் பாருங்கள்; அவள் தான் ரெங்கநாயகி.

புதிதாய் பிறந்தேன்
அவர் போன பின்னாடி மூணு குழந்தைகளோட கடலுார், வடமூர் கிராமத்துக்கே வந்துட்டேன். அப்பா கூட விவசாயம் பார்த்தேன். அப்பா போன பின்னாடி முழு நிலத்தையும் தனி ஆளா நிர்வாகம் பண்ணினேன். அப்போ தான் அந்த சம்பவம். வீராணம் ஏரியில இருந்து எங்க பாசனத்துக்கு தண்ணி கொண்டு வர்ற ராதா வாய்க்கால் முழுக்க புதர் மண்டி கிடந்தது. ஊர்க்காரங்க உதவியோட, 9.60 கி.மீ., நீளத்துக்கு சுத்தம் பண்ணி ஊருக்கு தண்ணி கொண்டு வந்தேன். வாழும் போதே எனக்கு இன்னொரு பிறப்பை கொடுத்த நிகழ்வு அது!

வாழ்க்கை திருப்தியா இருக்குதா?
வாய்க்கால் சுத்தம் பண்ண நான் கிளம்பினப்போ, 'பொட்ட கோழி கூவி பொழுது விடிஞ்சிருமா?'ன்னு கேலி பண்ணினாங்க. இப்போ ஊருக்கே விடியலை காமிச்சுட்டேன். மனநலம் சரியில்லாத சித்தியை தாயா இருந்து பார்த்துக்குற அளவுக்கு என் மூத்த பேத்தியை நல்ல குணத்தோட வளர்த்திருக்கேன். இந்த 65 வயசுலேயும் உழைச்சு சாப்பிடுறேன். ஊரு நல்லதுக்காக நிறைய யோசிக்கிறேன். போதும்... என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்சிருச்சு!

பிடிச்ச பழமொழி ஒண்ணு சொல்லுங்களேன்!
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

ஆசைகள் 1000
* வீராணம் ஏரி தந்த ராஜதித்த சோழனுக்கு சிலை!
* விவசாயிகளுக்கு கண்ணீர் இல்லா வாழ்க்கை!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X