அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:00

பா.துர்கா, சென்னை: ஆண்கள், தங்கள் தொப்பையையும், பெண்கள் தங்கள் உடல் பருமனையும் குறைக்க முயற்சி செய்வதில்லையே... ஏன்?
'இனி, என்ன இருக்கு? கல்யாணம் முடிந்து, குழந்தை, குட்டி பெத்தாச்சே... இனி யார் நம்மை கவனிக்க போகின்றனர்... எதற்காக உடலை வருத்தி பயிற்சிகள் செய்ய வேண்டும்...' என்ற தவறான நினைப்புதான் இதற்குக் காரணம்! 'சிக்' என்று இருந்தால், நோய்க்கான வாய்ப்பே இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!


* ஆர்.அஜித், பொள்ளாச்சி: வேகம், வீரம், விவேகம்... வாழ்வில் முன்னேற எது அவசியம்?
மூன்றாவது... அது இருந்தால், எப்போது வேகம் காட்ட வேண்டும், எங்கு, யாரிடம் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது புரியும். வேகமும், வீரமும் இருந்து, விவேகம் இல்லையென்றால், முன்னேற்றம் என்பது பகல் கனவு தான்!


பி.ஜெயக்குமார், திண்டுக்கல்: ஜாதகப் பொருத்தம், நாள் பொருத்தம், நேரப் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்கள் கூட, கோர்ட்டில் போய் நிற்கிறதே...
பதினெட்டு, பத்தொன்பதாம் நுாற்றாண்டுகளில், நீங்கள் கூறிய பொருத்தங்கள் மட்டுமே பார்த்தால் போதுமானதாக இருந்தது. திருமணம் ஒர்க் - அவுட் ஆனது. ஆனால், இந்த, 21ம் நுாற்றாண்டில் முக்கியமான, பொருத்தமான,'மனப் பொருத்தத்தை' விட்டு விடுகின்றனரே...


* வெ.ராம்குமார், திண்டிவனம்: உலகிலேயே, இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதிகமாமே... காரணம் எதுவாக இருக்கும்?
மோசமான சாலையில், மோசமான வாகனங்கள், பொறுப்பே இல்லாத வாகன ஓட்டிகள், விபத்து நடக்க காரணமாக இருந்த ஓட்டுனர், சுலபமாக தப்ப ஏதுவாக உள்ள உளுத்துப் போன சட்டங்கள்!இந்தியாவில் நடக்கும், 100 சாலை விபத்துகளில், 18 மரணத்தில் முடிகின்றன என, ஒரு சர்வே கூறுகிறது!


எம்.மைக்கேல்ராஜ், திருவள்ளூர்: சம்பாதிப்பதில், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் யார் முன்னணியில் இருக்கின்றனர்?
நம்ம ஊரில் நோய்க்கும் பஞ்சமில்லை; வழக்குகளுக்கும் குறைவில்லை... புரிந்து கொண்டிருப்பீர்களே!


எம்.ரங்கநாதன், ஊட்டி: இன்றைய வேலையை இன்றே முடிக்காமல், 'நாளைக்கு' என தள்ளிப் போடுகின்றனரே சிலர்!
அந்த, 'சிலர்' ஒரு நாளும், ஒரு வேலையை கூட முடிக்க மாட்டார்கள். முடிவெடுக்கத் தெரியாத, - முடியாத -தைரியமில்லாத நபர்கள் தான் இப்படி செய்வர். இவர்களை நம்பி எந்த ஒரு செயலிலும் இறங்கி விடக் கூடாது!


வே.தேவஜோதி, காஞ்சிபுரம்: ஒரு திறமையும் இல்லாமல் கர்வத்துடன் அலைபவர்கள் பற்றி...
இவர்களிடம் உள்ள அடிப்படைப் பிரச்னை- தாழ்வு மனப்பான்மை; தம்மிடம் எந்தத் திறமையும் இல்லையே... எதைத் தொட்டாலும் கரியாகிறதே என்ற குறை! இதை மற்றவர்களிடம் மறைக்க, ஏன் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள, 'கர்வ' போர்வையை போர்த்திக் கொண்டு அலைகின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X