சதுர்த்தி டிப்ஸ்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சதுர்த்தி டிப்ஸ்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:00

கொழுக்கட்டை மாவு கிளறும்போது, தண்ணீருடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்தால், கொழுக்கட்டை விரியாது
* அரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்தால், கொழுக்கட்டையின் சொப்பு வெடிக்காமலும், விரியாமலும் இருக்கும்
* சுண்டலில், தேங்காய் துருவலுக்கு பதிலாக, கொப்பரையை துருவி, வறுத்து போட்டால் கெடாமல் இருக்கும்
* அப்பம் செய்ய, மாவு சலிக்கும்போது, அதில், கனிந்த வாழைப்பழத்தை சிறிதளவு மசித்து கலந்தால், அப்பம் சுவையாக இருக்கும்
* விநாயகர் பூஜையின்போது, படைக்கும் கொழுக்கட்டைக்குள் ஓர் அச்சு வெல்ல துண்டை சொருகி வேக வைத்தால், பிள்ளையாருக்கும் பிடிக்கும்; குழந்தைகளுக்கும் பிடிக்கும்
* கொழுக்கட்டை மாவு கிளற, கொதிக்க வைக்கும் நீரில், சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டால், மாவு கெட்டியாகாமல் இருக்கும்
* கிளறிய கொழுக்கட்டை மாவு ஆறியதும், கையில் எண்ணெய் தடவி, சொப்பு பிடித்தால், அழகாக வரும்.
* குலோப்ஜாமுன் மிக்சை பிசைந்து, அதில் கொழுக்கட்டை பூரணத்தை வைத்து மூடி பொரித்து, ஜீராவில் முக்கி எடுத்தால், வித்தியாசமான கொழுக்கட்டை ரெடி!
* கோதுமை மாவு, வெல்லம் கரைத்து அப்பம் செய்யும்போது, மாவை நன்றாக ஊற விடுங்கள்; அப்பம் மிருதுவாக இருக்கும்.


வண்ண வண்ண கொழுக்கட்டை
கொழுக்கட்டை மாவுடன், காய்கறி சாறு சேர்த்து விதவிதமான வண்ணங்களில் கொழுக்கட்டைகள் செய்யலாம்; இது, மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட!
பீட்ரூட் வேக வைத்த தண்ணீரை சேர்த்து செய்தால், 'பிங்க்' நிற கொழுக்கட்டையும், புதினா அல்லது கறிவேப்பிலையை அரைத்து செய்தால், பச்சை நிற கொழுக்கட்டையும், கேரட்டை வேக வைத்து அரைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் துாள் கலந்தால், மஞ்சள் நிற கொழுக்கட்டை என, வண்ண வண்ண கொழுக்கட்டை தயார்!


முதல் விநாயகர் கோவில்!
தமிழகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில், துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் என்கிறது, வரலாறு.
கி.மு., 2300 ஆண்டுகளுக்கு முன், கோமார வல்லபன் என்ற அரசன், நர்மதை நதிக்கரையிலிருந்து, ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து, யாகம் நடத்த முடிவு செய்தான். 999 பேர் மட்டுமே வந்திருக்க, மன்னன் தவித்தபோது, விநாயகரே வேத பண்டிதராக வடிவெடுத்து யாகம் நடத்த உதவியதால், 'ஆயிரத்தெண் விநாயகர்' என்று பெயர் பெற்றார். இங்கு, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விளங்கும் இக்கோவிலில், சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

எஸ். சங்கீதா

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X